அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 7 ஆகஸ்ட், 2014

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம்

சென்னை: பிரபல சின்னத்திரை நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் இன்று சென்னையில் மரணமடைந்தார்.



பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும், திரைப்படங்களிலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் சுருளி மனோகர். கடந்த ஆண்டு ' இயக்குனர்' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

நகைச்சுவை நடிகர் சுருளி மனோகர் மரணம் கிங்காங், போண்டாமணி, ஜாஸ்பர், மனோபாலா, பாலு ஆனந்த், குண்டு கல்யாணம், பாண்டு, அல்வா வாசு, குள்ளமணி, பாவா லட்சுமணன், தேவதர்ஷினி, ஜெய்கணேஷ், ஜெயமணி என தமிழ் சினிமாவில் உள்ள நகைச்சுவை பட்டாளத்தையே இந்தப் படத்தில் நடிக்க வைத்தார் சுருளி. இவர்களுடன் சுருளி மனோகர் ஒரு கதாபாத்திரத்திலும் நடிக்கவும் செய்தார்.

இந்நிலையில் சென்னையில் அவர் இன்று மரணமடைந்தார். சுருளி மனோகர் மறைவுக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த பல்வேறு தரப்பினரும், மற்றும் தொலைக்காட்சி நடிகர், நடிகைகளும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளனர்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக