அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

கத்தி, புலிப்பார்வை போன்ற திரைப்படங்களையும் 'லைக்கா' போன்ற நிறுவனங்களையும் எதற்காக எதிர்க்க வேண்டும்?

ராஜபட்சேவின் நெருங்கிய நண்பர் சுபாஷ்கரன் அல்லி ராஜா. 'லைக்கா' நிறுவனத்தின் உரிமையாளர். 'லைக்கா'வில் பாட்னராக இருப்பவர் ராஜபட்சேவின் மகன் நமல் ராஜபட்சே. ராஜபக்சேவின் கட்சியில் எம்.பியாக இருக்கும் “ஜெயசூர்யா“ இன்னொரு கூட்டாளி.



 (படத்தில் தமிழின வியாபாரி சீமானோடு இருப்பவர் 'புலிப்பார்வை' இயக்குனர் ரீல் மன்னன் ப்ரவீன் காந்தி)

'லைக்கா' நிறுவனத்தின் செயல் அலுவலர் ரவீந்திரன், 'கத்தி' படம் தயாரிப்பில் எங்கள் நிறுவனத்திற்கும் பங்கு இருப்பதாக பேட்டியில் குறிப்பிட்டிருக்கிறார். 'கத்தி'யின் திரைக்கதை என்ன என்பது முக்கியம் இல்லை. இதன் கூட்டணிகள் யார்? இதில் நடிகர் விஜய்யின் பங்கு என்ன? என்பதற்கு அரசியல் காரணங்கள் இருக்கின்றன. நமது எதிர்ப்பும் அரசியல் காரணங்களை நோக்கியே...

'புலிப்பார்வை' படத்தை பார்த்துவிட்டீர்களா? (பார்க்க: https://www.youtube.com/watch?v=TLm5NG2PvL0 )

பிரபாகரனின் மகன் பாலச்சந்திரனை 'குழந்தை போராளி'யாக சித்தரித்து எடுக்கப்பட்ட காட்சிகளில் ஒன்றுகூட உண்மையில்லை. சிங்கள இராணுவத்தினரிடம் பிடிபட்டு படுகொலை செய்யப்பட்ட ஆதாரத்தை தவிர பாலச்சந்திரன் குழந்தை போராளியாக இருந்ததாக புலிகளே என்றுமே கூறியதில்லை. அப்படியிருக்க அப்பட்டமாக வஞ்சகப் புகழ்ச்சியோடு 'ப்ரவீன் காந்தி' இரட்டடிப்பு செய்திருக்கிறார். அதற்கு எதிர்ப்பு காட்டாமல் வரவேற்கிறார் சீமான்.

இந்த களோபரங்களுக்கு இடையே தமிழன வியாபாரி சீமானின் மெளனத்தை கண்டு தமிழின உணர்வாளர்கள், 'ஏன் எதிர்ப்பு காட்டவில்லை?' என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஊடகங்கள் சீமானின் அரசியல் குளறுபடிகள் குறித்து பல சந்தேகங்களை எழுப்புகின்றன. சில ஊடகங்கள் நேரடியாக சீமானிடம் தொடர்பு கொண்டு பேட்டி எடுத்திருக்கின்றன. (கேட்க: https://www.youtube.com/watch?v=Gf1OEFWXJtU )

கத்தி திரைப்படத்தை எதிர்க்க வேண்டிய தேவை என்ன இருக்கிறது என்கிறார் சீமான். எங்களை போராட தூண்டுவதற்கு என்ன காரணம் இருக்கிறது என்று சொல்லுங்க? என்று கேள்வியை நமக்கே திருப்பி அடிக்கிறார்.

தூங்கறவனை எழுப்பி விடலாம். தூங்குபவனை போல் நடிப்பவனை எழுப்ப முடியுமா? கத்தி திரைப்படத்தை எதிர்க்க வேண்டிய காரணங்களை நாம் முன்பே குறிப்பிட்டிருக்கிறோம். தமிழின வியாபாரி சீமானுக்கு இதற்கு மேலும் என்ன காரணங்கள் தேவைப்படுகிறது?

"லைக்காவுக்கும் லிபரானா நிறுவனங்களுக்கும் இடையே நடைப்பெறுகிற பெரு முதலாளிகளின் தொழில் போட்டி. இதில் எதற்காக தேசிய இனப்போராட்டம் வருகிறது" என்பது சீமானின் கேள்வி. இவ்வளவு வெள்ளந்தாரியாக பேச சீமானால் மட்டுமே முடியும்.

இதே பெருமுதலாளிகளின் அரசியல் பங்கும் பெரும் முதலீடுகளும் எங்கே உள்நுழைக்கப்படுகிறது? எது வியாபாரமாக்கப்படுகிறது? எது பெரும் முதலீட்டை கொடுக்கிறது?

சிங்கள இனவெறி அரசு நடத்திய காமன் வெல்த் மாநாட்டுக்கு பல மில்லியன் ரூபாக்களை வழங்கியது லைக்கா நிறுவனம் தானே? அதில் எதற்காக முதலீடு செய்தது?

தமிழனத்திற்கு எதிராக செய்படுவதில் தீவிரமாக இருக்கும் பெரு முதலாளிகளின் முதலீடுகளைக் குறித்து பேச வேண்டுமானால் நீண்ட கட்டுரை எழுத வேண்டியிருக்கும். ஆனால் கத்தி, புலிப்பார்வை போன்ற திரைப்படங்களையும் லைக்கா போன்ற நிறுவனங்களையும் எதிர்க்க ஏராளமான காரணங்கள் இருந்தும் சீமான் மெளனமாக இருப்பதோடு நடிகர் விஜய் அடுத்த நடிகர் விஜய் அடுத்த முதல்வராக வர வேண்டும் என்று ஜால்ரா தட்டிக் கொண்டிருக்கிறார். புலிப்பார்வை எடுத்த இயக்குனரோடு ஒறவாடுகிறார். ஒறவுகளே ஒறவுகளே என்று இன்றும் தமிழினத்ழதின் பாதுகாப்பாளனாக பில்ட்டப் கொடுத்துக் கொண்டிருக்கிறார்.

அடச்சே சீமானுக்கு எதற்கு இந்த நாய் பிழைப்பு?

- தமிழச்சி
12/08/2014
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக