அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 15 ஏப்ரல், 2015

குடும்ப கட்டுப்பாடு செய்யாத முஸ்லிம்களுக்கு வாக்குரிமை எதற்கு?

 பாஜக எம்.பி சர்ச்சை பேச்சு....

குடும்ப கட்டுப்பாட்டு விஷயத்தில், நாட்டில் வாழும் அனைவருக்கும் ஒரேமாதிரியான சட்டத்தை கொண்டு வரவேண்டும், நாட்டு நலன் கருதி குடும்ப கட்டுப்பாடு செய்துகொள்ள வேண்டும் என்று பாஜக எம்பி சாக்‌ஷி மகராஜ் தெரிவித்துள்ளார்.



அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்திவருபவர் பாஜக எம்.பி சாக்‌ஷி மகராஜ். உத்தரபிரேதச மாநிலத்தில் உள்ள தனது சொந்த தொகுதியான உன்னோவில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சாக்‌ஷி கூறியதாவது: இந்துக்கள் கருத்தடை செய்துகொள்ளும்போது, அதை முஸ்லீம்களும் விருப்பட்டு செய்யவேண்டும். அனைவருக்கும் ஒரேவிதமான சட்டம் இருக்க வேண்டும்.

முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் கருத்தடை செய்யவேண்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால், குடும்பக்கட்டுபாடு செய்து கொள்ள வேண்டும். நான்கு குழந்தைகள் பற்றி நாம் பேசும் போது பொதுமக்களிடம் இருந்து கண்டனக்குரல்கள் எழுகின்றன. ஆனால், 4 மனைவிகள் மூலம் 40 குழந்தைகள் பெற்றால் யருமே எதையும் சொல்வது இல்லை.

மக்கள் தொகை பெருக்கம் நாட்டுக்கு மிகப்பெரும் சவாலாக இருக்கிறது. இதற்கு குடும்ப கட்டுபாடு மூலமே தீர்வு காண முடியும். குடும்ப கட்டுபாடு கண்டிப்பாக அவசியம். ஏனெனில் நாடு சுதந்திரம் அடைந்த போது 30 கோடியாக இருந்த மக்கள் தொகை தற்போது 130 கோடியாக பெருகியுள்ளது. இதற்கு யார் பொறுப்பு? இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் என யாராக இருந்தாலும் ஒரே சட்டமிருக்க வேண்டும்.

அனைவருக்கும் பொதுவான சட்டம் இல்லாமல் நாடு பலன் அடையாது. எனவே அரசு மற்றும் எதிர்கட்சி என அனைத்தும் ஒருங்கிணைந்து கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும். இதை பின்பற்றாதவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையை ரத்து செய்ய வேண்டும். வெவ்வேறு சமூகத்தின் அடிப்படையில் நாம் பெண்களுக்கு பாரபட்சம் காட்டக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.

இந்துப்பெண்கள் குறைந்தது நான்கு குழந்தைகள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறி எதிர்கட்சிகளின் கடும் விமர்சனத்துக்கு ஏற்கனவே சாச்ஷி மகராஜ் ஆளாகியுள்ளார்.

Thatstamil
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக