அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 15 ஆகஸ்ட், 2014

சீமானின் பிரபாகரன் புராணம்

சீமானை இன்று வரை நாம், ஒரு நடிகனாக, இயக்குனராக மற்றும் ஈழ உணர்வாளராக ஏற்க முடியும். ஆனால் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளியாக ஏற்க முடியாது. புலத்தில் இருந்து, சமாதான காலப் பகுதியில் வன்னிக்கு வருவோரை சாதாரணமாக சந்திப்பது மாதிரித் தான், எம் தேசியத் தலைவரையும் சீமான் சந்திப்பதற்கு வாய்பு கிடைத்தது. சீமான் வன்னிக்கு வந்த காலத்தில், இரண்டு முறை தான் தேசியத் தலைவரை பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. இரண்டு முறையும் விருந்து அளித்த பொழுது, பக்கத்தில் இருந்த முக்கிய போராளிகள் இன்று வரை உயிரோடு தான் இருக்கின்றார்கள். சீமான், எம் தேசியத் தலைவர் தன்னிடம் "ஜங்கரன் இன்டநஷனலைக்கு" படம் செய் என்று சொன்னதாக, பொய்யான தகவல்களை பிரச்சாரமாக செய்வதை அவர்கள் கேள்விப்படும் போது ஏன் சீமான் இப்படியெல்லாம் செய்கின்றார் என்று வேதனையடை கின்றார்கள்.



விடுதலைப் புலிகள் அமைப்பின் ஒரு பிரிவான "நிதர்சனம்" திரைப்படத் துறையின் சார்பாக வன்னியில் தயாரிக்கப்பட்ட "எல்லாளன் நடவடிக்கை" திரைப்படத்திற்கு உதவி செய்வதற்காக சிறு குழுவுடன் வன்னிக்கு இரண்டாவது முறையாக வருடம் 2008இல் வந்தவர் தான் சீமான் அவர்கள். ஒரு மாத காலமாக அங்கு தங்கி இருந்தார்.

"எல்லாளன் நடவடிக்கை" பட்டமளிப்பு விழாவிற்கு அடுத்த நாள் அரசியல்துறையை சேர்ந்த போராளி அலெக்ஸ் வீரச்சாவடைந்தார். அதன் பிறகு நிதர்சனத்தில் வேலை செய்து கொண்டிருந்த அலெக்ஸ்சின் மனைவியை தான் திருமணம் செய்யப் போகின்றேன் என்று கடந்த 5 வருடங்களாக பகல் கனவு கண்டார்நடிகை விஜயலட்சுமியுடன் மறைமுகமாக கள்ளத் தொடர்பை வைத்திருந்த படியால் அலெக்ஸ்சின் மனைவி சீமானின் விருப்பத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார்.

அதன் பிறகு அதிமுக முன்னாள் மறைந்த சபாநாயகர் காளிமுத்துவின் இரண்டாம் மனைவியின் மகளான கயல்விழியை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணத்திற்கு பிற்பாடு தான் அதிமுகவை ஆதரிக்க முடிவெடுத்தார். முதலில் செல்வி ஜெயலலிதாவை சீமான் படுமோசமாக திட்டித் தீர்த்தார்.

ஈழத்தில் எந்த போராளியின் திருமணத்திலும் தேசியத் தலவரின் புகைப்படங்களை வைத்து திருமணம் நடப்பதில்லை. ஆனால் சீமான் தேசியத் தலைவரின் திருமண புகைப்படத்தை வைத்து, நான் தான் அடுத்த கட்ட தலைவர் என்ற கற்பனையோடு சினிமாப் படம் மாதிரி தன் திருமணத்தையும் செய்தார். தற்பொழுது தேசியத் தலைவரின் புகைப்படத்தை உண்டியலில் ஒட்டி "நாம் தமிழர் கட்சி" பணமும் சம்பாதிக்கின்றார்.

சீமானிடம் முக்கியமாக இருப்பது, மைக் இல்லாமல் எவ்வளவு நேரம் என்றாலும் தன்னைப் பற்றி புகழ்ந்து பேசக்கூடிய சத்தமான குரல். ஆனால் அவரின் எல்லாப் பேச்சையும் அவதானிதால், பெரிய வித்தியாசம் ஒன்றும்மில்லை. இவரின் பேச்சை விட நடிகர் வடிவேலு சொல்லும் கருத்து நன்றாக இருக்கும்.

விடுதலைப் புலிகள் அமைப்பை பொறுத்தவரையில் மது மற்றும் மாது பழக்கத்தில் இருக்கும் போராளிகள் தண்டனைக்குரியவர்கள் என்னும் கோட்பாடு. அதன் அடிப்டையில் தான் உலகமே வியக்கும் அளவுக்கு விடுதலைப் புலிகள் அமைப்பு கட்டுக்கோப்போடு இருந்தார்கள்.

எம் தேசியத் தலைவர் எமக்கு கற்பித்த பாடம். எதிரியாக இருந்தாலும் நாம் கண்டிப்பாக மரியதையாக பேச வேண்டும் பொது இடங்களில். வன்னியில் நடந்த ஒரு உண்மைச் சம்பவம். அரசியல் போராளிகளை தலைவர் சந்தித்து உரையாடல் செய்யும் பொழுது, சக போராளி "சங்கரி" என்று சொன்னதற்கு தண்டனையும் கொடுக்கப் பட்டது. "ஆனந்தசங்கரி ஜயா" என்று சொல்லும் படி கண்டிப்போடு சொன்னார். ஏன் என்றால், வயதிற்கு மரியாதை கொடுக்க வேண்டுமென்று.ஆனால் சீமான் மது மற்றும் மாது இல்லாமல் இருக்க மாட்டார் என்பது எல்லோருக்கும் தெரிந்த விடையம்.

சாதி மற்றும் சமயம் என்பது விடுதலைப் புலிகள் அமைப்பை பொருத்த வரையில் எல்லோரும் சமம். ஆனால் சீமானின் வாயில் வரும் வார்த்தைகள் மற்றவர்களை கேவலப் படுத்தும் சொற்கள் மற்றும் சீமான் சாதி சமயம் பார்த்துத் தான் அரசியல் செய்கின்றார் தமிழ் நாட்டில்.

இந்த வாரம், தமிழ் நாட்டில் "கத்தி" திரைப்படக் குழுவினர் சீமானை சந்தித்தார்களாம். சீமான் "கத்தி" திரைப்படத்துக்கு, தான் ஆதரவு கொடுப்பதாகவும் மற்றும் "லைக்கா மொபைல்" நிறுவனத்தை தான் எதிர்க்கப் போவதில்லையென்றும் உறுதி மொழி அழித்துள்ளாராம்.

முட்டாள் "கத்தி" தயாரிப்பாளர்களே, சீமான் என்ற நபர் யார் ?
"நாம் தமிழர் கட்சியை நடத்தினால், சீமான் சொல்வதை ஈழத் தமிழர்களும் மற்றும் புலத்தில் இருக்கும் தமிழர்களும் கேட்பார்களா ?

நடிகர் விஜயேயின் மனைவி ஈழப் பெண் என்றாலும், எம் இனத்தை அழித்த சிங்களத்தோடு சேர்ந்து கை கோற்பவர்கள் யாராக இருந்தாலும் எமக்கு எப்பொழுதும் எதிரி தான்.

கடிநொடியாகிய நாம், நடிகர் விஜய் மற்றும் அந்தப் படத்தில் நடித்தவர்களை எதிரியாக பார்க்கவில்லை. உங்களின் தவறு "கத்தி" படத்தில் இல்லை. ஆனால் நீங்கள் தெரியாமல் "ஜங்கரன் இன்டனஷனல்" நிறுவனத்தினரின் பணத்திற்கு மயங்கி சிங்களத்தின் வலைக்குள் விழுந்து விட்டீர்கள்.

"கத்தி" திரைப்படம் திரைக்கு வராவிட்டால், தமிழ் நாட்டில் இருக்கும் எந்தக் கலைஞரும் பாதிக்கப் போவதில்லை. உங்கள் சம்பளத்தை முன் கூட்டியே வாங்கியிருப்பீர்கள், அது நல்லது. ஆனால் சிங்கள தயாரிபாளர்கள் முழுமையாக தோல்வியடைய வேணும் என்பது கடிநொடியின் விருப்பம்எதிர் காலத்தில் "ஜங்கரன் இன்டநஷசனல்" மற்றும் "லைக்கா" நிறுவனத்தினர் தயாரிக்கும் எந்தப் படத்திலும் தெரிந்தும் எந்த நடிகரும் நடிக்காதீர்கள். ஏன் என்றால், புலத்தில் இருக்கும் ஈழத் தமிழர்களும் தமிழ் நாட்டு தமிழர்களும் கண்டிப்பாக சிங்களத்தின் நிறுவனத்தை எதிர் காலத்திலும் எதிர்ப்பார்கள்.

சீமானின் இந்த மாற்றம் மற்றவர்களிற்கு அதிசயமாக இருக்கலாம். ஆனால் கடிநொடிக்கு இது புதிதல்ல.
சீமான், நடிகர் விஜய் மற்றும் ஜங்கரன் இன்டநஷனல் ஆகியவர்களை எதிர்க்க மாட்டார். ஏன் எனில், விஜய்யின் ஆதரவில் 2016இல் தமிழ் நாட்டு முதல்வராக வராலாம் என்று சீமான் பகல் கனவு போடுகின்றார்.

"ஜங்கரன் இன்டநஷனல்" கருணாவின் பிணாமிகளாக புலத்தில் இருக்கும் சிலர் தேசியத்தின் சொத்துக்களை தங்கள் வசம் வைத்திருக்கின்றார்கள். அவர்களும், கனடாவில் இருக்கும் "BABU CATERING" உரிமையாளர் பாபுவினூடாக காய் நகர்த்தியிருக் கின்றார்கள். பாபு தமிழ் நாட்டில் வைத்திருக்கும் சொத்துக்களை பராமரிப்பது காமடி நடிகர் சீமான் தான்.

சீமான் யார் ?

ஈழ விடுதலைக்காக ஆயுதம் ஏந்தி போராடியவரா அல்லது ஈழ விடுதலையில் தன் குடும்ப உறுப்பினரை இழந்தவரா ?
அவருக்கு நாம் ஆதாரம் காட்டுவதற்கு. கத்தி மற்றும் புலிப்பார்வை படங்களை சீமான் ஆதரித்தால். அதன் பிறகு அவர் முழுமையாக வீட்டிற்குள் அடைந்து இருக்கும் வழியை கடிநொடி ஏற்ப்படுத்தும். அதற்கு சீமான் தயார் என்றால், நாமும் தயார்.

முள்ளிவாய்கால் வரை எம் மக்களை குண்டு வீசி அழித்த இலங்கை வான்படையின் உலங்கு வானூர்த்தியில் "கத்தி" தயாரிப்பாளர்கள் பயணம் செய்த புகைப்படத்தை பார்த்த பிறகும் சீமானுக்கு வேறு எந்த ஆதாரம் தேவையாம் நாம் பல ஆதாரங்களை தெரியப் படுத்தியுள்ளோம். சிங்களம் எப்படி தமிழ் நாட்டிற்குள் ஊடுறுவுகின்றது என்பதை.
கத்தி படம் சம்பந்தமாக பல ஆதரங்களை வெளியிட்டுள்ளது. ஆனாலும் யாரிடமும் இல்லாத ஒலிப்பதிவு எம்மிடம் இருக்கின்றது. கத்தி தயாரிப்பாளர்களான கருணாமூர்த்தி "ஜங்கரன்" மற்றும் சுபாஸ் "லைக்கா" இவர்கள் நாமல் ராஜபக்சாவோடு விருந்தில் இருக்கும் போது பேசியது .

(நன்றி, கடிநொடி)

தமிழ் இனம் வாழ்க. தமிழன் வாழ்க

(இந்தக் கட்டுரையில் பிரபாகரன், புலிகள் பற்றி கூறியிருக்கும் பல விடயங்கள் உண்மைப்பு புறம்பானவை. ஆனால் சீமான் பற்றிய விம்பத்தை வெளிக் கொணர்வதற்காக இக்கட்டுரையை வெளியிடுகின்றோம்)

சூற்றம் இணையத்திலிருந்து
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக