Cecilia Westbrook
அமெரிக்காவைச் சேர்ந்த விஞ்ஞானியொருவர் தனது பெண்ணுறுப்பிலிருந்து எடுக்கப்பட்ட பக்ரீறியா மூலம் யோகர்ட் தயாரித்து ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளார்.விஸ்கொன்சின் பல்லைக்கழகத்தில் கலாநிதி பட்டப்படிப்பை மேற்கொள்ளும் சிசிலியா வெஸ்ட்புரூக் எனும் பெண்ணே இந்த விநோத ஆராய்ச்சியை மேற்கொண்டார்.
இந்த ஆய்வுக்காக மேற்படி யோகர்ட்டை அவர் உட்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
மனித உடலுக்கும் உணவுக்கும் உள்ள தொடர்பு பற்றி கூறவும் பெண்ணுறுப்பு கொண்டுள்ள வலிமையை ஆராய்வதற்கும் தான் விரும்பியதாக சிசிலியா வெஸ்ட்புரூக் தெரிவித்துள்ளார்.
"பெண்களின் உடல் குறித்து அசௌகரியப்படும் கலாசாரத்தில், ஒருவர் தனது சொந்த உடல் குறித்து சௌகரியமடைவதும் இந்த ஆராய்ச்சியின் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.
சிசிலியா வெஸ்ட்புருக்கின் ஆய்வுகளை அவரின் நெருங்கிய நண்பியான ஜெனட் ஆவணப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஜெனட் ஜே கூறுகையில், பெண்ணுறுப்பில் பல்வகையான பக்ரீறியாக்கள் காணப்படுகின்றன.
சீஸ், யோகர்ட் தயாரிப்பதற்கு பயன்படுத்தப்பபடும் லெக்டோபசிலஸ் எனும் பக்ரீறியா இவற்றில் ஆதிக்கம் செலுத்துகிறது" எனக் கூறியுள்ளார்.
இந்த பரிசோதனை குறித்து அமெரிக்காவின் இதாஹோ பல்கலைக்கழகத்திலுள்ள நுண்ணுயிர் விஞ்ஞானியான லறி போர்னியிடம் இவ்விருவரும் ஆலோசனை நடத்தினர்.
இந்த ஆராய்ச்சி மோசமான யோசனை என லறி போர்னி கருத்து தெரிவித்தாராம். இத்தகைய பரிசோதனை ஆபத்துகளை ஏற்படுத்தும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக