அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 3 ஜனவரி, 2015

மீண்டும் இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை வழங்கும் செயற்­றிட்டம் ஆரம்பம்

இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை வழங்கும் திட்டம் கடந்த வியா­ழக்­கிழமை முதல் மீண்டும் அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது என பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் மேல­திக செய­லாளர் தம­யந்தி ஜய­ரட்ன அறி­வித்­துள்ளார். பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் ஊடக மையத்தில் புதன்­கி­ழமை இடம் பெற்ற விசேட செய்­தி­யாளர் மாநாட்டின் போது இந்த அறி­விப்பு வெளியி­டப்­பட்­டுள்­ளது.



2009 ஆம் ஆண்டு யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து நாட்டில் அமை­தி­யான சூழல் உரு­வாக்­கப்­பட்­டது. இத­னை­ய­டுத்து வெளிநா­டு­களில் வாழும் இலங்­கை­யர்­க­ளுக்கு இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்கும் நடை­முறை அமு­லுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­டது. இந்தத் திட்­டத்தின் கீழ் யுத்தம் கார­ண­மாக புலம் பெயர்ந்து இந்­தியா உட்­பட வெளிநா­டு­களில் வாழும் இலங்­கை­யர்கள் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரி­மையைப் பெற்று பல­ன­டையும் நிலை ஏற்­பட்­டி­ருந்­தது.

புலம் பெயர்ந்த தமிழ் மக்­களில் பெரும்­ப­கு­தி­யினர் அந்­தந்த நாடு­களின் பிர­ஜா­வு­ரி­மை­களைப் பெற்று வாழ்ந்து வரு­கின்­றனர். கடந்த 30 வருட யுத்­தத்தின் போது பல இலட்­சக்­க­ணக்­கான தமிழ் மக்கள் அக­தி­க­ளாக கனடா, அமெ­ரிக்கா, ஐரோப்­பிய நாடுகள் என புலம் பெயர்ந்­தி­ருந்­தனர். இவ்­வாறு புலம் பெயர்ந்­த­வர்­களில் பெரு­ம­ள­வானோர் அந்­தந்த நாடு­களின் பிர­ஜா­வு­ரி­மை­களைப் பெற்­றுள்­ளனர். இவ்­வா­றா­ன­வர்கள் இலங்­கையில் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரி­மை­யினைப் பெறு­வ­தற்கு விருப்பம் கொண்­டுள்­ளனர்.

2009 ஆம் ஆண்டு நடை­மு­றைக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட இந்தத் திட்டம் 2011 ஆம் ஆண்டு இறு­திக்­கா­லப்­ப­கு­தியில் தற்­கா­லி­க­மாக இடை­நி­றுத்­தப்­பட்­டது. இதனால் இரட்டைப் பிர­ஜா­வு­ரி­மை­யினை வெளிநா­டு­களில் வாழும் இலங்­கை­யர்கள் பெற­மு­டி­யாத சூழல் ஏற்­பட்­டி­ருந்­தது. பெரு­ம­ள­வானோர் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பித்­தி­ருந்­த­போ­திலும், அந்த விண்­ணப்­பங்கள் பரி­சீ­ல­னைக்கு எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வில்லை.

யுத்தம் முடி­வ­டைந்­ததை அடுத்து புலம் பெயர்ந்த தமிழ் மக்­களை மீண்டும் நாட்­டுக்குள் அழைக்கும் செயற்­பாட்­டினை அர­சாங்கத் தரப்பு மேற்­கொண்­டது. புலம்பெயர் தமி­ழர்கள் இலங்­கையில் முத­லீ­டு­களை செய்­ய­வேண்­டு­மென்றும் பாதிக்­கப்­பட்ட மக்­க­ளுக்கு உத­வி­களை வழங்­க­வேண்­டு­மென்ற கோரிக்­கை­களும் முன்­வைக்­கப்­பட்­டன. மூன்று தசாப்­த­கா­ல­மாக முரண்­பட்­டி­ருந்த போதிலும் யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்­ட­தை­ய­டுத்து தமது நாட்­டுக்குத் திரும்பி முத­லீ­டு­களில் உத­வி­க­ளையும் செய்­வ­தற்கு பெரு­ம­ள­வான புலம் பெயர் தமி­ழர்கள் விருப்பம் கொண்­டி­ருந்­தனர்.

இதற்­கி­ணங்க இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரி­மைக்கும் பெரு­ம­ள­வானோர் விண்­ணப்­பித்­தி­ருந்­தனர். ஆனால் திடீ­ரென 2011 ஆம் ஆண்டு இந்தச் செ­யற்­பாடு இடை­நி­றுத்­தப்­பட்­டது. தற்­போது மீண்டும் இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை வழங்கும் நடை­முறை அமு­லுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளமை வர­வேற்­கத்­தக்க செயற்­பா­டே­யாகும். ஆனாலும் புதிய கட்­டுப்­பா­டு­க­ளு­ட­னேயே இந்த நடை­முறை அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

வெளிநா­டு­களில் வாழும் இலங்­கை­யர்கள் உள்­நாட்டில் மீண்டும் வாழ வேண்­டு­மெ­னவும் தங்­க­ளது பிள்­ளைகள் அரச பாட­சாலை­களில் கல்வி பயில வேண்டும் எனவும் ஜனா­திபதி மற்றும் பாது­காப்புச் செய­லா­ள­ரிடம் கேட்­டுக்­கொண்­ட­தற்­கி­ணங்க இத்­திட்டம் மீண்டும் அர­சாங்­கத்­தினால் மீள ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளது. முன்னர் இருந்­தது போல் இல்­லாமல் இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை புதிய விதி­மு­றை­க­ளுக்கு அமைய நேர்­முகப் பரீட்­சைகள் நடத்­தப்­பட்டு வழங்­கப்­படும் என்று பாது­காப்பு மற்றும் நகர அபி­வி­ருத்தி அமைச்சின் மேல­திக செய­லாளர் தம­யந்தி ஜய­ரட்ன தெரி­வித்­துள்ளார்.

இரட்டைப் பிர­ஜா­வு­ரிமை பெறு­வ­தற்­கான விதி­மு­றைகள் பற்றி அவர் மேலும் விளக்­க­ம­ளிக்­கையில் இரட்டைப் பிர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிக்கும் விண்­ணப்­பங்கள் சம்­பந்­தப்­பட்ட நாடு­க­ளுக்­கு­ரிய உயர்ஸ்­தா­னிகர் அல்­லது வெளிநாட்டுத் தூது­வரின் உறு­திப்­ப­டுத்­த­லுடன் வழங்­கப்­ப­ட­வேண்டும். அத்­துடன் விண்­ணப்­ப­தா­ரியின் இரட்டை பிர­ஜா­வு­ரி­மைக்­கான தகு­தியும் இவர்­களால் அனு­ம­திக்­கப்­ப­ட­வேண்டும். அமைச்­ச­ர­வையின் அங்­கீ­காரம் பெற்று விசேட குழு­வினால் விண்­ணப்­ப­தா­ரியின் தகைமை மற்றும் ஆவ­ணங்கள் பரி­சீ­லிக்­கப்­ப­டு­வ­துடன் ஆவ­ணங்­களில் நம்­ப­கத்­தன்மை மற்றும் சம்­பந்­தப்­பட்ட நாட்டுத் தூது­வரின் பரிந்­து­ரையின் பேரில் இரண்டாம் கட்ட நட­வ­டிக்­கைகள் மேற்­கொள்­ளப்­படும். இரண்டாம் கட்­ட­மாக விண்­ணப்­ப­தாரி ஒரு நேர்­மு­கப்­ப­ரீட்­சைக்கு முகம் கொடுப்­ப­துடன் நேர்­காணல் குழு­வினால் தமது விண்­ணப்பம் மற்றும் அனைத்து ஆவ­ணங்­களும் பரி­சீ­லனை செய்­யப்­பட்­டதன் பின்னர் ஜனா­தி­ப­தியின் அனு­ம­திக்­காக அனுப்­பி­வைக்­கப்­படும் என்று தெரி­வித்­தி­ருக்­கின்றார்.

தமது சொந்த நாட்­டுக்குத் திரும்பி தமது சமூ­கத்­திற்கும் நாட்­டுக்கும் உத­வி­களைப் புரி­வ­தற்கு புலம் பெயர்ந்த தமிழ் மக்கள் தயா­ரா­கவே உள்­ளனர். ஆனால் அதற்­கான நம்­பிக்­கையை ஏற்­ப­டுத்தும் செயற்­பா­டுகள் நாட்டில் இடம் பெறு­கின்­ற­னவா? என்ற கேள்வி தற்­போது எழுந்­துள்­ளது. புலம் பெயர்ந்த விடு­த­லைப்­பு­லி­களின் ஆத­ர­வா­ளர்கள் தொடர்ந்தும் நாட்­டுக்கு எதி­ராக செயற்­ப­டு­வ­தா­கவும் மீண்டும் விடு­த­லைப்­புலி­களை உயிர்ப்­பிக்க முனை­வ­தா­கவும், அர­சாங்கத் தரப்பில் குற்றம் சுமத்­தப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதி தேர்தல் அறி­விக்­கப்­பட்­டுள்ள நிலையில் தேர்தல் பிர­சா­ரங்­களின் போதும் இத்­த­கைய குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­தப்­பட்டே வரு­கின்­றன. ஆளும் ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அமைச்­சர்கள் பலரும் புலம் பெயர் புலி ஆத­ர­வா­ளர்­க­ளினால் நாட்­டுக்கு பெரும் பங்கம் ஏற்­ப­டப்­போ­கின்­றது. இதற்­கான திட்­டங்கள் தீட்­டப்­ப­டு­கின்­றன என்று தெரி­வித்து வரு­கின்­றனர். இத்­த­கைய ஒரு சூழ்­நி­லையில் புலம்பெயர் தமிழ் மக்கள் தமது எண்­ணங்­களை மாற்றி சொந்த நாட்­டுக்கு வந்து முத­லீ­டு­களை செய்­வ­தற்கு எவ்­வாறு முன்­வ­ரு­வார்கள் என்ற கேள்வி எழு­கின்­றது.

அத்­துடன் யுத்­தத்­தினால் பாதிக்­கப்­பட்ட தமிழ்­மக்கள் அர­சியல் தீர்­வொன்றை எதிர்­பார்த்து காத்­தி­ருக்­கின்­றனர். அர­சியல் தீர்­வுக்­கான முன்­மு­யற்­சிகள் எதுவும் எடுக்­கப்­பட்­ட­தாக தெரி­ய­வில்லை. புலம்பெயர்ந்த தமிழ் மக்­க­ளுக்கும் அர­சாங்கத் தரப்­பி­ன­ருக்­கு­மி­டை­யி­லான சந்­தே­கங்கள் மற்றும் முரண்­பா­டுகள் தீர்க்­கப்­பட்டால் மாத்­தி­ரமே புலம்பெயர் மக்கள் நாட்டைக் கட்­டி­யெ­ழுப்­பு­வ­தற்கு உதவும் நிலை ஏற்­படும்.

ஆனால், எமது நாட்­டை­ப்­பொ­றுத்­த­வ­ரையில் அர­சியல் சுய­ந­ல­னுக்­காக புலம்­பெயர் தமி­ழர்­களை சுட்­டிக்­காட்டி தமது வாக்­கு­களை அதி­க­ரிக்கும் செயற்­பா­டு­க­ளி­லேயே ஆளும் கட்­சி­யினர் ஈடு­பட்டு வரு­கின்­றனர். இந்த நிலையில் இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரிமை வழங்­கு­வ­தற்­கான செயற்­றிட்டம் மீண்டும் அமுல்­ப­டுத்­தப்­பட்­டுள்ள போதிலும் புலம்பெயர் தமி­ழர்கள் மீது சந்­தேகம் கொண்­டுள்ள அர­சாங்­கத்­த­ரப்பு இரட்­டைப்­பி­ர­ஜா­வு­ரி­மைக்கு விண்­ணப்­பிப்­ப­வர்­க­ளுக்கு அதனை வழங்க முன்­வ­ருமா என்­பதில் பெரும் சந்­தேகம் நில­வு­கின்­றது.

நாட்டில் தமிழ், சிங்­கள சமூ­கங்­க­ளி­டையே நிரந்­தர ஒற்­று­மையும் சமா­தா­னமும் ஏற்­பட வேண்­டு­மானால் தமிழ் மக்­களின் பிரச்­சி­னை­க­ளுக்கு உரிய அர­சியல் தீர்வு காணப்­ப­ட­வேண்டும். இத­னை­விடுத்து யுத்தம் முடி­வுக்குக் கொண்­டு­வ­ரப்­பட்ட நிலை­யிலும் புலம் பெயர்ந்த தமி­ழர்கள் அனை­வரும் புலி­களின் ஆத­ர­வா­ளர்கள் என நோக்­கு­வது எந்­த­வ­கை­யிலும் ஏற்­றுக்­கொள்­ளத்­தக்க செயற்­பா­டல்ல.

கடந்த சில மாதங்­க­ளுக்கு முன்னர் வட­ப­கு­திக்குச் செல்லும் வெளி நாட்­ட­வர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்படவேண்டும் என்ற நடைமுறை அமுலுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டிலிருந்து வரும் அந்த நாடுகளின் பிரஜாவுரிமை பெற்ற தமிழர்கள் அந்தர அவசரத்திற்கு கூட உடனடியாக வடபகுதி செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. அவர்கள் கொழும்புக்கு வந்து பாதுகாப்பு அமைச்சின் அனுமதியைப் பெற காத்திருக்கவேண்டிய சூழல் நிலவிவருகின்றது.

இந்த நடைமுறையும் புலம்பெயர் தமிழர்கள் மீதுள்ள சந்தேகத்தினால் மேற்கொள்ளப்பட்டதாக இருக்கலாம் என்று எண்ணவேண்டியுள்ளது. இவ்வாறு புலம்பெயர் தமிழர்கள் மீது தொடர்ந்தும் சந்தேகக் கண்கொண்டு பார்ப்பதனால் இரு சமூகங்கள் மத்தியிலும் நல்லெண்ணத்தினை உடனடியாக ஏற்படுத்திவிட முடியாது. தற்போது இரட்டைப்பிரஜாவுரிமை வழங்கும் செயற் பாட்டை ஆரம்பித்தது போன்று புலம் பெயர் தமிழர்களின் நம்பிக்கையை பெறும் வகையில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்தால் அது நாட்டுக்கு நன்மை அளிக்கும்.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக