அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

ஆசிட் ஊசி’ மூலம் டூப்ளிகேட் மைக்கேல் ஜாக்சனாக உருமாறிய பிரேசில் ரசிகர்! (படங்கள் இணைப்பு)

ரியோ டி ஜெனிரோ: மறைந்த பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் மீது கொண்ட தீவிர அன்பால் பிரேசில் நாட்டு ரசிகர் ஒருவர் ஆசிட் ஊசி மூலம் தன்னையும் அவரைப் போலவே மாற்றிக் கொண்டுள்ளார்.



பிரேசில் நாட்டை சேர்ந்தவர் அண்டோனியா கிளய்ட்சன் ரோட்ரிக்ஸ் (30) . இவர் மறைந்த பிரபல பாப் பாடகர் மைக்கேல் ஜாக்சனின் தீவிர ரசிகர். அவரை போல் தன்னால் பாட முடியாவிட்டாலும், அவரை போன்ற தோற்றத்தையாவது பெற வேண்டும் என முடிவு செய்தார் அண்டோனியா.

இதற்கு அவரது முகச்சாயலும் ஒத்துப் போனதால், தற்போது மைக்கேல் ஜாக்சனின் ஜெராக்ஸ் காப்பி போல் நடமாடி வருகிறார்.

இயற்கையிலேயே ஜாக்சனின் முகச்சாயல் இருந்த போதும், நிறம் மட்டும் வேறாக அமைந்திருந்தது அண்டோனியாவிற்கு உறுத்தலாக இருந்தது. எனவே, அதனையும் ஆசிட் ஊசி மூலம் மாற்றிக் கொண்டார் அண்டோனியா.

பின்னர் மருத்துவரிடம் ஆலோசனை பெற்று மொத்தம் நான்கு முறை தனது முகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அவருடைய தோற்றத்தைப் போராடி பெற்றார் அண்டோனியா.

மைக்கேல் ஜாக்சனின் உருவத்தைப் பெற்று விட்ட அண்டோனியா தற்போது அவரைப் போலவே ஆடப் பயிற்சியும் எடுத்து வருகிறார். இதற்காக தினமும் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக செலவிடுகிறாராம்.

மைக்கேல் ஜாக்சனே மீண்டும் பிறந்து வந்ததுபோல உருவத்தில் அச்சு அசலாக அவரைப் போலவே அண்டோனியா உள்ளதாக அவரைப் பார்ப்பவர்கள் கூறுகிறார்கள்.

அண்டோனியாவின் தோற்ற மாற்றத்திற்கு பயன்படுத்தப்பட்ட ஹையலூரோனிக் அமிலம் மற்றும் போடோக்ஸ் ஊசி ஆகியவை பக்கவிளைவுகள் இல்லாதவை என்பதால் அவருடைய உடலுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை எனக் கூறப்படுகிறது.

ஆனால், நிஜ ஜாக்சனே தனது நிற மாற்றத்திற்காக செய்து கொண்ட ஆபரேஷன்களால் பின்னாளில் எவ்வளவு தூரம் பாதிப்படைந்து கஷ்டப்பட்டார் என்பது அவரது ரசிகர்களுக்குத் தெரியாததல்ல...




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக