அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 3 நவம்பர், 2014

நயன், ஹன்சிகாவை உயிருக்கு உயிராக காதலித்தேன், ஆனால் அவர்களோ: சிம்பு


நயன்தாராவையும், ஹன்சிகாவையும் தான் உயிருக்கு உயிராக காதலித்ததாகவும் அவர்கள் தான் தன்னை புரிந்து கொள்ளவில்லை என்றும் சிம்பு தெரிவித்துள்ளார். சிம்பு, நயன்தாராவை காதலித்தார், முத்தமிட்டார், போட்டோ எடுத்தார்கள், இணையதளத்தில் வெளியானது, பெரும் பரபரப்பு ஏற்பட்டது.



சிம்பு, நயன்தாரா காதல் முறிந்து போனது. அதன் பிறகு சிம்பு ஹன்சிகாவை காதலித்தார், பிரிந்தார். இது அனைத்தும் உங்களுக்கு தெரிந்தது தான்.

இந்நிலையில் இது குறித்து சிம்பு கூறுகையில்,

நான் நயன்தாராவையும், ஹன்சிகாவையும் உயிருக்கு உயிராக காதலித்தேன். அவர்கள் தான் மதம் மாறுவது போன்று எளிதில் மாறி மனதை மாற்றிக் கொண்டார்கள்.

நயன்தாரா, ஹன்சிகா இருவருமே நான் அவர்கள் மீது வைத்திருந்த உண்மை காதலை புரிந்து கொள்ளவில்லை.

நானும், நயன்தாரவும் இது நம்ம ஆளு படத்தில் நடித்தாலும் பழைய நட்பு இல்லை.

காதல் முறிவுக்கு பிறகு நயன்தாரா மற்றும் ஹன்சிகாவை பார்த்தால் ஒரு ஹலோ சொல்வதோடு சரி பேசுவது இல்லை. அதற்கு காரணம் அவர்கள் என்னை புரிந்து கொள்ளவில்லை.

சினிமா துறையில் என் நெருங்கிய தோழி என்றால் அது த்ரிஷா தான். அவருடன் தான் பல ஆண்டுகளாக நல்ல நட்பு உள்ளது. நாங்கள் அவ்வப்போது சந்தித்து பேசுவோம் என்றார் சிம்பு.

Thatstamil

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக