அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 3 ஆகஸ்ட், 2014

வெள்ளை வேட்டிச் சட்­டை­யி­லேயே சென்று வேல்ஸ் இள­வ­ர­சரை வர­வேற்­றவர் தமிழன்

மகாத்மா காந்தி வேட்­டி­ய­ணிந்து வந்­ததை, அரை நிர்­வாண பக்­கிரி என்று கிண்டல் செய்த அன்­றைய பிரிட்டிஷ் பிர­தமர் வின்ஸ்டன் சர்ச்சில் பின்­னாளில் அதற்கு வருத்தம் தெரி­வித்தார். அந்தப் பக்­கிரி தான் கோட்­சூட்­போட்ட ஆங்­கி­லே­யர்­களை ஆட்­டிப்­ப­டைத்தார் என்­பது வர­லாறு!



பர­ப­ரப்­பான அர­சியல் செய்­தி­க­ளுக்கு நடுவில் தமி­ழ­கத்­தையும் ஓர­ளவு தென்­னிந்­தி­யா­வையும் திரும்பிப் பார்க்க வைத்­தி­ருக்­கி­றது ஒரு நிகழ்வு. வேட்டி கட்­டி­வந்த உயர்­நீ­தி­மன்ற நீதி­பதி ஒரு­வ­ருக்கு டி.என்.சி.ஏ கிளப் விழாவில் அனு­மதி மறுக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. இதை எங்கோ ஒரு மூலையில் தனி நப­ருக்கு நடந்த ஒரு சிறு நிகழ்வு என்று ஒதுக்கி விட முடி­யாது. வெள்­ளை­ய­னி­ட­மி­ருந்து சுதந்­திரம் பெற்று 67 ஆண்­டுகள் ஆன பின்னும் அந்த அடி­மைத்­தனமும் அவர்­களை காப்­பி­ய­டிக்கும் கலா­சா­ரமும் இன்னும் நம் இரத்­தத்தை விட்டு நீங்­க­வில்லை என்­பதன் அடை­யாளம் இது!

சென்னை சேப்­பாக்­கத்­தி­லுள்ள டி.என்.சி.ஏ கிளப் என்­பது தமிழ்­நாடு கிரிக்கெட் சங்கம் நடத்தும் சமூக கிளப். இதில் உறுப்­பி­னர்­க­ளாக இருப்­ப­வர்கள் கூடிப்­பே­சு­வ­தற்கும் மது அருந்­திப் ­பொ­ழுது போக்­கவும் வியா­பார பேச்சு வார்த்­தைகள் நடத்­து­வ­தற்கும் என்று மேல் தட்டு மக்­களின் பொழு­துபோக்கு தல­மா­கவே அமைந்­தி­ருக்­கி­றது இந்த வகை கிளப்­புகள்.

இந்தக் கிளப் வளா­கத்­தி­லுள்ள ஆடிட்­டோ­ரி­யத்தில் முன்னாள் உயர்­நீ­தி­மன்ற தலைமை நீதி­பதி டி.எஸ்.அரு­ணாச்­சலம் எழு­திய புத்­த­கத்தின் வெளி­யீட்டு விழா அண்­மையில் நடை­பெற்­றுள்ளது. இந்­தப்­புத்­த­க வெளியீட்டு விழாவில் இப் புத்தகத்தை குஜராத் உயர் நீதி­மன்ற முன்னாள் தலைமை நீதி­பதி கோகுல கிருஷ்ணன் வெளி­யிட ஹிமாச்சல் பிர­தேச முன்னாள் தலைமை நீதி­பதி ஆர்.ரத்­தினம் முதல் பிர­தியை பெற்றுக் கொள்­வ­தாக இருந்தார். விழா­விற்குப் பல உயர்­நீ­தி­மன்ற முன்னாள் இந்நாள் நீதி­ப­திகள், சீனியர் வழக்­க­றி­ஞர்கள் எனப்­ப­லரும் விருந்­தா­ளி­க­ளாக அழைக்­கப்­பட்­டி­ருந்­தனர்.

சென்னை உயர்­நீ­தி­மன்ற நீதி­ப­தி­யாக இருக்கும் டி.ஹரி­ப­ரந்­தாமன் இவ்­வி­ழா வில் கலந்­துகொள்ள வந்து இறங்­கி­ய­போதுதான் அவ­ருக்கு ஒரு அதிர்ச்­சி காத்­தி­ருந்­தது. அவர் வேட்­டிச்­சட்டை அணிந்து வந்­ததால் கிளப்பின் உடை தொடர்­பான விதி­களை மீறி வேட்டி கட்­டிக்­கொண்டு வந்­ததால் அவ­ருக்கு உள்ளே நுழைய அனு­மதி இல்லை என்று வர­வேற்­ப­ரையில் இருந்­தவர் தடுத்­து­விட்டார். நீதி­பதி ஹரி­ப­ரந்­தாமன் சுழல் விளக்கு பொருத்­திய காரில் வந்து இறங்­கி­யதை பார்த்த பின்னும் கூட அதா­வது அவர் உயர்­நீ­தி­மன்ற இந்நாள் நீதி­பதி என்று தெரிந்தும் கொஞ்சம் கூட மரி­யா­தை­யின்றி நாக­ரி­க­மின்றி அனு­மதி மறுக்­கப்­பட்­டுள்­ளது.

நீதி­பதி ஹரி­ப­ரந்­தா­மனைப் போலவே உயர்­நீ­தி­மன்ற மூத்த வழக்­க­றிஞர் ஆர்.காந்­தியும் மதுரை உயர்­நீ­தி­மன்ற வழக்­க­றிஞர் ஜி.ஆர்.சுவா­மி­நா­தனும் வேட்­டியில் வந்­த­தற்­காக இதே விழாவில் அனு­மதி மறுக்­கப்­பட்டு திருப்பி அனுப்­பப்­பட்­டு­விட்­டனர். விழாக்­கு­ழு­வினர் தலை­யிட்டும் இந்த தர்­ம­சங்­க­டத்தை தவிர்க்க முடி­ய­வில்லை. விதி­மு­றை­களில் இவ்­வ­ளவு வெள்­ளைக்­கா­ரத்­த­ன­மான விருந்­தா­ளி­க­ளாக அழைக்கும் விழாக்­களை தங்கள் வளா­கத்தில் ஏன் நடத்த அனு­ம­திக்க வேண்டும்?

டி.என்.சி.ஏ.கிளப்பை நடத்தும் டி.என்.சி.ஏவின் தலைவர் வெள்­ளைக்­காரர் அல்லர். குங்­கு­மப்­பொட்டு வைத்த பச்சை தமிழர். என்.சீனி­வாசன் இந்­திய கிரிக்கெட் வாரி­யத்தில் நடந்­த­தாகக் கூறப்­படும்.மேட்ச் ஃபிக்சிங் முறைக்­கே­டு­க­ளுக்­காக உச்­ச­நீ­தி­மன்­றத்தால் தள்ளி வைக்­கப்­பட்­டவர். அதையும் மீறி சர்­வ­தேச கிரிக்கெட் கவுன்­சிலின் தலை­வ­ரா­கி­யி­ருப்­பவர்.

என்.சீனி­வா­ச­னுக்கு நீதி­மன்­றங்­களின் மேல் எழுந்த கோபத்­தினால் இப்­ப­டி­யொரு சம்­பவம் நடந்­தி­ருக்கும் என்று தோன்­ற­வில்லை. ஆனால் அந்த அந்­தஸ்தில் உள்­ள­வர்­க­ளுக்கு இப்­ப­டி­யொரு அசிங்­க­மான தர்­ம­சங்­கடம் ஏற்­ப­டு­வது அவ­ருக்கு உடனே தெரி­விக்­கப்­பட்­டதா? தெரி­விக்­கப்­ப­ட்டும் அவர் தலை­யி­ட­வி­ல்­லையா? என்று தெரி­ய­வில்லை. தெரிந்த பின்­னா­வது அவர் நடந்த சம்­ப­வத்­திற்கு பகி­ரங்­க­மாக மன்­னிப்பு கேட்­டி­ருந்தால் அது பண்­பாடு. இந்­தக்­கட்­டுரை அச்­சாகும் வரை அவர் இது விட­ய­மாக எந்த அறிக்­கை­யையும் விட­வில்லை என்­பது தான் அதி­க­ப­டி­யா­கவே உறுத்­து­கி­றது. விழா­விற்கு அழைப்பு விடுத்த அமைப்­பா­ளர்கள் உடை­ய­லங்­கார விதி­மு­றையை அழைப்­பிதழ் டிரஸ் கோட் என்று குறிப்­பி­டா­ததும் ஒரு­வ­கையில் தவ­றுதான்.

மகாத்மா காந்தி வேட்­டி­ய­ணிந்து வந்­ததை அரை நிர்­வாண பக்கிரி என்று கிண்டல் செய்த அன்­றைய பிரிட்டிஷ் பிர­தமர் வின்ஸ்டன் சர்ச்சில் கூடப் பின்­னாளில் அதற்கு வருத்தம் தெரி­வித்தார். கோட்டு சூட்டு போட்ட அத்­தனை வெள்­ளை­யர்­க­ளையும் அரை நிர்­வாணப் பக்­கிரி தான் ஆட்டோ ஆட்டு என்று ஆட்டி வைத்­தது வர­லாறு. இந்த விட­யத்தில் வட இந்­திய உடை­யான நேரு ஜாக்கெட் கூட மேற்­கத்­திய உடை­யாக பல அரசு விழாக்­க­ளிலும் விருந்­து­க­ளிலும் அங்­கீ­க­ரிக்­கப்­பட்­டு­விட்­டது. கழுத்தை ஒட்­டிய கொல­ருடன் முட்­டிக்கால் தாண்­டிய நீள நேரு ஜாக்­கெட்டை அநே­க­மாக வெளி­நாட்­டி­லுள்ள இந்­திய தூத­ரக அதி­கா­ரிகள் அனை­வ­ராலும் அணி­யப்­ப­டு­கி­றது. ஆனால் தென்­னாட்டு உடை­யான வேட்டி மட்டும் இன்னும் தாழ்த்­தப்­பட்ட உடை­யா­கவே பாவிக்­கப்­ப­டு­வ­துதான் கொடுமை.

வெள்­ளை­யர்கள் காலத்­தி­லி­ருந்து பின் தொட­ரப்­பட்ட நமது சட்­ட­மு­றையில் பார் கவுன்சில் ஒப் இந்­தி­யாவின் விதி­மு­றை­களில் (49 (1) GG) வழக்­க­றிஞர் டிர­வுசர் அல்­லது வேட்டி அணிந்து வரு­வதை அனு­ம­திக்­கி­றது. மேலே போட்­டுக்­கொள்ளும் கறுப்பு கோட் கவுன் விட­யங்­களில் சில விதி­மு­றை­களை விதித்­தாலும் வெயில் காலத்தில் சில விதி­மு­றை­களை தளர்த்­திக்­கொள்­ளவும் வழி செய்­கி­றது.

கோட்டும் சூட்டும் ஷுவும் குளிர் பிர­தே­சத்தில் இருக்கும் வெள்­ளை­யர்­க­ளுக்­காக வெள்­ளை­யர்­களால் உண்­டாக்­கப்­பட்ட உடை­மு­றைகள். மண்டை காய்­கிற வெயிலில் கழுத்தை இறுக்கும் கோட்­டையும் டையையும் கட்­டிக்­கொண்டு நாம் அலை­வது அசட்­டுத்­த­னத்தின் உச்­ச­நிலை.

காம­ராஜர் வேட்டி கட்­டிக்­கொண்­டுதான் வெளி­நா­டு­க­ளுக்கும் சென்றார். முந்­திய அர­சியல் அமைச்­ச­ராக இருந்த முர­சொ­லி­மா­றனும் ப.சிதம்­ப­ரமும் வேட்­டி­ய­ணிந்­துதான் அரசுப் பணி­பு­ரிந்­தனர். இவர்கள் நாடா­ளு­மன்­றத்­தி­லேயும் வெளி­நாட்டு முக்­கியஸ்தர்­களை இந்­தி­யாவில் சந்­திக்கும் போதும் கூட வேட்டிதான் அணிந்தனர். வெளிநாட்டிற்கு செல்லும்போது மேற்­கத்­தேய உடை அணிந்தால் அது தவ­றில்லை. ஆனால் உள்­ளுக்­குள்­ளேயே இப்­படி அலப்­பரை செய்­வது தான் அபத்தம். கண்­ணி­யத்­துக்கு தொடர்பே இல்­லா­த­வர்கள் கூட கோட்டு சூட்டு போட்டுக் கொண்டு ஒய்­யாரக் கொண்­டையில் தாழம் பூவாம் அதன் உள்ளே இருக்­குமாம் ஈரும் பேனும் என்­பது போல் நடிப்­பது இன்று நாக­ரி­க­மா­கி­விட்­டது.

இந்த வேட்டி விதிமுறை வெட்டிக் கலா­சா­ரத்தை பா.ம.க. தலைவர் மருத்­துவர் ராம­தாஸும் தமி­ழக காங்­கிரஸ் தலைவர் ஞான­தே­சி­கனும் கண்­டித்­தி­ருக்­கி­றார்கள்.

ஐ.நா. சபைக்கூட்­டத்தில் பேசும்­போது கூட பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி வேட்­டி­ய­ணிந்­தி­ருந்­ததை ராமதாஸ் சுட்­டிக்­காட்டி இந்த வேண்­டாத விதி­மு­றை­களை சீர்­ப­டுத்த தமி­ழக அரசு சட்டம் கொண்­டு­வ­ர­வேண்டும் என்­கிறார். நியா­ய­மான கோரிக்கை தான்.

சென்னை மாந­க­ராட்சி தலை­வ­ராக இருந்த சேர். பிட்டி. தியாக ராயர் ஆங்­கி­லேய அரசின் நிபந்­த­னை­களை ஏற்­காமல் தனது வழக்­க­மான வெள்­ளை­வேட்டிச் சட்­டை­யி­லேயே சென்று வேல்ஸ் இள­வ­ர­சரை வர­வேற்றார். ஆங்கிலேயே அரசையே பணிய வைத்த நமக்கு இந்தக் கிளப்புகள் எம்மாத்திரம் என சட்டசபையில் சவால் விட்டார் முதல்வர் ஜெயலலிதா!

தகவல் – ஷண்
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக