https://www.virustotal.com என்பது அந்த தளத்தின் பெயர். பொதுவாக, சில அண்மைக் காலத்திய வைரஸ்களை, ஒரு சில ஆண்ட்டி வைரஸ் தொகுப்புகள் சரியாகக் கணிக்காமல், வைரஸ் இல்லை என்ற தகவலைத் தரும். ஒரு சில புரோகிராம்கள் வைரஸ் இருப்பதனை அறிவிக்கும். இந்த தளத்திற்கு பைலை அனுப்பினால், 45 வெவ்வேறான ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் மூலம் சோதனை செய்யப்பட்டு, வைரஸ் உள்ளதா என்ற தகவல் தரப்படும். ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் வைரஸ் உள்ளது என்று அறிவித்தால், உடனே அதனைத் திறப்பதனை நிறுத்திவிட வேண்டும். அடுத்து அதனை முற்றிலுமாக அழித்துவிட வேண்டும்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக