அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 10 ஆகஸ்ட், 2014

குதிக்கால் எலும்புத் துருத்தல்

மூஞ்­சையில் இடிக்­கா­த­வாறு நீட்­டினார் “எக்ஸ்­ரே”யை “பாருங்கோ வடிவா! குதிக்­கா­லிலை எலும்பு வளர்ந்­தி­ருக்காம். என்ன செய்­யி­றது? வெட்ட வேணுமே” மூச்சு விட நேர­மில்­லாமல் பேசி னார். அவ­ரது குதிக்கால் எலும் பின் கீழ்ப்­பு­ற­மாக பிசி­று­போல எலும்பு சற்று வளர்ந்­தி­ருந்­தமை தெரிந்­தது.



குதிக்­காலில் வலி என ஒரு மருத்­து­வ­ரிடம் காட்­டிய போது அவர் மருந்து மாத்­தி­ரைகள் கொடுத்து தசைப் பயிற்­சி­க­ளை யும் சொல்லிக் கொடுத்­துள்ளார். பேச்­சோடு பேச்­சாக குதிக்கால் எலும்­பிலும் சிறு­வ­ளர்ச்சி என்று சொன்­னதால் வந்த வினை. எக்ஸ்ரேயுடன் மருத்­துவர் மருத்­து­வ­ராக ஓடித் திரி­கிறார்.குதிக்­காலின் பிர­தான எலும்பு கல்­கே­னியம் எனப்­ப­டு­கி­றது. உடல் எடையைப் பெரு­ம­ளவு தாங்கும் எலும்பு என்­ப­துடன் பாதத்தின் முக்­கிய தசை­நா­ரான குதிக்கால் சவ்வு இத­னுடன் இணைந்­துள்­ளது.

இந்தச் சவ்வு மிகவும் பல­முள்­ள­தாகவும் இறுக்­க­மா­ன­தா­கவும் இருக்­கி­றது. இச் சவ்­வுதான் பாதத்தின் அடிப் பகு­தியில் உள்ள வளைவைப் பேண உத­வு­கி­றது. அத்­துடன் நடக்கும் போதும் ஓடும்­போதும் உடலின் எடை­யா­னது பாதத்தில் சமச்­சீ­ராக தாங்­கப்­ப­டு­வ­தற்கும் உத­வு­கி­றது.

இந்த கல்­கே­னியம் என்ற எலும்பின் கீழ்ப்­பு­றத்தில் கல்­சியம் படி­வ­தையே குதிக்கால் எலும்புத் துருத்தல் என்­பார்கள். அந்த எலும்பின் முற்­பு­ற­மாக அரை அங்­குல நீளம் வரை நீண்டு அது வளர்­வ­துண்டு. குதிக்கால் வலி­யென நோயா­ளிகள் சொல்­லும்­போது மருத்­து­வர்கள் எக்ஸ்ரே படம் எடுத்துப் பார்க்கும் போது இது தெரி­ய­வரும். இருந்­த­போதும் வேறு கார­ணங்­க­ளுக்­காக எக்ஸ்ரே எடுக்­கும்­போது தான் பெரும்­பாலும் இந்த எலும்பு வளர்ச்சி இருப்­பது தெரி­ய­வ­ரு­கி­றது. இது ஆபத்­தான நோயல்ல.

குதிக்கால் எலும்புத் துருத்­தலால் அறி­கு­றிகள் எதுவும் பொது­வாக ஏற்­ப­டு­வ­தில்லை. இருந்­த­போதும் அவர்­க­ளுக்கு குதிக்­காலில் வலி இருக்கக் கூடும். நடத்தல், ஓடுதல், துள்ளல் நடை போன்­ற­வற்றின் போது வலி தெரி­ய­வ­ரலாம். இருந்­தாலும் வலி ஏற்­ப­டு­வ­தற்குக் காரணம் குதி எலும்புத் துருத்தல் அல்ல. அருகில் உள்ள குதிக்கால் சவ்வு தசை­நாரில் அழற்சி ஏற்­ப­டு­வதே வலிக்குக் கார­ண­மாக பெரும்­பாலும் இருப்­ப­துண்டு.

காலையில் எழுந்து காலடி வைக்க ஆரம்­பிக்­கும்­போது குதிக்­காலில் சுளீ­ரெனக் குத்­து­வது போல வலிக்கும். அதே­போல சற்று நேரம் ஓய்­வாக உட்­கார்ந்­தி­ருந்­து­விட்டு நடக்க ஆரம்­பிக்­கும்­போது அதே வித­மாகக் குத்­து­வது போன்ற வலி ஏற்­படும்.

ஆனால் இதே வித­மான அறி­கு­றிகள் குதிக்கால் சவ்வு அழற்­சியின் போதும் ஏற்­ப­டு­கின்­றன என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

காலையில் எழுந்­தி­ருக்கும் போது குதிக்கால் சவ்வு மிகவும் இறுக்­க­மாக இருப்­பதால் சிறிய அசை­வுகள் கூட வேத­னையை ஏற்­ப­டுத்­து­கின்­றன. ஆயி னும் சற்று நடந்த பின்னர் அதன் இறுக்­கத்தில் சற்று தளர்ச்சி ஏற்­பட ஆரம்­பிப்­பதால் வேதனை சற்றுக் குறையும். இத­னால்தான் காலை எழுந்து நட­மாட முன்னர் பாதத்தை தங்கள் கைகளால் மசாஜ் செய்­யும்­படி குதிக்கால் வலி உள்­ள­வர்­க­ளுக்கு மருத்­து­வர்கள் ஆலோ­சனை வழங்­குவர்.

குதிக்கால் சவ்வு அழற்சி மற்றும் குதிக்கால் எலும்புத் துருத்தல் அறி­கு­றிகள் ஒரே­வி­த­மாக இருப்­பதால் பலரும் ஒன்றை ஒன்று குழப்பிக் கொள்­வ­துண்டு.

இருந்­த­போதும் குதிக்கால் சவ்வு அழற்சி உள்­ள­வர்­களில் 70 சத­வி­கி­த­மா­ன­வர்­க­ளுக்கு குதிக்கால் எலும்புத் துருத்தல் இருப்­பதைத் தர­வுகள் சுட்டிக் காட்­டு­கின்­றன. அதே நேரம் பாதத்தில் எந்த வலி­களும் இல்­லா­த­வர்­களில் 70 சத விகி­த­மா­ன­வர்­க­ளுக்கு குதிக்கால் எலும்பு துருத்தி இருப்­பதும் உண்டு.

குதிக்கால் எலும்புத் துருத்தல் ஏன் ஏற்­ப­டு­கி­றது என்­பது தெளி­வாகத் தெரி­யாது. இது திடீ­ரென தோன்­று­வ­தில்லை. படிப்­ப­டி­யா­கவே வளர்­கி­றது. பாதத்தில் உள்ள தசை­க­ளுக்கும் சவ்­வு­க­ளுக்கும் வினைப்­பளு (Strain) அதி­க­மா­தலால் அவை நீள­வாக்கில் இழு­ப­டு­கின்­றன. இதனால் அவை எலும்பில் பற்­றி­யி­ருக்கும் மெல்­லிய சவ்­வு­களில் நுண்­ணிய கிழி­வு­களை ஏற்­ப­டு­த்துகி­றது. இவற்றின் தொடர்ச்­சி­யா­கவே அவ்­வி­டங்­களில் எலும்பு துருத்தி வளர்­கி­றது என நம்பப்படு­கி­றது. கடு­மை­யான ஓடு­வது துள்­ளு­வது போன்ற பயிற்­சி­களைச் செய்யும் விளை­யாட்டு வீரர்­களில் இதன் கார­ண­மா­கவே அதி­க­ளவில் குதி எலும்பு துருத்தல் பிரச்­சினை காணப்­ப­டு­கி­றது.

குதி எலும்பு துருத்தி யாரில் அதிகம் ஏற்­ப­டு­கி­றது

ஏற்­க­னவே குறிப்­பிட்­டது போன்ற கடு­மை­யான உடற் பயிற்­சிகள் செய்­ப­வர்­க­ளுக்கு ஏற்­பட வாய்ப்­புண்டு.

நடையின் இயல்பில் பாதிப்பு உள்­ள­வர்­க­ளுக்கும் அவ்­வாறே ஏற்­பட வாய்ப்­புண்டு. நடையின் இயல்பு என்றால் என்ன?பொது­வாக நாம் நடக்­கும்­போது இரண்டு பாதங்­க­ளிலும் உடற் பார­மா­னது ஒரே வித­மாக விழு­மாறு நடக்­கிறோம். ஒரு கால் சற்றுக் குட்­டை­யாக அல்­லது பாதத்தில் வளை­வுகள் சீரற்றோ இருந்தால் ஒரு பாதத்தில் அதிக தாக்கம் ஏற்­படும். இது எலும்பு துருத்­த­லுக்கு கார­ண­மா­கலாம். அதே­போல ஒரு பக்க முழங்­காலில், பாதத்தில், அல்­லது தொடையில் வலி­யி­ருந்­தாலும் நாம் எம்­மை­ய­றி­யாது பாரத்தை மற்றக் காலில் அதிகம் பொறுக்க வைப்போம். இதுவும் கார­ண­மா­கலாம்.

கடு­மை­யான தரை­களில் ஓடு­வது துள்ளல் நடை­போ­டு­வது போன்­ற­வையும் கார­ண­மா­கலாம்.

பொருத்­த­மற்ற கால­ணிகள் மற்­றொரு முக்­கிய கார­ண­மாகும். தேய்ந்த கால­ணி­களும் அவ்­வாறு எலும்புத் துருத்­த­லுக்கு வழி­வ­குக்­கலாம்.

உடல் எடை அதி­க­மான குண்டு மனி­தர்­க­ளுக்கும் வாய்ப்பு அதி­க­மாகும்.

வயது முதி­ரும்­போது குதிக்கால் சவ்­வி­னது நெகிழ்­வுத்­தன்மை குறைந்து போகி­றது. அத்­துடன் பாதத்­திற்குப் பாது­காப்பைத் தரும் கொழுப்பின் அளவு குறைந்து போவதும் கார­ண­மா­கலாம்.

நீரி­ழிவு நோயுள்­ள­வர்­களின் பாதத்தின் நரம்­பு­களும் தசை­களும் பலவீ­ன­ம­டை­வ­தாலும் ஏற்­பட வாய்ப்­புண்டு.

சில­ரது பாதங்கள் பிறப்­பி­லேயே தட்­டை­யாக இருப்­ப­துண்டு. மாறாக வேறு சில­ருக்கு பாதத்தின் வளைவு அதீ­த­மாக இருப்­பதுண்டு. இவர்­க­ளுக்கும் குதிக்கால் எலும்புத் துருத்தல் ஏற்­படக் கூடும்.

சிகிச்சை

குதிக்கால் சவ்வு அழற்சி மற்றும் குதிக்கால் எலும்பு துருத்தல் இரண்டும் வேறு வேறான நோய்­க­ளாக இருந்­த­போதும் அவை ஏற்­ப­டு­வ­தற்­கான கார­ணங்­களும் அவற்றின் அறி­கு­றி­களும் ஒரே வித­மா­ன­வைதான்

எனவே சிகிச்­சையும் ஒரே மாதி­ரி­யா­ன­துதான்.

முக்­கி­ய­மா­னது நோய் ஏற்­பட்ட பகு­திக்கு சற்று ஓய்வு கொடுப்­ப­தாகும். குதிக்கால் பகு­தியில் உள்ள தசை­க­ளுக்கும் சவ்­வு­க­ளுக்கும் கடு­மை­யான வேலை கொடுப்­பதை சில தினங்­க­ளுக்கு தவிர்க்க வேண்டும். இதன் அர்த்தம் படுத்துக் கிடப்­ப­தில்லை. கடு­மை­யான உடற் பயிற்­சிகள், அதிக நடை போன்­ற­வற்றைக் குறைக்க வேண்டும்.

வலி அதி­க­மாக இருந்தால் ஐஸ் பை வைப்­பது உதவும்.

அத் தசை­நார்­க­ளுக்­கான சில பயிற்­சி­களும் உதவும். இவை பற்றி முன்னர் வீர­கே­ச­ரியில் வெளி­வந்த ஒரு கட்­டு­ரையில் சொல்­லி­யுள்ளேன்.

­வலி நிவா­ரணி மாத்­தி­ரை­களும் அழற்­சியைத் தணிப்­பதன் மூலம் நோயையும் வலி­யையும் குறைக்கும்.மிகப் பெரும்­பா­லா­ன­வர்­க­ளுக்கு மேற் கூறிய சிசிக்­சைகள் மூலம் வலி தணிந்­து­விடும்.மிக அரி­தாக குதிக்கால் சவ்­வி­னது இறு­க் கத்தைத் தளர்த்­து­வ­தற்கு சிறிய சத்­தி­ர­சி­கிச்சை செய்­யப்­ப­டு­வ­துண்டு. ஆரம்­பத்தில் நோயாளி கேட்­டது போல துருத்தி வளரும் எலும்பை வெட்டி எறிவது சிகிச்சையின் ஒரு அம்சம் அல்ல.

டொக்டர்.எம். கே.முரு­கா­னந்தன்
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக