“புலிகளிடம் அடகு வைத்த நகைகள் திருப்பிக் கிடைக்குமென நாங்கள் கனவிலும் நினைந்திருக்கவில்லை. மோதல் இடம்பெற்ற பகுதியிலிருந்து நகைகளை மீட்டு அதனை உரியவர்களிடம் ஒப்படைக்கும் ஒரே நாடு உலகத்திலேயே இலங்கை மட்டுமாகத்தான் இருக்கும்” என மன்னார் அடம்பன் பிரதேசத்திலிருந்து நேற்று கொழும்பு வந்த காந்தன் செபஸ்டியன் தெரிவித்தார்.
புலிகளின் வங்கிகளில் அடகு வைக்கப்பட்டிருந்த நிலையில் பாதுகாப்புப் படையினரால் மீட்டெடுக்கப்பட்ட தங்க ஆபரணங்களில் அடையாளம் காணப்பட்ட மேலும் 2184 பொதிகள் நேற்று அதன் உரிமையாளர்களிடம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் கையளிக்கப்பட்டன.
இதற்காக வடமாகாணத்தின் 05 மாவட்டங்களிலிருந்தும் நேற்று 1960 உரிமையாளர்கள் நான்கு விசேட ரயில்கள் மூலம் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டனர். இதன்போது வவுனியா - கொழும்பு ரயில் மூலம் நேற்று நண்பகல் கொம்பனித்தெரு ரயில் நிலையத்திற்கு வருகை தந்திருந்த செபஸ்டியன் என்பரே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அடம்பன் பிரதேசத்தை சேர்ந்த ஜெயசீலன் என்னும் விவசாயி கூறுகையில், “யுத்தம் காரணமாக நாம் இடம்பெயர்ந்த போது பணக் கஷ்டத்தை நிறைவு செய்வதற்காக எமது நகைகளை புலிகளிடம் அடகு வைத்தோம். எமது நகைகளை மீட்டு அதனை எம்மிடம் ஒப்படைப்பதற்காக செலவழித்து கொழும்புக்கு வரவழைத்து மூன்று நேர உணவளித்த ஜனாதிபதிய வர்களுக்கு நாம் என்றென்றும் நன்றியுடையவர்களாக விருப்போம்” என்றார்.
விடத்தல் தீவைச் சேர்ந்த எட்வர்ட்ராசா மரியெனிட்டா தெரிவிக்கையில், “தாங்கள் எதிர்பாராத ஒரு நிகழ்வு நிறைவேறப் போவதையிட்டு குதூகலமாகவிருப்பதாக” கூறினார்.
விவசாயியான பொன்னுசாமி சிவக்குமார் “நாங்கள் அடகு வைத்திருந்த நகைகளை மீட்க முடியாதிருந்தால் எம்மால் எதுவுமே செய்ய முடிந்திருக்காது. அந்த வகையில் எமக்கு கிடைத்த இந்த சந்தர்ப்பத்தை பெரும் அதிஷ்டமாக கருதுகின்றோம். எம்மைப்போன்றே புலிகளிடம் நகைகளை அடகு வைத்த பலர் பற்றுச்சீட்டின்றி தமது நகைகளை உறுதிப்படுத்த முடியா மலுள்ளனர். அவர்களது நகைகள் அல்லது அதற்கு பதிலான கொடுப்பனவையாவது வழங்க அரசாங்கம் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.
மன்னார் மாவட்டத்திலிருந்து மாத்திரம் சுமார் 400 பேர் நேற்று பிற்பகல் 1.45 மணியளவில் கொம்பனிவீதி ரயில் நிலையத்தை வந்தடைந்தனர்.
இவர்கள் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு சொந்தமான 23 பண் வண்டிகளில் இராணுவ பாதுகாப்புடன் அலரி மாளிகைக்கு அழைத்துச் செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக