அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

அழகுக் குறிப்புகள் - மூக்கின் பரா­ம­ரிப்பு

கிளி, குடை மிளகாய், சப்பை, கோணல், கூர்மை இப்­படி பல வார்த்­தை­க­ளோடு சேர்த்து மூக்கின் தோற்­றத்­தி­னையும், அள­வி­னையும் குறிப்­பி­டு­கிறோம். ஆனால் எப்­ப­டிப்­பட்ட ஷேப் உள்ள மூக்­கி­னையும் ஒழுங்­காக பரா­ம­ரித்து, அழ­காக மேக்கப் செய்து கொண்டால் ஷேப்பைப் பற்­றிய கவலை தேவை­யில்லை.


மூக்கின் பரா­ம­ரிப்பு மிகவும் எளிது. வழ­மை­யான பேஷியல் கூட போதும். அதுவும் முடி­யா­விட்டால் வீட்டில் செய்து கொள்ளும் போதும். மிக எளி­தான மூக்­குக்­கான அழகுக் குறிப்­பினை பார்ப்போம்.

மிகவும் சரி­யான சிகிச்சை முறை ஆவி பிடித்­தல்தான். வீட்­டி­லேயே பேஷி­ய­லுக்கு செய்­வ­துபோல் எண்­ணெய்ப்­பசை உள்ள நல்ல பேஸ் மசாஜ் க்ரீமை மூக்­கிற்கு நன்­றாக தடவி, மசாஜ் செய்ய வேண்டும்.

மூக்கில் கரும்­புள்­ளிகள் உள்­ள­வர்கள், விரல்­களால் மூக்கின் பக்க வாட்­டிலும், நுனி­யிலும் அதிக நேரம் மசாஜ் செய்ய வேண்டும். பிறகு ஒரு பாத்­தி­ரத்தில் கொதித்த நீரை ஊற்றி, நன்­றாக வேர்க்­கும்­வரை ஆவி பிடிக்க வேண்டும்.
இவ்­வாறு தொடர்ச்­சி­யாக செய்யும் போது மூக்­கி­லுள்ள கரும்­புள்­ளிகள் நீங்கி புதுப்­பொ­லிவு பெறும்.


அதிக எண்ணெய் உண­வு­களை எடுத்துக் கொள்­ப­வர்­க­ளுக்கும், எண்­ணெய்ப்­பசை சருமம் உள்­ள­வர்­க­ளுக்கும் மூக்கில் கரும்­புள்­ளிகள் அதி­க­ளவில் தோன்றும்.

மூக்கு குத்திக் கொள்ள வேண்டும் என்று நினைப்­ப­வர்கள் முத­லி­லேயே எந்த இடத்தில், எந்த பக்­கத்தில் மூக்கை குத்த வேண்டும் என்று சரி­யாக மார்க் செய்து கொண்டு செயல்­ப­டு­வது முக்­கியம். காது போல அல்­லாமல், தவ­றான இடத்தில் துளை போட்­டு­விட்டால் முகத்தின் அழகை பாதிக்கும். துளையை மறைப்­பது மிகவும் கடினம்.

மூக்கு குத்தப் பிடிக்­கா­த­வர்கள் கல்­யா­ணத்­துக்கு என்று பாரம்­ப­ரிய அலங்­காரம் செய்­யும்­போது மூக்கில் கல் ஸ்டிக்கர் கூட ஒட்டிக் கொள்­ளலாம். மூக்கு குத்­தாமல் செய்­யப்­படும் பாரம்­ப­ரிய அலங்­கா­ரங்கள் ஒரு வித முழு­மை­ய­டை­யா­த­து­போல இருக்கும். பயப்­ப­டாமல் உப­யோ­கிக்­கலாம்.

காது­க­ளுக்கு அழகுப் படுத்­துதல் என்று தனி­யாக எதுவும் தேவை­யில்லை. ஒரே ஒரு விஷயம் மட்டும் கவ­னத்தில் கொள்ள வேண்டும். முகத்­திற்கு மேக்கப் போடும்­போது காது­க­ளுக்கும் சேர்த்து பவுண்­டெஷன், பவுடர் தட­வுங்கள்.

இல்­லா­விட்டால் காதுகள் தனி நிறத்தில் இருக்கும். நிறைய தோடு­களை சைடு காதில் குத்திக் கொள்­வதைக் காட்­டிலும், பட்டன் டைப் அல்­லது பிரஸ்ஸிங் டைப் வளை­யங்­களை உப­யோ­கித்தால் பேஷன் மாறும்­போது நாமும் வடுக்கள் இல்­லாமல் மாறி­வி­டலாம்.

சிறு வய­துக்­கா­ரர்கள் பார்ட்டி, கல்­யாணம் என்று மேக்கப் செய்­யும்­போது, காதை மறைக்கும் பட்­டை­யான மாட்டல் போடலாம்.

ஆனால் வய­தா­ன­வர்­க­ளுக்கு இன்­வி­சிபிள் டைப் மாட்டல்(கண்­ணுக்கு தெரி­யாத வண்ணம்) தான் பொருந்தும். அதுவும் கூட பட்டன் போட விருப்பம் இல்­லா­த­வர்­க­ளுக்கு ஒரு சாய்ஸ் மட்­டுமே. பேஷன் தோடுகள் வாங்கும்போது ஒவ்வாமை, எடை இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு வாங்குங்கள். காது, மூக்கு பராமரிப்பு மிகவும் எளிதான விஷயம். சின்ன அக்கறை நல்ல தோற்றத்தையும், அழகையும் கொடுக்கும்.

Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக