அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 4 டிசம்பர், 2014

அவதூறு அமைச்சரை கண்டித்த பிரதமர் மோடி:

இந்தியாவில் மதத்துவேஷத்தை தூண்டும் வகையில் பேசிய இந்து கடும்போக்கு அமைச்சர் ஒருவரை கண்டித்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்கள், ஆனால், அவரை பதவி விலக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.



இந்து பெண் துறவியாகவும் இருக்கும் நிரஞ்சன் ஜோதி என்ற அந்த அமைச்சர், ஞாயிறன்று ஒரு கூட்டத்தில் பேசுகையில், வாக்காளர்கள், ''தாம் இந்துக் கடவுளான ராமரின் குழந்தைகளால் ஆளப்பட வேண்டுமா, அல்லது தகப்பன் பெயர் தெரியாதவர்களால் ஆளப்பட வேண்டுமா என்று தாமே முடிவு செய்ய வேண்டும்'' என்று கூறியிருந்தார்.

அவர் பின்னர் அதற்காக வருத்தம் தெரிவித்திருந்தார்.

அந்த அமைச்சரின் பேச்சுடன் தான் முற்றாக முரண்படுகின்ற போதிலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரது மன்னிப்பை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நாடாளுமன்றத்தில் மோடி கூறியுள்ளார்.

BBC Tamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக