அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 14 அக்டோபர், 2014

முல்லையில் கிணற்றுக்குள் குழந்தை, காப்பாற்றிய சிப்பாய்கள்!

முல்லைத்தீவு மாவட்டத்தில் கெப்பிலாறு பிரதேசத்தில் உள்ள பாதுகாப்பற்ற, 30 அடி ஆழ கிணற்றுக்குள் தவறி விழுந்த ஒரு வருடமும் இரண்டு மாதங்களும் நிறைந்த பெண் குழந்தை ஒன்று இராணுவத்தால் காப்பாற்றப்பட்டு உள்ளது.



முல்லைத்தீவு கட்டளைத் தலைமையகத்துக்கு உட்பட்ட சிப்பாய்கள் நால்வர் குழந்தையை காப்பாற்ற மிக வேகமாக செயற்பட்டனர். குறிப்பாக சார்ஜன் டபிள்யூ. ஏ. என். பி விஜேசிங்க கிணற்றுக்குள் இறங்கி குழந்தையை மீட்டார்.

குழந்தைக்கு முதலுதவி வழங்கப்பட்டு பின்னர் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டது.

குழந்தையின் நிலை முன்னெற்றகரமாக உள்ளது, குழந்தைக்கு அதிர்ச்சியில் இருந்து மீள்கின்றமைக்கான சிகிச்சை வழங்கப்பட்டது என்று வைத்தியசாலைப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக