அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

எபோலா வைரஸ் ஒரு பார்வை!

 எபோலா வைரஸ் நோய் (Ebola virus disease) (EVD) அல்லது எபோலா இரத்தப் போக்கு காய்ச்சல் (Ebola hemorrhagic fever) (EHF) என்று இந் நோய் அறியப்பட்டுள்ளது. இது ஓர் உயிர் காவி நோயாகும். கடுமையான இரத்தப் போக்கு ஏற்பட்டு நோய்வாய்ப்பட்ட பத்து பேரில் சராசரியாக ஐந்து முதல் ஒன்பது பேர் உயிரிழக்கின்றனர்.


1976 இல் ஆப்பிரிக்காவில் பல உயிர்களை வாங்கிய ஒரு கொடிய உயிர்க்கொல்லி நோய் தான் எபோலா வைரஸ். இந்த வைரஸ் மேற்கு ஆப்பிரிக்காவில் காங்கோவில் உள்ள எபோலா ஆற்றங்கரையில் தோன்றியதால் இந்த நோய்க்கு, 'எபோலா வைரஸ்' என, பெயர் வந்தது. இதுவரை ஆப்பிரிக்காவில் பரவி பல மக்களை கொன்ற இந்த வைரஸானது, தற்போது இந்தியாவில் மும்பை, தமிழ்நாடு போன்ற இடங்களில் பரவி வருவதாக வந்த தகவல்களால், மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

ஏனெனில் ஆப்பிரிக்காவில் இந்த நோயால் தாக்கப்பட்டவர்கள் உயிர் பிழைத்தது இல்லை. மேலும் இதற்கு இன்னும் போதிய மருந்துகளும் கண்டுபிடிக்கப்படாததால், இந்த நோயினால் தாக்கப்பட்டால் மரணத்தைக் கூட தழுவக்கூடும். எபோலா வைரஸ் நோயானது காற்று, நீர் போன்றவற்றினால் பரக்கூடியது அல்ல. விலங்குகளான குரங்கு, வௌவால் மூலம் மனிதர்களுக்கு பரவும். மேலும்ம் இந்த வைரஸால் தாக்கப்பட்டவர்களின் இரத்தம் மற்றும் மலத்தில் இருந்து மற்ற மனிதர்களுக்கு இந்த வைரஸ் பரவுகிறது.

இந்த எபோலா வைரஸின் அறிகுறிகள் மற்றும் அந்த நோய் பரவுவதை எப்படி தடுப்பது என்று பார்ப்போம். முக்கியமாக இந்த நோய் தாக்கி இதன் அறிகுறிகள் தெரிய 5-10 நாட்கள் ஆகும். ஆகவே கவனமாக இருங்கள்.

'எபோலா வைரஸ்' பற்றி தெரிந்து கொள்ள வேண்டியவைகள்!

எபோலா வைரஸின் ஆரம்ப அறிகுறிகள்...

  • எபோலா வைரஸ் தாக்கியிருந்தால், முதலில் காய்ச்சல் வரக்கூடும்.

  • காய்ச்சலைத் தொடர்ந்து உடல் எப்போதும் மிகவும் சோர்வுடன் வலிமை இல்லாமல் இருக்கும்.

  • குறிப்பாக தலைவலி வரும்.

  • இந்த வைரஸ் தாக்குதலால் தொண்டையில் புண் ஏற்படும்.

  • கடுமையான தசை மற்றும் மூட்டு வலி வந்து, பெரும் தொந்தரவைத் தரும்.


நோய் முற்றிய நிலையில்....

  • எதை சாப்பிட்டாலும் வாந்தி வரக்கூடும்.

  • வயிற்று வலி வந்தால் சாதாரணமாக எடுத்துக் கொள்ள வேண்டாம். ஏனெனில் எபோலா வைரஸ் தாக்கியிருந்தால் கடுமையான வயிற்று வலி வரும்.

  • வயிற்றுப்போக்கும் ஏற்படக்கூடும்.

  • அதைத் தொடர்ந்து சருமத்தில் அரிப்புகளும், கட்டிகளும் ஏற்படும்.

  • குறிப்பாக சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயலிழக்க ஆரம்பிக்கும்.

  • சிலருக்கு நெஞ்சு வலி வரும்.

  • அதுமட்டுமின்றி மூச்சு விடுவதில் கூட சிலருக்கு சிரமம் ஏற்படும்.

  • உடலின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் இரத்தம் வழிய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி கண்கள் சிவப்பாகவும், அடிக்கடி விக்கல் ஏற்படும்.

  • நோயால் பாதிக்கப்பட்டவர்களின் அருகில் அதிகம் செல்வதை தவிர்க்க வேண்டும்.

எபோலா நோய் பரவுவதை தடுக்கும் வழிகள்

  • முக்கியமாக அந்நோயால் பாதிக்கப்பட்டால், அவர்களின் அருகில் செல்லும் போது கையுறை மற்றும் முகத்திற்கு மாஸ்க் அணிந்து கொண்டு அவர்களை பார்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில் அவர்களின் இரத்தம் உங்கள் மீது பட்டாலும் உங்களுக்கும் இந்நோய் தொற்றிக் கொள்ளும்.

  • எப்போதும் எந்த ஒரு பொருளை உட்கொள்ளும் முன்னர் கைகளை நன்கு சோப்பு போட்டு கழுவி விட வேண்டும்.

முதலில் பெரும்பாலானவர்கள் இந்த அறிகுறிகளை சாதாரண காய்ச்சல் என்று நினைத்து விட்டு விடுவதுண்டு. ரத்தம் அதிகமாக வெளியேறிய பிறகுதான் விபரீதத்தை உணர்வார்கள். இந்த காய்ச்சல் நீடிக்கும் பட்சத்தில் இரத்த அழுத்தம் குறையும். நாடித்துடிப்பும் பல மடங்கு உயரும்.

இது எபோலா வைரஸ்கள் உடல் முழுவதும் பரவி விட்டதை உறுதி செய்யும். அதன்பிறகு எபோலா காய்ச்சல் பாதிக்கப்பட்டவர்களால் எழுந்து உட்கார கூட முடியாது. படுத்த படுக்கையாகக் கிடந்து போய் சேர வேண்டியதுதான்.

தொடுதல், முத்தமிடுதல், கட்டித் தழுவுதல் ஆகியவற்றின் மூலம் நோய் பரவலாம். ரத்தம், உமிழ்நீர், சிறுநீர், வியர்வை, தண்ணீர் மற்றும் உயிரணுக்கள் மூலமும் இவ்வகை வைரஸ் பரவும்.

இந்த நோய் வைரஸினால் உண்டாவதால் இன்னும்மருந்துகள் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆயினும் நோயாளிகளுக்கு நோயைத் தாங்க தகுந்த மருத்துவ ஆதரவு அளித்தால் உடலின் எதிர்ப்பாற்றலால் உயிர் பிழைக்கின்கும் வாய்புண்டு. எபோலா நோயாளிகளுக்கு வயிற்றுப்போக்குவாந்தி மற்றும் குருதி இழப்பினால் நேர்ந்த நீர் இழப்பைச் கீராக்க அவை தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வர வேண்டும்.

அமெரிக்க ஆராய்ச்சி கூடங்களில் ஆய்வு செய்யப்பட்டு வரும் எபோலாவுக்கு எதிராக மாற்று மருந்தின் ஆராய்ச்சியில் ஆரம்பநிலை மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், எபோலாவால் பாதிக்கப்பட்டிருந்த அந்த இரு அமெரிக்கர்களுக்கும் சோதனை முயற்சியாக இந்த மருந்து அளிக்கப்பட்டு, அவர்கள் எபோலாவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டதாகவும் சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகின.

'ஸ்மேப்' என பெயரிடப்பட்டுள்ள அந்த மருந்தினை தங்கள் நாட்டுக்கு அனுப்பி வைத்து எபோலாவுக்கு மேலும் பல உயிர்கள் பலியாவதை தடுத்து உதவிட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவுக்கு நைஜீரிய அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்த வேண்டுகோளை அமெரிக்க அதிபர் ஒபாமா நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது.

நைஜீரியாவுக்கோ, மற்ற தென்னாப்பிரிக்க நாடுகளுக்கோ ஆராய்ச்சி நிலையில் இருக்கும் ஒரு மருந்தினை எபோலாவுக்கான மாற்று மருந்தாக தன்னால் வழங்க முடியாது என்று ஒபாமா கைவிரித்து விட்டதாக நைஜீரியா நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

குறிப்பு

இந்த நோயை முற்றிலும் குணப்படுத்த சரியான மருந்துகள் கண்டுபிடிக்கப்படாவிட்டாலும், உடலில் அந்த வைரஸை எதிர்த்துப் போராடும் வண்ணம் மருத்துவர் கொடுக்கும் மருந்துகளை தொடர்ந்து எடுத்து வந்தால், இந்த உயிர்க்கொல்லி நோயின் தாக்குதலில் இருந்து வெளிவரலாம்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக