அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 4 ஜனவரி, 2015

கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான 11 காரணங்கள்!!!

கர்ப்பம் என்பது எந்தளவிற்கு சந்தோஷத்தை தருமோ அதே அளவில் வருத்தமடையும் பல அறிகுறிகளையும் காட்டும். கடுமையான குமட்டல், வலியை ஏற்படுத்தும் மார்பக மற்றும் பாதங்களின் வீக்கம், கால் வலி போன்ற பலவற்றை சந்திக்க வேண்டியிருக்கும். சில கர்ப்பிணி பெண்கள் எதிர்ப்பாராத இரத்தக்கசிவையும் கூட பெறுவார்கள். கண்டிப்பாக அது ஒரு பயத்தை ஏற்படுத்தக் கூடிய தருணமாக இருக்கும்.



இருப்பினும் இது நடப்பதற்கு மருத்துவர்கள் பல்வேறு காரணங்களை கூறுகின்றனர். இது ஆபத்தானதாக கருதப்பட்டாலும் கூட, அனைத்து நேரங்களிலும் இதனால் குழந்தையை இழந்து விட மாட்டோம். அதனால் கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு இரத்த கசிவு ஏற்படுவதற்கான 11 காரணங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். இதனால் குழந்தைகளுக்கு என்ன ஆகப்போகிறது என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில், கர்ப்ப காலத்தில் இரத்த கசிவு என்பது இயல்பான ஒன்றே என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். சொல்லபோனால், 40% கர்ப்பிணி பெண்களுக்கு முதல் மூன்று மாதத்தில் இரத்த கசிவு ஏற்படும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இருப்பினும் இரத்தத்தின் தோற்றமே (நிறம், அடர்த்தி, அளவு) பிரச்சனையின் அளவையும் கூறி விடும். "கருமையான சிகப்பு அல்லது பழுப்பு நிற இரத்தம் என்றால் பழமையானதாகும். இதனால் கர்ப்பத்தின் மீது தாக்கம் இருக்காது. அதனை ஸ்பாட்டிங்காக கருதுவார்கள். இது இயல்பான ஒன்றே. இதனால் கர்ப்பத்திற்கு எந்த ஒரு ஆபத்தும் கிடையாது. பிங்க் நிற சளி இரத்தம் என்றால் அது கருப்பை வாயிலிருந்து வெளியேற்றல், சிராய்ப்பு அல்லது வேறு சில பிரச்சனைகளால் வந்திருக்கும். அடர்த்தியான இரத்தம் என்றால் அது நற்பதமான இரத்தமாகும். இரத்த கசிவின் அளவை பொறுத்து கர்ப்பத்தின் மீது அது தாக்கத்தை கொண்டிருக்கும்.

கரு பதித்தல் கசிவு: இயல்பான ஒன்று. கருவுற்ற முட்டை கருப்பையின் உட்பூச்சில் இணைக்கப்படும் போது இது ஏற்படும். கருத்தரித்த 10-14 நாட்களுக்கு பிறகு இந்த கசிவை காணலாம்.

குறைப்பிரசவம்: உங்கள் உடல் சீக்கிரமே பிரசவத்திற்கு தயாரானால் தான் குறைப்பிரசவம் ஏற்படும். உங்கள் பிரசவ தேதியில் இருந்து 3 வாரங்களுக்கு முன் அல்லது கருவுற்ற 20 வாரங்களுக்குப் பிறகு இது நடக்கும்.

தொற்று: STD-யினால் கருப்பை வாய் அல்லது பெண்ணுறுப்பில் தொற்று ஏற்படலாம். வெட்டை நோய் மற்றும் ஹெர்ப்ஸ் என்ற ஒரு வகை தோல் அழற்சி போன்ற நோய்களை பிரசவத்தின் போது உங்கள் குழந்தைக்கு நீங்கள் பரவிடச் செய்யலாம். உங்கள் நிலை மருத்துவருக்கு தெரிந்திருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். அதனால் இப்படி நோய் பரவுவதை தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளலாம்.

கருப்பைவாய் விழுது: பொதுவாக இடுப்பு சோதனையின் போது இது கண்டறியப்படும். ஈஸ்ட்ரோஜென் அளவுகளின் அதிகரிப்பு, அழற்சி அல்லது கருப்பை வாயில் அடைக்கப்பட்ட இரத்த குழாய்கள் போன்றவைகளால் கருப்பை வாய் விழுது வளரும். எளிமையான முறையில் இந்த விழுதுகளை நீக்கி விடலாம். அவை குழந்தைக்கும் ஆபத்தை ஏற்படுத்தாது. இவையால் கர்ப்பமான ஆரம்ப கட்டத்தில் இரத்த கசிவு ஏற்படலாம். ஆனால் முதல் மூன்று மாதம் கழித்து கருச்சிதைவு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவே.

கருச்சிதைவு: நிறமூர்த்தப் பிறழ்ச்சியால் வயிற்றில் உள்ள சிசு பாதிக்கப்பட்டிருந்தால், முதல் மூன்று மாதத்தில் கருச்சிதைவு ஏற்படுவதற்கு அதுவே முக்கிய காரணமாக விளங்கும். மரபணு பிறழ்ச்சி, தொற்றுக்கள், மருந்துகள், ஹார்மோன் தாக்கங்கள், கருப்பையின் கட்டமைப்பு பிறழ்ச்சி மற்றும் நோய் எதிர்ப்பு பிறழ்ச்சி போன்றவைகளும் பிற காரணங்களாக உள்ளது. கருச்சிதைவை யூகிக்கவோ, தடுக்கவோ எந்த ஒரு வழியும் இல்லை. ஆனால் இரத்த கசிவு ஏற்படும் போது படுக்கையில் ஓய்வாக இருப்பது அவசியமாகும். அதேப்போல் உடலுறவையும் தடுக்க வேண்டும். பெண்ணுறுப்பு பாதையில் இருந்து கசிவு ஏதேனும் உள்ளதா என்பதை பார்த்துக் கொள்ள வேண்டும். ஒரு வேளை இரத்த கசிவு நீடித்தால், வலி அதிகரித்தால், காய்ச்சல், சோர்வு, மயக்கம் போன்ற நிலை ஏற்பட்டால் உடனே மருத்துவரை அணுகுங்கள்.

நஞ்சுக்கொடி கீழே இறங்குதல்: மூன்றாம் மூன்று மாத காலத்தில் ஏற்படும் இரத்த கசிவிற்கான முக்கிய பொதுவான காரணம் இதுவாகும். கருப்பையின் கீழ்பகுதியில் நஞ்சுக்கொடி வளர்ந்து, கர்ப்பப்பை வாய் பாதையை மூடுவதால் இந்த பிரச்சனை தொடங்கும். இந்த பிரச்சனையை கண்டுபிடித்தவுடன் பெண்கள் படுக்கையில் ஓய்வு எடுக்க வைக்கப்படுவார்கள். அதேப்போல் இந்நேரத்தில் உடலுறவில் ஈடுபடவோ அல்லது கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபடவோ தடுக்கப்படுவார்கள். கர்ப்ப காலம் முடியும் வரை இந்த பிரச்சனை தீரவில்லை என்றால், கண்டிப்பான முறையில் அறுவை சிகிச்சை மூலமாக தான் குழந்தை வெளியே எடுக்கப்படும்.

நஞ்சுக்கொடி தகர்வு: கர்ப்பமாகும் பெண்களில் 1% பேர்களுக்கு, கர்ப்ப வாய் சுவற்றில் இருந்து நஞ்சுக்கொடி பிரிக்கப்படும். இதனால் நஞ்சுக்கொடிக்கும் கர்ப்ப வாய்க்கும் இடையே இரத்தம் சேரும். இதனை சீக்கிரமே கண்டறிவது கஷ்டமாகும். இதனை உடனேயே கண்டுபிடிக்காவிட்டால், திடீரென ஏற்படும் இரத்தம் மற்றும் ஆக்சிஜன் இழப்பால், சிசுக்கள் மரணத்தை தழுவலாம். மேலும் தீக்கும் இரத்தக் கசிவு அதிகரிக்கும்.

கருப்பை முறிவு: சென்ற அறுவை சிகிச்சையால் (சிசேரியன் அல்லது நார்த்திசுக் கட்டி அகற்றுதல்) தசைகள் வலுவிழந்தால், பிரசவத்தின் போது அந்த இடம் உடையும். இதனால் தாயின் வயிற்றிக்குள் குழந்தை தள்ளப்படும். உயிருக்கு ஆபத்தான நிலை இது. இந்நேரத்தில் தாயையும் சேயையும் காக்க மருத்துவர்கள் அவசர அறுவை சிகிச்சையை பரிந்துரைப்பார்கள்.

வழக்கமான இடத்துக்கு வெளியே ஏற்படும் கர்ப்பம்: கருப்பை வாய்க்கு வெளியே, கருமுட்டை குழாயில், கரு நடப்படலாம். கரு இங்கே வளர்ந்து அதனால் குழாய்கள் வெடித்தால், அது தாய்க்கு ஆபத்தாய் கொண்டு போய் முடியும். தாயின் பாதுகாப்பை கருதி, இவ்வகையான கர்ப்பம் நிலைக்காது.

கடைவாய்ப்பல் கர்ப்பம்: மிக மிக அரிதான நிலை இது. ஒரு சிசுவிற்கு பதில் கருமுட்டை பல்லாக வளர்வதால் இந்த நிலை ஏற்படும். இயல்பாக நடக்கும் கர்ப்ப அறிகுறிகள் தென்பட்டாலும் கூட, இதுவும் சாத்தியமாகாத கர்ப்பமாகும்.

குறுந்தசை கீழே இறங்குதல்: சிசுவின் இரத்த குழாய்கள் நஞ்சுக்கொடியில் வளர்ந்தால் அல்லது பிறப்பு பாதையை நஞ்சுக்கொடி தடுத்தால் இந்த அறிய நிலை ஏற்படலாம். இந்த இரத்த குழாய்கள் கிழியப்படலாம். அதனால் குழந்தைக்கு இரத்தக்கசிவு ஏற்பட்டு ஆக்சிஜனை இழக்கும். எனவே இது ஆபத்தான ஒரு நிலையாகும். கர்ப்பிணி பெண் பிரசவத்திற்கு செல்லும் போது, இந்த இரத்த குழாய்கள் வெடித்து, அதனால் இரத்த கசிவு ஏற்பட்டு, அது தாய்க்கும் சேய்க்கும் ஆபத்தாய் முடியும். நஞ்சுக்கொடி கீழே இறங்குதல் பிரச்சனையை போல் இதற்கும் அறுவை சிகிச்சையே பரிந்துரைக்கப்படும்.

Thatstamil
image source: google
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக