அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 22 ஏப்ரல், 2015

புகை பிடிப்பதை நிறுத்த ஒரு இணையதளம்

நம்மில் பலர் தாங்கள் புகை பிடிப்பதனை நிறுத்த இருப்பதாகக் கூறி, அதற்கான நாளையும் அறிவிப்பார்கள். புத்தாண்டு தொடக்கத்தில் இத்தகைய சபதங்களை எடுப்பவர்களே அதிகம். இதில் என்ன வேடிக்கை எனில், இவர்களில் பலர் அடுத்த ஆண்டும் இதே அறிவிப்பை வெளியிடுவார்கள்.



அவர்களுக்கு ஏற்ற ஒரு இணையத்தளம் http://smokefree.gov/.

இந்த தளம் இது போல விருப்பம் உள்ளவர்களைத் திசை மாறாமல் கொண்டு செல்கிறது. அதற்குப் பல வழிகளைக் கையாள்கிறது.

இந்த இணைய தளம் சென்றவுடன், முதலில் புகை பிடிப்பதிலிருந்து வெளியேற உங்களைத் தயார் செய்து கொள்கிறீர்களா? என்ற வினாவுடன் ஒரு பிரிவினைப் பார்க்கலாம்.

ஏனென்றால், வெகு காலம் புகை பிடிக்கும் ஒருவர், நிச்சயமாய் நிறுத்துவதற்கான முடிவினை எடுக்க வேண்டும். அதில் உறுதியாய் இருக்க வேண்டும். பின்னர், அடுத்து தரப்படும் பிரிவில், எந்த எந்த வழிகளில் புகை பிடிப்பதனை நிறுத்தலாம் என்று பல வழிகள் எடுத்துரைக்கப்படுகின்றன.

மேலும், இந்தப் பழக்கத்தினால் ஏற்படும் மன அழுத்தம், சத்தான உணவினை எடுத்துக் கொள்வது, உடற்பயிற்சிகளால் நல்ல செயல்பாட்டுடன் இருப்பது எனப் பல பிரிவுகளில் அறிவுரைகள் வழங்கப்படுகின்றன.

புகைப்பவர்கள் எல்லாரும் ஒரு முறை இந்த தளம் சென்று பார்த்தால், நமக்காக இத்தனை முயற்சிகள் எடுத்து தகவல்களைத் தந்திருக்கிறார்களே என்று ஆச்சரியப்பட்டு, புகைப்பதனை நிறுத்த முயற்சிப்பீர்கள். இந்த இணைய தளத்தின் முகவரி http://smokefree.gov/
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக