அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 12 ஆகஸ்ட், 2014

எக்ஸெல் டிப்ஸ்

முழுக்கிழமையும் முதல் எழுத்தில்: எக்ஸெல் ஒர்க்ஷீட்டில், ஏதேனும் ஒரு செல்லில், வார நாட்களை டைப் செய்தால், அதன் முதல் எழுத்தைப் பெரிய எழுத்தாக (capital) தானாக மாறும் வசதி தரப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக, நீங்கள் "wednesday” என டைப் செய்தால், அது தானாகவே "Wednesday” என மாறும். இது உங்கள் எக்ஸெல் புரோகிராமில் மாற்றப்படவில்லை என்றால், அதனை இயக்கக் கீழே குறித்துள்ளபடி செயல்படவும்.



1. Excel Options டயலாக் பாக்ஸை முதலில் இயக்கவும். எக்ஸெல் 2007 தொகுப்பில், ஆபீஸ் பட்டனை அழுத்தி, எக்ஸெல் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 எனில், ரிப்பனுடைய File டேப்பினைத் தேர்ந்தெடுத்து பெறலாம்.

2. டயலாக் பாக்ஸின் இடது புறத்தில், உள்ள Proofing என்பதில் அடுத்து கிளிக் செய்திடவும்.

3. இங்கு உள்ள Auto Correct Options பட்டனில் கிளிக் செய்திடவும். இப்போது எக்ஸெல் Auto Correct டயலாக் பாக்ஸினைக் காட்டும்.

4. இதில் Capitalize Names of Days என்று உள்ள இடத்தில் செக் பாக்ஸினைக் காணவும். இந்த வசதி உங்களுக்குத் தேவை எனில், இதில் டிக் அடையாளத்தினை அமைக்கவும். வேண்டாம் என்று விரும்பினால், அடையாளத்தை எடுத்துவிடவும்.

டாஸ்க் பாரில் ஒர்க்புக் இடம் பெற: எக்ஸெல் தொகுப்பில் பணியாற்றுகையில், அதில் உருவாக்கப்படும் ஒர்க்புக்குகள், டாஸ்க்பாரில் எப்படி காட்டப்பட வேண்டும் என்பதனை நாம் முடிவு செய்து, நம் விருப்பப்படி செட் செய்திடலாம். நாம் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட ஒர்க்புக்குகளை இயக்கிக் கொண்டிருந்தாலும், இவை அனைத்தும் ஒரே ஒரு பட்டனில் அடங்கி டாஸ்க்பாரில் காட்சி அளிக்குமாறு செய்திடலாம். அல்லது, ஒவ்வொரு ஒர்க்புக்கிற்கும் ஒரு பட்டன் இருக்குமாறு செய்திடலாம். இதனைக் கீழே குறிப்பிட்ட வகையில் செட் செய்திடலாம்.

1. Excel Options டயலாக் பாக்ஸை முதலில் இயக்கவும். எக்ஸெல் 2007 தொகுப்பில், ஆபீஸ் பட்டனை அழுத்தி, எக்ஸெல் ஆப்ஷன்ஸ் என்பதில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் 2010 எனில், ரிப்பனுடைய File டேப்பினைத் தேர்ந்தெடுத்து பெறலாம்.

2. இந்த டயலாக் பாக்ஸில் இடது பக்கம் Advanced என்று இருக்கும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.

3. இதில் தொடர்ந்து கீழாகச் சென்றால், அங்கு Display குரூப் என்று ஒரு பிரிவினைக் காணலாம்.

4. இங்கு Show All Windows in the Taskbar என்று ஓர் ஆப்ஷன் கிடைக்கும். இதில் டிக் செய்தால், நீங்கள் விரும்பியபடி தனித்தனியே ஒவ்வொரு ஒர்க் புக்கிற்கும் ஒரு பட்டன் டாஸ்க்பாரில் காட்சி அளிக்கும்.

5. டிக் செய்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

எக்ஸெல் வரிசை வகை மாற்றம்: எக்ஸெல் ஒர்க் ஷீட் ஒன்றை உருவாக்கியிருப்பீர்கள். தொடர்ந்து வரும் டேட்டாவை கணக்கிட்ட பின்னர் நெட்டு வரிசையில் உள்ளதைப் படுக்கை வரிசையிலும், படுக்கை வரிசையில் உள்ளதை நெட்டு வரிசையிலும் மாற்றினால் இன்னும் சிறப்பாக இருக்கும் என நீங்கள் திட்டமிடலாம். அல்லது ஏதேனும் ஒரு வகையில் உள்ளதை மட்டும் மாற்றி அமைக்க இன்னொரு ஒர்க் ஷீட்டில் எண்ணலாம். இதனை எப்படி மாற்றுவது? நான்கு அல்லது பத்து செல்கள் என்றால் ஒவ்வொன்றாக டைப் செய்துவிடலாம் என்று நீங்கள் முயற்சிக்கலாம். இதுவே அதிகமான எண்ணிக்கையில் செல்கள் உள்ள ஒர்க் ஷீட்டாக இருந்தால் என்ன செய்வது?

எக்ஸெல் இதற்கு அருமையான ஒரு வழி தந்துள்ளது. எந்த செல்களில் உள்ளதை மாற்ற வேண்டும் என திட்டமிடுகிறீர்களோ அந்த செல்கள் அனைத்தையும் தேர்ந்தெடுங்கள். பின் கண்ட்ரோல்+சி அழுத்தி காப்பி செய்திடுங்கள். அடுத்து எங்கு மாற்றத்துடன் வரிசையை அமைக்க வேண்டுமோ அந்த இடத்தில் முதல் செல்லுக்குச் செல்லுங்கள். பின் ALT + E + S அழுத்துங்கள்.அல்லது எடிட் மெனு சென்று பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் பிரிவில் கிளிக் செய்திடுங்கள். இப்போது பேஸ்ட் ஸ்பெஷல் என்னும் சிறிய விண்டோ கிடைக்கும். இதில் பல ஆப்ஷன்ஸ் தரப்பட்டிருக்கும். எல்லாவற்றிற்கும் கீழாக ட்ரான்ஸ்போஸ் (Transpose) என்று ஒரு ஆப்ஷன் கிடைக்கும். அதனைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்தால் நீங்கள் எதிர்பார்த்தபடி மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக