அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

உருளைக்கிழங்கு பக்கோடா

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 2 பெரியது (தோலுரித்து, வேண்டிய வடிவில் நறுக்கியது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 கப்
கறிவேப்பிலை - சிறிது (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சோடா உப்பு - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

 
செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் நறுக்கிய உருளைக்கிழங்கு, கறிவேப்பிலை, கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், சோடா உப்பு, உப்பு மற்றும் தண்ணீர் ஊற்றி, பக்கோடா பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு கலவையை உதிர்த்து போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து மாவையும் பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான உருளைக்கிழங்கு பக்கோட் ரெடி!!!

இதனை தேங்காய் சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் தொட்டு சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக