அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 27 டிசம்பர், 2014

வேர்ட் டிப்ஸ்..... டூல்பாரினை விருப்பபடி மாற்ற

டூல்பாரினை விருப்பபடி மாற்ற

வேர்டில் மெனு பார் பல டூல் பார்களுடன் காட்சி அளிக்கிறது. இதனை நம் விருப்பப்படி அமைத்திடும் வகையில் வளைந்து கொடுக்கும் தன்மையினை வேர்ட் அளித்திருக்கிறது. எடுத்துக் காட்டாக, டூல்பாரில் உள்ள படத்தை மாற்றி அமைக்கலாம். அதில் உள்ள சொற்கள் வேண்டாம் என்றால் எடுத்துவிடலாம்.

இதனை எப்படி மேற்கொள்ளலாம் என்று பார்க்கலாம்.


1. வேர்ட் தொகுப்பை இயக்கியபின், ஸ்கிரீனில் தெரியும் டூல்பாரில், மாற்ற விரும்பும் டூல்பாரில் ரைட்கிளிக் செய்திடவும். வேர்ட் உடனே ஒரு காண்டெக்ஸ்ட் மெனு (Context Menu) ஒன்றை அளிக்கும்.

2. இந்த மெனுவில் கீழாக உள்ள Customize என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். உடன் வேர்ட் கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸைக் காட்டும். இதில் Toolbars என்ற டேப் செலக்ட் செய்யப்பட்டிருக்கும்.

3. இனி மீண்டும் வேர்ட் மெனு பார் சென்று மாற்ற விரும்பிய டூல்பார் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். இவை எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம்.

4. இப்போது வேறு வகையான காண்டெக்ஸ்ட் மெனு கிடைக்கும். இதில் Change Button Image என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். உடன் வேர்ட் நீங்கள் தேர்ந்தெடுக்க பல கிராபிக் இமேஜ்களைக் காட்டும்.

5. எந்த கிராபிக் இமேஜைத் தற்போதுள்ள படத்திற்குப் பதிலாகப் பயன்படுத்த விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.

6. இனி அதில் உள்ள டெக்ஸ்ட் உங்களுக்கு வேண்டாம் என்றால் தொடர்ந்து கீழே தரப்பட்டுள்ள வழிகளைப் பின்பற்றவும். இல்லை என்றால் 9ல் தரப்பட்டுள்ள செயலுக்குச் செல்லவும்.

7. மீண்டும் மாற்ற விரும்பும் டூல்பார் பட்டனில் ரைட் கிளிக் செய்திடவும். Context Menu கிடைக்கும்.

8. Context Menu வில் Default Style என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இனி டூல்பார் பட்டனில் இமேஜ் மட்டும் இருக்கும்.

9. Customize டயலாக் பாக்ஸிலிருந்து வெளியேற குளோஸ் பட்டனை அழுத்தவும்.

இனி நீங்கள் மேற்கொண்ட மாற்றங்கள் அனைத்தும் செயல்படுத்தப்பட்டிருப்பதனைக் காணலாம்.

சம உயரத்தில் டாகுமெண்ட் வரிகள்

வேகுமெண்ட் அமைத்த பின்னர், சில வேளைகளில், ஒரு பாராவில் அனைத்து வரிகளும் ஒரே உயரத்தில் இல்லாமல் அமைக்கப்பட்டிருப்பதனைக் காணலாம். இதற்குக் காரணம், நாம் தேர்ந்தெடுத்துள்ள எழுத்துருக்கேற்ற வகையில், வரிகளுக்கிடையேயான உயரம் அமைக்கப்படாததே காரணம். பாரா பார்மட்டிங் டயலாக் பாக்ஸ் மூலம், தானாக லைன் ஸ்பேசிங் அமைக்கும் (Auto line spacing) முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், வேர்ட், வரியில் உள்ள மிகப் பெரிய எழுத்துருவினைக் கண்டறிந்து, அதன் அளவிற்கேற்ப, அதற்கேற்ற வகையில் வரிகளுக்கிடையேயான இடைவெளியை அமைக்கிறது. ஒரு வரியில் உள்ள எழுத்துருவுக்கும், அடுத்த வரியில் உள்ள எழுத்துருவிற்கும் அளவில் வித்தியாசம் இருந்தால், வரிகளுக்கிடையேயான இடைவெளி வேறுபாடாக அமைகிறது. இந்த பிரச்னைக்குத் தீர்வு காண, வரிகளுக்கிடையேயான இடைவெளியைச் சரியாக நாமே அமைக்க வேண்டும். இதற்கு ஒரு வழி உள்ளது. நாம் எந்த அளவில் எழுத்துருவினைத் தேர்ந்தெடுக்கிறோமோ, அதன் அளவில் 120 சதவீத அளவில் வரிகளுக்கிடையே இடைவெளி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக டைம்ஸ் ரோமன் எழுத்துருவில் 10 பாய்ண்ட் அளவில் எழுத்துக்களைப் பயன்படுத்தினால், வரிகளுக்கான இடைவெளி 12 பாய்ண்ட்களாக இருக்க வேண்டும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக