அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

சிக்கன் கபிரஜி கட்லெட்

தேவையான பொருட்கள்:

எலும்பில்லாத சிக்கன் - 250 கிராம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
முட்டை - 4 (அடித்தது)
பிரட் தூள் - 1 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு


செய்முறை:

முதலில் சிக்கன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
பின்பு மிக்ஸியில் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி பூண்டு பேஸ்ட் போன்றவற்றை போட்டு, நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து கழுவிய சிக்கனை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் அரைத்து வைத்துள்ள கலவையை போட்டு கிளறி, எலுமிச்சை சாற்றை ஊற்றி பிரட்ட வேண்டும்.

பின்னர் உப்பு மற்றும் சீரகப் பொடி போட்டு கிளறி, 03-45 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

இந்த நேரத்தில் ஒரு சிறிய வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய வைக்க வேண்டும்.

எண்ணெய் காய்வதற்குள், அடித்து வைத்துள்ள முட்டையில் சிறிது உப்பு சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.

எண்ணெயானது காய்ந்ததும், ஊற வைத்துள்ள சிக்கன் துண்டுகளை, முட்டையில் நனைத்து, பின் பிரட் தூளில் பிரட்டி, தீயை குறைவில் வைத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து சிக்கன் துண்டுகளையும் பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான சிக்கன் கபிரஜி கட்லெட் ரெடி!!!
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக