அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 3 டிசம்பர், 2014

புதிய வடிவம் பெறும் ஏ.கே.- 47

ரஷ்யாவின் ஏ.கே.- 47 துப்பாக்கி உற்பத்தி யாளர்கள் அதன் வடிவத்திலும் வர்த்தக முத்திரையிலும் புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர். மொஸ்கோவில் நடந்த வர்த்தக கண்காட்சியில் ஏ.கே.- 47 புதிய வடிவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.



உக்ரைன் விவகாரத்தில் ரஷ்யா மீது மேற்குலகம் பொருளாதார தடைகளை விதித்திருக்கும் நிலையில் மேற்படி துப்பாக்கி உற்பத்தி நிறுவனம் பாரிய பின்னடைவை சந்தித்திருக்கும் சூழலிலேயே இந்த மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. கலஷ்னிகோவ் அல்லது ஏ.கே.- 47 உலகின் பெரும்பாலானோரால் அங்கீகரிக்கப் பட்ட துப்பாக்கி ரகமாகும்.

ஏனைய துப்பாக்கிகளுடன் ஒப்பிடுகையில் அதிக விலை குறைந்ததும், பராமரிப்பதற்கு இலகுவானதாகவும் இருப்பதால் ஆசிய மற்றும் ஆபிரிக்காவின் கெரில்லா போராளி கள் மற்றும் தேசிய இராணுவங்களிலும் அதிக பிரபலமானதாகும்.

 Mikhail Kalashnikov
100 மில்லியனுக்கும் அதிகமான ஏ.கே.- 47கள் உலகெங்கும் விற்பனையாகி இருப்ப தாக நம்பப்படுகிறது. இந்த துப்பாக்கியை கண்டுபிடித்த சோவியட் படையின் லெப்டி னன்டஜெனரல் மிகைல் கலஷ்னிகோவ் கடந்த ஆண்டு மரணமடைந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற வர்த்தக கண்காட்சியில் ஏ.கே.- 47 உற்பத்தி நிறுவனமான கலஷ்னிகோவ் கொன்சேர்ன், கே மற்றும் சி ஆங்கில எழுத்துக்கள் கொண்ட துப்பாக்கியின் புதிய முத்திரையை அறிமுகம் செய்தது. இறுக்கமான கறுப்பு நிற ஆடை அணிந்த பெண்கள் ஏ.கே.- 47இன் புதிய தோட்டா உறையை அறிமுகம் செய்தனர்.

அத்தோடு துப்பாக்கி நிறுவனம் இரு புதிய சுலோகங்களையும் இந்த கண் காட்சியில் பயன்படுத்தி இருந்தது. "அமை தியின் காவலன்" என்ற சுலோகம் ஆங் கிலத்தில் எழுதப்பட்டிருந்ததோடு "அமை தியின் ஆயுதம்" என்று ரஷ்ய மொழியில் எழுதப்பட்டிருந்தது. 2014 ஆம் ஆண்டு 140,000 துப்பாக்கிகள் விற்கப்பட்டதாக அந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டு மடங்காகும். புதிய வடிவம் மற்றும் முத்திரைகள் மூலம் 2020 ஆம் ஆண்டில் 300,000 ஆயுதங்களை உற்பத்தி செய்ய எதிர்பார்ப்பதாக கலஷ்னி கோவ் கொன்சேர்ன் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் அலக்சி கிரிவொருச்கோ குறிப்பட்டுள்ளார்.

ரஷ்யா மீதான மேற்குலகின் பொருளாதார தடையால் அமெரிக்கா மற்றும் கனடா வுக்கான 200,000 துப்பாக்கி ஏற்றுமதி முடங்கியுள்ளது. இந்த தடையால் துப்பாக்கி விளம்பரத்தில் தோன்றும் ஹொலிவுட் நடிகர் ஸ்டீவ் சீகலும் ஒப்பந்தத்தை ரத்துச் செய் துள்ளார்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக