அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 18 பிப்ரவரி, 2015

'பேஸ் புக்'கில் வலை விரித்தாள்... கரம் பிடித்தேன்... கரு கலைத்து பறந்து போனாள்! 'ஜிம்' நடத்தி வரும் வாலிபர் 'ஜம்'மென ஏமாந்த கதை

திருமணம் செய்து, மூன்று லட்சம் ரூபாய் மோசடி செய்த துடன், சமூக வலைதளங்கள் வாயிலாக ஆண்களை வீழ்த்தி வரும், ஐ.டி., பெண் ஊழியர் மீது நடவடிக்கை கோரி, போலீசில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

தனியார் விடுதியில்...:

சென்னை, தி.நகரைச் சேர்ந்தவர், கார்த்திகேயன், 27; ஜிம் மாஸ்டர். இவர், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று அளித்த புகார் மனு:


நான், எம்.பி.ஏ., பட்டதாரி; தி.நகரில், சொந்தமாக உடற்பயிற்சி கூடம் நடத்தி வருகிறேன். கடந்த, 2013ல், 'பேஸ் புக்' மூலம், திருப்பூரைச் சேர்ந்த திவ்யா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) பழக்கமானாள்.

பழகிய சில மாதங்களில், என்னை காதல் வலையில் வீழ்த்தினாள். அவரே உயிரென கருதி இருந்தேன். போரூரில் உள்ள ஒரு கோவிலில், நண்பர்கள் புடைசூழ திருமணம் செய்து கொண்டேன்.

பெசன்ட் நகரில், தனியார் விடுதியில் அறை எடுத்து தங்கிய திவ்யா, அதை காலி செய்யாமல், என்னுடன் தங்கி வந்தாள்; இதனால் கருவுற்றாள். 'நாம், திருமணம் செய்து கொண்டது, பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு தெரியாது; தற்போது நான் கருவுற்று இருப்பது தெரிந்தால் பெரிய அளவில் பிரச்னை ஏற்படும்; என் தங்கை வாழ்வு பாதிக்கும்' என தெரிவித்த திவ்யா, கருவை கலைத்தாள்.

இந்த நிலையில், என்னிடம் இருந்து, 3 லட்சம் ரூபாயும் வாங்கி இருந்தாள். அவளது நடவடிக்கை, எனக்கு பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்தியது.

எப்போதும், 'பேஸ் புக்'கே கதி என கிடந்தாள்.

கடந்த ஜனவரியில், சொந்த ஊருக்கு சென்ற திவ்யா, வீடு திரும்பவில்லை. தற்போது, ராமாபுரத்தில் உள்ள மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்து, ஈக்காட்டுத்தாங்கலில், விடுதியில் தங்கி இருப்பதை அறிந்தேன்.

அங்கு சென்று பார்க்க முயற்சித்த போது, முகத்தை கூட காட்ட மறுத்து விட்டாள்.

காப்பாற்றுங்கள்:

இதற்கிடையில், சமூக வலைதளத்தில் மேலும் பல வாலிபர்களை, திவ்யா வீழ்த்தி இருந்தது தெரிய வந்தது.

அவர்களிடமும் என் போன்று திருமணம் செய்து கருவுற்று, கலைத்து இருப்பாளோ என சந்தேகிக்கிறேன். மேலும் பல ஆண்கள், திவ்யா வலையில் வீழ்வதற்கு முன், அவர்களை காப்பாற்றுங்கள்.

அவள் மீது நடவடிக்கை எடுத்து, என் பணத்தை மீட்டுத் தாருங்கள்.

இவ்வாறு, கார்த்திகேயன் புகாரில் தெரிவித்துள்ளார். இந்த புகார் மனு, உயர் போலீஸ் அதிகாரிகளின் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -

Dinamalar
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக