அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

பாட்டி சொல்லும் வீட்டு வைத்தியம்

சிலருக்கு காலில் ஆணி என நடக்கக் கூட முடியாமல் தவிப்பார்கள். அதற்கு 5 கிராம் மஞ்சள், 5 கிராம் வசம்பு இவற்றை அம்மியில் வைத்து கைப்பிடி அளவுக்கு மருதோன்றி இலையையும் சேர்த்து தண்ணீர் விட்டு மை போல அரைக்க வேண்டும்.

அதன் பிறகு கால் ஆணி இருக்கும் இடத்தில் கனமாக வைத்து அதன் மீது ஒரு வெற்றிலையை வைத்து மூடி ஒரு வெள்ளைத் துணியால் இறுக்கிக் கட்டி விடவேண்டும். இரவு படுக்கப் போவதற்கு முன்பு இந்த மருந்தைக் காலில் ஆணி இருக்கும் இடத்தில் கட்டிக் கொண்டு, மறுநாள் காலை அவிழ்த்து விட வேண்டும். இவ்வாறு இடைவெளி விடாமல் தொடர்ந்து 3 வாரங்கள் செய்து வர பூரண குணம் கிடைக்கும்.
 =============================
பெரும்பாலானவர்களின் பற்கள் பழுப்பு நிறத்தில் காணப்படும். அதற்கு மருத்துவம் இதோ,

சாக்குக் கட்டி 100 கிராம்,

பூங்காவி மண் (தெள்ளிய செம்மண் தூள்) 10 கிராம்,

கடுக்காய் தோல்,

மிளகு,

ஓமம்,

லவங்கப்பட்டை இவை தலா 5 கிராம் எடுத்துக் கொண்டு இவைகளை வறுத்து பொடித்து வைத்துக் கொள்ளவும்.

பொரித்து பொடித்த வெங்காயம் இரண்டையும் சமமான அளவு (5 கிராமுக்கும் குறைவாக) எடுத்துக் கொண்டு தனித்தனியாக இடித்து பொடியாக்கிக் கொள்ள வேண்டும்.

இடித்த பொடியை சலித்து எல்லா பொடிகளையும் ஒன்றாகக் கலக்கி ஒரு போத்தலில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

காலை, மாலை இரண்டு வேலைகளிலும் இந்தப் பொடியை நன்றாகப் பல்லில் வைத்து அழுத்தித் தேய்த்து இளஞ்சூடான வெந்நீரில் வாய் கொப்பளித்து வந்தால் சீக்கிரம் பற்களில் பழுப்பு நிறம் மறைந்து வெண்மை நிறம் தெரியும்.

ஈறுகளுக்கு உறுதி அளிக்கும். பல்வலி நீங்கும்.
 ==================================
அனைவருக்கும் இருக்கும் ஒரு பிரச்சினை அதிக சூடு அல்லது இனிப்பு பலகாரங்கள் அதிக அளவு சாப்பிடுவதால் ஏற்படும் நீரிழிவுத் தொல்லைக்கு அறிகுறி.

இவர்களுக்கு இனிப்பையும், காரத்தையும் குறைப்பது நல்லது.

பாகற்காய், கோவைக்காய் ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் தான்றிக்காய், கடுக்காய் இவற்றின் தோலை உரித்து விட்டு நன்றாக இடித்து தூளாக்கிக் கொள்ள வேண்டும்.

இரண்டையும் சமமான அளவுக்கு எடுத்துக் கொண்டு வெந்நீரில் கலந்து சாப்பிட வேண்டும்.

இப்படி காலை,மாலை என இரண்டு வேளையும் தொடர்ந்து ஒரு வாரம் சாப்பிட வேண்டும்.

அதன்பிறகு சிறுநீர் கடுப்பு மற்றும் நீரிழிவு ஆரம்பக் கட்டம் போன்ற தொல்லைகள் போய் விடும்.
 ===========================
தற்போது இருக்கும் காலச் சூழ்நிலைக்கு படுத்தால் தூக்கம் வருவது ரொம்ப சிரமமாக இருக்கிறது. படுத்த உடனேயே தூங்குவதற்கு பகலோ, இரவோ படுக்கைக்குப் போவதற்கு முன் உடல் களைப்பு நீங்க குளிர்ந்த நீரில் நன்றாகக் குளியுங்கள்.

 250 மில்லி அளவு பாலை நன்றாகக் காய்ச்சி அதில், சிறிதளவு கற்கண்டையும்,பேரீச்சம் பழத்தையும் போட்டுக் குடித்து விட்டுப் படுத்தால் சுகமான தூக்கம் வரும்.

சிலருக்கு அடி வயிற்றில் வலி இருக்கும்.

அதற்கு மருத்துவம், கோடைக்காலம் மற்றும் காரம் அதிகம் சாப்பிடுவதாலும் இந்த வலி ஏற்படக் கூடும்.

இவர்கள் முதலில் காரத்தை குறைக்க வேண்டும்.

தேங்காயை அரைத்து கெட்டியாகப் பிழிந்து பால் எடுத்துக் கொள்ளவும்.

அதில் ஒரு ஸ்பூன் சுத்தமான கசகசாவை தேங்காய்ப் பால் விட்டு அம்மியில் வைத்து அரைத்து விழுதாக்கி தேங்காய்ப் பாலுடன் கலந்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிக்கவும்.

இரண்டு அல்லது மூன்று நாட்களில் உங்கள் அடி வயிற்றுவலிப் பிரச்சினை சரியாகி விடும். அல்லது நீராகாரத்தில் வெந்தயம் (தனியா) சிறிதளவு பொடியாக்கிப் போட்டு அதிகாலையில் குடிக்கலாம். அல்லது இளநீரில் வெந்தயப் பொடி போட்டும் குடிக்கலாம். இதில் எதை வேண்டுமானாலும் கடைபிடிக்கலாம்.
 ===========================
திடீர் என்று மூச்சுப் பிடித்துக் கொண்டு அவஸ்தைப் படுவோர்களுக்கு, இது வாயுத் தொல்லை தொடர்பாகவும் இருக்கலாம்.

ஓமத்தைப் பொடி செய்து சமமான அளவு சர்க்கரையைச் சேர்த்து மூச்சுப்பிடிப்பு அல்லது வலி ஏற்படும் சமயத்தில் சாப்பிட வேண்டும்.

இரண்டு அல்லது மூன்று வேளைகள் சாப்பிட்டாலே பூரண குணமடைந்து விடும்.

வாயு சம்பந்தப்பட்ட பதார்த்தங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஜீரணம்,வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் இருந்தாலும் இந்த மருத்துவம் குணப்படுத்தும்.

மேலே குறிப்பிட்ட பக்குவத்தில் மருந்தை சாப்பிடச் சொல்லவும். கண்டிப்பாக நல்ல நிவாரணம் கிடைக்கும்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக