அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 10 ஏப்ரல், 2015

செம்மரக் கட்டைகளை ஏன் கடத்துகிறார்கள்?: அதில் அப்படி என்ன உள்ளது?

ஆந்திராவில் 12 தமிழர்கள் உள்பட 20 பேர் பலியானதற்கு காரணமான செம்மரங்கள் ஏன் கடத்தப்படுகிறது என்பதை தெரிந்து கொள்ளுங்கள். ஆந்திராவில் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் செம்மரம் வெட்டி வருகிறார்கள்.


இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள சந்திகிரியில் போலீசார் மற்றும் வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 12 தமிழர்கள் உள்பட 20 பேர் பலியாகினர்.

அவர்கள் ஏன் செம்மரத்தை வெட்டுகிறார்கள், அதை ஏன் கடத்துகிறார்கள் என்று தெரியுமா?

ஆந்திரா மற்றும் தமிழகத்தின் வடக்கு பகுதிகளில் செம்மரங்கள் அதிக அளவில் வளர்கிறது. இந்த செம்மரத்தில் இருந்து மருந்துகள், இசைக்கருவிகள், மரச்சாமான்கள் ஆகியவை செய்யப்படுகின்றன. அதனால் இந்த செம்மரங்களுக்கு சீனாவில் மவுசு அதிகம்.

இந்தியாவில் ரூ.500க்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ செம்மர கட்டை சீனாவில் ரூ.3 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. ரேடியம், யுரேனியம் ஆகியவற்றை தயாரிக்கவும் செம்மரக் கட்டைகள் பயன்படுத்தப்படுகிறது. அணு உலையில் செம்மரக் கட்டைகள் குறைந்த அளவில் தான் பயன்படுத்தப்படுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் பூடான் வழியாக சீனாவுக்கு செம்மரக் கட்டைகள் அதிக அளவில் கடத்தப்படுகிறது.
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக