சொற்களை எண்ணப் பல வழிகள்: எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பு 2003ஐ இன்னும் பயன்படுத்துகிறீர்களா! அதன் வேர்ட் தொகுப்பில் ஏதேனும் ஒரு டெக்ஸ்ட்டை உருவாக்கு கையில், அதில் உள்ள சொற்களின் எண்ணிக்கையைச் சரியாகத் தெரிய வேண்டி Word Count என்னும் வசதியைப் பயன்படுத்தலாம். எந்த ஒரு டூல் பாரில் ரைட் கிளிக் செய்தாலும் அதில் Word Count என்ற வசதி கிடைக்கும். ஒரு முறை கூட்டிப் பார்த்து விடை கிடைத்த பின்னர் மீண்டும் கூட்டிப் பார்க்க வேண்டும் என விரும்பினால் Recount என்ற பட்டன் கிடைக்கும்.
டெக்ஸ்ட் எதனையும் தனியாக செலக்ட் செய்யாத பட்சத்தில் முழு டெக்ஸ்ட்டின் சொற்களும் மீண்டும் எண்ணப்பட்டு விடை கிடைக்கும். உங்களுக்கு எத்தனை சொற்கள் என்று சொல்கின்ற சிறிய விண்டோவில் உள்ள சிறிய தலை கீழ் அம்புக் குறியினைக் கிளிக் செய்தால் மேலும் 5 விதமான விடைகள் இருக்கும். இடைவெளி இல்லாமல் எத்தனை கேரக்டர்கள் பயன் படுத்தப் பட்டுள்ளன, இடைவெளி யுடன் உள்ள கேரக்டர்களின் எண்ணிக்கை என்ன, எத்தனை வரிகள், எத்தனை பக்கங்கள் மற்றும் எத்தனை பக்கங்கள் என்ற விவரங்கள் காட்டப்படும். இது ஒரு புளோட்டிங் டூல் பாராக இருக்கும். இதனை மானிட்டரில் எந்த பகுதியில் வேண்டுமென்றாலும் இழுத்து வைத்துக் கொள்ளலாம். இந்த வசதியினை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் இந்த டூல் பாரினை இழுத்துச் சென்று மேலே உள்ள டூல்பாருடன் இணைத்துவிட்டால் அது அங்கேயே தங்கிவிடும்.
வேர்ட் 2007 பயன்படுத்தினால், எந்த டூலையும் நீங்கள் தேர்ந்தெடுக்கத் தேவையில்லை. டாகுமெண்ட்டின் கீழாக உள்ள அதன் ஸ்டேட்டஸ் பாரில், டாகுமெண்ட்டில் எத்தனை சொற்கள் உள்ளன என்பது எப்போதும் காட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். நீங்கள் குறிப்பிட்ட டெக்ஸ்ட்டைத் தேர்ந்தெடுத்து, அவை மொத்தம் எத்தனை என்று அறிய விரும்பினால், அங்கேயே அதுவும் காட்டப்படும். டாகுமெண்ட்டில் உள்ள மொத்த சொற்களில், எத்தனை சொற்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன என்று காட்டப்படும்.
பாரா வடிவமைப்பில் பார்மட் பெயிண்டர்: வேர்ட் தொகுப்பில் கூடுதல் பயன்களைத் தரும் ஒரு சாதனம் பார்மட் பெயிண்டர் என்னும் வசதி ஆகும். இதன் மூலம் ஒரு பாரா பார்மட்டினை இன்னொரு பாராவிற்கு மாற்றலாம். முதலில் எந்த பாராவின் பார்மட்டினைக் காப்பி செய்து இன்னொரு பாராவிற்கு மாற்ற விரும்புகிறீர்களோ அதனை செலக்ட் செய்திடவும். பின் டூல் பாரில் பார்மட் பெயிண்டர் என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். பின் எந்த பாராவில் இந்த பார்மட்டினைச் செலுத்த வேண்டுமோ அதனை தேர்ந்தெடுத்து கிளிக் செய்திடவும். இதே பார்மட்டைத் தொடர்ந்து காப்பி செய்திட பார்மட் பெயிண்டரில் டபுள் கிளிக் செய்திட வேண்டும். மீண்டும் பார்மட் பெயிண்டரை குளோஸ் செய்திடும் வரை இந்த பார்மட் தொடர்ந்து காப்பி ஆகும். குளோஸ் செய்திட பார்மட் பெயிண்டரில் இன்னொரு முறை கிளிக் செய்திட வேண்டும். அல்லது எஸ்கேப் கீயினை அழுத்த வேண்டும்.
வேர்ட் 2007 தொகுப்பில், பார்மட் பெயிண்டர் பெற, ஹோம் டேப்பில், கிளிப் போர்ட் பிரிவில், வலது மூலையில் இருக்கும் பார்மட் பெயிண்டர் சென்று, மேலே காட்டப்பட்டுள்ள மாற்றங்களைச் செயல்படுத்தலாம். இந்த ஐகான், பெயிண்ட் பிரஷ் ஐகானாகக் கிடைக்கும்.
வேர்ட் : ஹைலைட்டிங் கலர்: அச்சில் உள்ள ஆவணங்களைப் பயன்படுத்துகையில், முக்கியமான சில சொற்களை, ஹைலைட்டர் என்னும் பேனாவினால், வண்ணத்தில், சொற்களின் எழுத்துக்கள் தெரியும் வகையில் அமைப்போம். வேர்ட் தொகுப்பிலும் இதே போல் அமைக்கலாம். பல்வேறு வண்ணங்களில், சொற்களை குழுக்களாகப் பிரிக்கும் வகையில் அமைக்கலாம். தேவைப்படும்போது வண்ணங்களை மாற்றிக் கொள்ளலாம்.
இதற்குப் பயன்படும் டூலின் பெயர் ஹைலைட் டூல் (Highlight Tool). முதலில் வேர்ட் தொகுப்பில், மாறா நிலையில் இது மஞ்சள் வண்ணமாக இருக்கும். கலர் பிரிண்டரில் அச்சிட இது நன்றாக இருக்கும் என்பதால், இந்த வண்ணம் தரப்பட்டுள்ளது. இதனை மாற்ற விரும்பினாலும் மாற்றிக் கொள்ளலாம்.
மெனு பாரில் உள்ள ஐகான்களிடையே Ab என்ற எழுத்துக்களுடன், ஹைலைட்டர் பேனாவுடன் ஒரு ஐகான் தென்படும். இதன் அருகில் கர்சரைக் கொண்டு சென்று, கீழாக உள்ள அம்புக் குறியில் கிளிக் செய்தால், எந்த வண்ணம் வேண்டுமோ, அந்த வண்ணத்தினைத் தேர்ந்தெடுத்து அமைக்கலாம்.
வேர்ட் செல் டெக்ஸ்ட் மாற்றம்: வேர்ட் டேபிள் ஒன்றில், அதன் செல் கட்டங்களில் உள்ள டெக்ஸ்ட்டை எந்த வகையில் வேண்டுமானாலும் தோன்றும்படி மாற்றி அமைக்கலாம். எடுத்துக் காட்டாக, படுக்கை வசத்தில் இருப்பதனை, நெட்டு வாக்கில் அமைக்கலாம். இதற்குக் கீழ்க்காணும் வழிகளில் செயல்பட வேண்டும்.
1. எந்த செல்லில் உள்ள டெக்ஸ்ட்டை மாற்ற வேண்டுமோ, அந்த செல்லுக்குக் கர்சரைக் கொண்டு சென்று, ரைட் கிளிக் செய்திடவும். அப்போது Context menu ஒன்று கிடைக்கும்.
2. இந்த மெனுவில் Text Direction என்பதனைத் தேர்வு செய்திடவும். டெக்ஸ்ட் டைரக்ஷன் டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி, டெக்ஸ்ட் எந்த வகையில் மாற்றப்பட வேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எண்ணியபடி அமைத்த பின்னர், ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
இந்த செயல்பாட்டினை, வேர்ட் தரும் ரிப்பனில் உள்ள லே அவுட் டேப்பினைப் பயன்படுத்தியும் மேற்கொள்ளலாம். இதற்கும் மேலே கூறியபடி, கர்சரை செல்லில் வைத்திடவும். அடுத்து, ரிப்பனில், லே அவுட் டேப்பினைத் திறக்கவும். இதில் கிடைக்கும் Alignment group என்ற டூலினைத் திறக்கவும். நீங்கள் விரும்பும் வகையில், டெக்ஸ்ட் அமையும் வரை, இதில் கிளிக் செய்து கொண்டே இருக்கவும். டெக்ஸ்ட் குறிப்பிட்ட கோணத்தில் வந்தவுடன், வெளியேறி ஓகே கிளிக் செய்திடவும்.
டாகுமெண்ட்டில் திரைக்குள்ளாகச் செல்ல: வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைத் தயாரித்துக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் கர்சரை நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் திரையின் தொடக்கத்திற்குக் கொண்டு செல்ல எண்ணுகிறீர்கள். அதாவது திரையில் தெரியும் டெக்ஸ்ட் ஸ்கிரீன் நகரக் கூடாது. தெரிகின்ற வாக்கியங்களில் முதல் வாக்கியத்திற்குச் செல்ல வேண்டும். என்ன செய்திடலாம்? Home அழுத்தினால் வரியின் தொடக்கத் திற்கு மட்டுமே செல்லும். Ctrl + Home அழுத்தினால் அந்த ஆவணத் தின் தொடக்கத்திற்குச் செல் லும். திரையில் தெரியும் முதல் வாக்கியத்தின் தொடக்கத் திற்குச் செல்ல Alt + Ctrl + Page Up அழுத்திப் பாருங்கள். அதே போல் திரையில் தெரியும் பக்கத்தின் கீழ்ப்பாகத்திற்குச் செல்ல Alt + Ctrl + Page Down அழுத்தவும். வேர்ட் டாகுமெண்ட்டில் நாம் நினைத்தபடி குறிப்பிட்ட இடம் செல்ல இந்த குறிப்பின்படி செயல்படவும்.
கிழமையினை டைப் செய்திடவேர்டில் ஏதேனும் கிழமையை டைப் செய்திடுங்கள். கிழமைக்கான பெயர் முழுவதும் சிறிய எழுத்தில் டைப் செய்திடுங்கள். தானாக முதல் எழுத்து கேப்பிடல் எழுத்தாக மாற்றப்படும். “wednesday” என டைப் செய்தால் “Wednesday” என மாற்றப்படும்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக