அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 27 அக்டோபர், 2014

வடக்குக்கு போகும் புலம்பெயர் தமிழர் மீது மட்டுப்பாடு நீக்கம்!

வெளிநாட்டு கடவுச்சிட்டு உடையவர்கள் வட மாகாணத்துக்கு செல்கின்றமைக்கு முன்பாக பாதுகாப்பு அமைச்சில் பதிவு மேற்கொள்ள வேண்டும், ஆனால் இலங்கையில் பிறந்தவர்களை பொறுத்த வரை இச்சட்டம் கடுமையாக பிரயோகிக்கப்பட மாட்டாது என்று விளக்கம் தரப்பட்டு உள்ளது.



இலங்கையில் பிறந்தவர்கள் வடக்கில் உள்ள குடும்ப உறுப்பினர்களை பார்வையிடுகின்ற செல்கின்றபோது பாதுகாப்பமைச்சின் முன் அனுமதியை பெற தேவை இல்லை, ஆனால் சுற்றுலா பயணத்துக்கு அல்லது ஏதேனும் நிகழ்ச்சித் திட்டங்களோடு சம்பந்தப்பட்டு வடக்குக்கு செல்பவர்களே அனுமதி பெற வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளார்கள்.

வடக்கில் உள்ள குடும்பத்தினரை மிக நீண்ட காலத்துக்கு பின்னர் காண வருகின்ற இலங்கையர்களுக்கு சிரமம் கொடுப்பது இச்சட்டத்தின் நோக்கம் அல்ல, ஆனால் இவர்கள் முன் அனுமதியை பெற்று வடக்குக்கு செல்கின்றமை வரவேற்கப்படும், ஆனால் இவர்கள் முன் அனுமதியை பெறாதபோதிலும் இராணுவத்தால் தடுக்கப்பட மாட்டார்கள் என்று இவ்வதிகாரிகள் கூறினார்கள்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக