அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 4 மார்ச், 2015

வாலிபரை கடத்திக் கொன்று சமைத்து அவரின் தாய்க்கே உணவாக அளித்த ஐஎஸ் மிருகங்கள்

பாக்தாத்: ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் வாலிபர் ஒருவரை கடத்தி கொலை செய்து அவரின் உடலை வெட்டி சமைத்து அதை அவரின் தாய்க்கே உணவாக கொடுத்துள்ள கொடுமை நடந்துள்ளது.

ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் ஈராக்கைச் சேர்ந்த குர்து இன வாலிபர் ஒருவரை கடத்தி தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மொசுல் நகருக்கு கொண்டு சென்றனர். மொசுல் நகரில் வைத்து அந்த வாலிபரை தீவிரவாதிகள் கொன்றுவிட்டனர். இந்நிலையில் அவரின் வயதான தாய் மொசுல் நகருக்கு வந்துள்ளார். அவர் தீவிரவாதிகள் இருக்கும் இடத்திற்கு சென்று தனது மகனை விடுவிக்குமாறு கெஞ்சியுள்ளார்.

அதற்கு தீவிரவாதிகள், நீங்கள் வெகுதூரத்தில் இருந்து வந்துள்ளதால் களைப்பாகவும், பசியாகவும் இருக்கும். முதலில் சாப்பிடுங்கள் பிறகு பேசலாம் என்று தெரிவித்துள்ளனர். அதோடு நின்றுவிடாமல் அந்த தாய்க்கு சாதம், சூப், மாமிசம், டீ கொடுத்துள்ளனர். அந்த அப்பாவி தாயும் தனக்கு அளிக்கப்பட்ட உணவை சாப்பிட்டுள்ளார்.

சாப்பிட்டு முடித்த உடன் அவர் தீவிரவாதிகளை பார்த்து தனது மகனை விடுவிக்குமாறு கேட்டுள்ளார். அதற்கு தீவிரவாதிகளோ, உங்களை மகனை தான் தற்போது சாப்பிட்டீர்கள். அவரை கொன்று, உடலை வெட்டி, கறி சமைத்து உங்களுக்கு கொடுத்தோம் என்று கூறி சிரித்துள்ளனர்.

இங்கிலாந்தில் உள்ள மேற்கு யார்க்ஷயரைச் சேர்ந்த பாதுகாவலரான யாசிர் அப்துல்லா என்பவர் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பில் சேர ஈராக் சென்றுள்ளார். அவர் தான் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.


Isis 'fed murdered kidnap victim to his own mother after she travelled to their headquarters and demanded to see him' 




Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக