அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 8 ஆகஸ்ட், 2014

ஒரே ஒரு கட்டுரைதான்.. ஊர் ஊராக பேனர், போஸ்டர் போட்டு ராஜபக்சேவை கிழித்தெடுத்த அதிமுகவினர்!

சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை இழிவுபடுத்தி இலங்கை பாதுகாப்புத்துறை இணையதளத்தில் வந்த படம் மற்றும் கட்டுரைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழகத்தின் பல பகுதிகளிலும் விதம் விதமான போஸ்டர், பேனர்களைப் போட்டு ராஜபக்சேவை கிழித்தெடுத்து விட்டனர் அதிமுகவினர்.

வித்தியாசமான முறையில் யோசித்து விதம் விதமாக பேனர் கட்டியும், போஸ்டர் அடித்தும் அதிமுகவினர் தங்களது எதிர்ப்பைக் காட்டினர்.



இதன் விளைவு, சென்னைக்கு வந்த சிங்கள பிக்குகளுக்கு கடும் பாதுகாப்பு போட வேண்டியதாயிற்று. அதேபோல சென்னைக்கு விளையாட வந்த இலங்கை வீரர்களும் திரும்பிப் பார்க்காமல் போக வேண்டியதாயிற்று.

அந்தப் போஸ்டர்கள், பேனர்கள் குறித்த ஒரு பார்வை...

சிங்கத்தைச் சீண்டினா செருப்படிதான்


இந்த போஸ்டரில் ராஜபக்சேவை கழுதை போலவும், முதல்வர் ஜெயலலிதாவை சிங்கம் போலவும் சித்தரித்துள்ளனர். போஸ்டரின் பன்ச் வசனம், சிங்கத்தை சீண்டிப் பார்க்காதே.. செருப்படிதான் கிடைக்கும் மறவாதே என்று இருந்தது.


கழுதையுடன் கரும்புள்ளி செம்புள்ளி

இந்தப் போஸ்டரில் இடம் பெற்றிருந்த ராஜபக்சே படத்தை கழுதை போல சித்தரித்திருந்தனர். முகத்தில் கரும்புள்ளி செம்புள்ளி வேறு. கழுத்தில் மண்டை ஓடு படம் போட்ட சிவப்புத் துண்டும்.

அம்மா காலில் விழுந்த ராஜபக்சே

அடுத்த படத்தை விளக்க வார்த்தையே தேவையில்லை. பார்த்ததும் பளிச்சென புரிந்து கொள்ளலாம்.

பிறப்பு ராகுகாலம்- இறப்பு எமகண்டம்

இந்தப் படம் பேஸ்புக்கில் ரொம்பப் பிரபலம். ராஜபக்சேவுக்கு மாலை போட்டு பத்திரிகை விளம்பரப் பாணியில் நையாண்டி செய்த படம் இது.

தாயே..

இந்தப் படம் இன்னும் பிரபலம். ஜெயலலிதா காலில் ராஜபக்சே மண்டியிட்டு மன்னிப்பு கேட்பது போல அமைந்திருந்தது.

சில்க் ஸ்மிதாவுடன் டான்ஸ்

இதேபோல நெல்லைப் பக்கம் போடப்பட்டிருந்த போஸ்டரில் சில்க் ஸ்மிதாவுடன் ராஜபக்சே குத்தாட்டம் ஆடுவது போல இருந்தது..!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக