அமெரிக்காவை சேர்ந்த பெண் எம்.பி. துள்சி கப்பார்டு (33). இவர் ஹவாய் பகுதியை சேர்ந்தவர். அமெரிக்க வாழ் இந்தியரான இவர் இந்து பாரம்பரிய குடும்பத்தை சேர்ந்தவர்.
இவரும், சினிமா போட்டோகிராபர் ஆப்ரகாம் வில்லியம்ஸ் (29) என்பவரும் காதலித்தனர். இவர்களது திருமணத்துக்கு இரு குடும்பத்தினரும் சம்மதித்தனர்.
அதை தொடர்ந்து இவர்களது திருமணம் ஹவாயில் உள்ள ஒயாகு நகரில் நடந்தது. இதில் திருமணம் இந்து முறைப்படி வேத மந்திரங்கள் முழங்க நடந்ததுதான் சிறப்பு அம்சமாகும்.
இந்த திருமணத்தில் ஹவாய் பாரம்பரிய பாடல்களும், நடன நிகழ்ச்சிகளும் நடந்தது. சைவ உணவு வகைகளே பரிமாறப்பட்டது. திருமண விழாவில் மணமக்களின் உறவினர், நண்பர்கள் மற்றும் குடியரசு கட்சி, ஜனநாயக கட்சி எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
இந்தியாவில் இருந்து பா.ஜனதா கட்சியின் பொதுச்செயலாளர் ராம் யாதவ் பங்கேற்றார். அவர் பிரதமர் நரேந்திர மோடியின் பரிசு மற்றும் சிறப்பு வாழ்த்து செய்தியுடன் சென்றார்.
அமெரிக்காவுக்கான இந்திய தூதர் (பொறுப்பு) தரம்ஜித் சாந்துவும் திருமணத்தில் பங்கேற்றார். மேலும் பல இந்து குடும்பத்தினரும் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
துள்சி கப்பார்டு அமெரிக்காவில் கடந்த 1981–ம் ஆண்டு கரோஸ்–மைக் கப்பார்டு தம்பதியரின் 4–வது குழந்தையாக பிறந்தார். இவரையும் சேர்த்து உடன் பிறந்தவர்கள் 5 பேர் ஆவர்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக