அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

சனி, 13 ஜூன், 2015

சரணடைதல் சர்ச்சைகளும் எனக்குத் தெரிந்தவைகளும்

விடுதலைப் புலிகளின் சரணடைதல் குறித்து இப்போ பல வாதப் பிரதிவாதங்கள் தொடர்கின்றன.... போரின் இறுதிக்கட்டத்தில் விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட அரசியற் துறைப் பொறுப்பாளர் எழிலன் சற்றலைட் போனில் தி.மு.க எம்.பி கனிமொழியுடன் பேசியதன் பின்பே சரணடைந்தார் என அவரது மனைவியும் மாகாண சபை உறுப்பினருமான அனந்தி தெரிவித்துள்ளார்.



இதனை கனிமொழி முழுமையாக மறுத்துள்ளார். கனிமொழியின் கூற்றை பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் கருத்திடுவது போல் அனந்தியின் கருத்தையும் பலரும் ஆதரித்தும் எதிர்த்தும் சமூக வலைத்தளங்களில் விவாதங்கள் தொடர்கின்றனர்.

இங்கே எனக்கு தெரிந்த அறிந்த விடயங்களில் ஒரு சில சம்பவங்கள் குறித்த மெளனத்தை கலைக்கலாம் என நினைக்கிறேன்.

இது குறித்து விடுதலைப்புலிகளின் முக்கியஸ்தர்கள் அல்லது அவர்களோடு நெருங்கியிருந்தவர்கள் கூட தமக்கு தெரிந்தவற்றை முன்வைக்கலாம்.

2002இல் புலிகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையில் பேச்சுவார்த்தை ஆரம்பித்தது முதல் இறுதியாக ஜெனிவாவில் பேச்சுவார்த்தை முறிந்தது வரை ஜப்பான் கொக்னேயில் இடம்பெற்ற நிதி வழங்கும் நாடுகளின் கூட்டம் வரை அனைத்திற்கும் சென்றிருந்தேன். அதனால் முள்ளிவாய்க்கால் மே 19 வரையிலும் அதன் பின்னும் இணைத்தலைமை நாடுகளின் ராஜதந்திரிகள் சிலர் என்னுடன் தொடர்பில் இருந்தனர்.

நான் ஒரு ஊடகவியலாளன் என்ற வகையில் யுத்தம் குறித்த விடயங்களை தகவல்களை அங்கு நடக்கும் அழிவுகளைப் பற்றி உரையாடுவர். இப்படி பல விடயங்களை உரையாடும் போது கிளிநொச்சி புலிகளிடம் இருந்து வீழ்ந்த பின் இணைத்தலைமை நாடுகள் ஒரு முக்கிய நகர்வை முன்னெடுத்திருந்ததாக குறிப்பிட்டன.

இதற்கு காரணம் அவர்களின் கணிப்பில் கிளிநொச்சி வீழ்ச்சியின் பின் விடுதலைப் புலிகளால் தாக்குப்பிடிக்க முடியாது என்பதும் அரசாங்கத்தை வெற்றிகொள்ள முடியாது என்பதும் உறுதியானது.

அந்த வகையில் இணைத் தலைமை நாடுகளால் எடுக்கப்பட்ட முக்கிய முயற்சியில் ஒன்று புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்து சரணடைதல். விடுதலைப் புலிகளின் போராளிகளுக்கு ஐக்கியநாடுகள் அமைப்பின் மேற்பார்வையின் கீழ் இணைத்தலைமை நாடுகளின் ஒத்துழைப்புடன்இ பிரகடனப்படுத்தப்பட்ட ஒரு பகுதியில் பாதுகாப்பு வலயம் அமைத்து அவர்களை பாதுகாத்தல்.

புலிகளின் கட்டுப்பாட்டு பகுதியில் இருந்த பொதுமக்களை அரசாங்க கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் செல்ல அனுமதித்தல். அதன் தொடர்ச்சியாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுதல்.

இது குறித்து இணைத்தலைமை நாடுகளில் ஒன்றுடன் தொடர்பில் இருந்த புலிகளிடம் உரையாடப்பட்டதுடன் திட்டமும் முன்வைக்கப்பட்டது.

ஆனால் புலிகள் தமது போராட்டம் இறுதிவரை தொடரும் என்றும் ஆயுதங்களை கீழே போடுதல்இ சரணடைதல் என்பது ஒருபோதும் சாத்தியம் இல்லை எனவும் உறுதியாக நின்றதனால் இந்தத் திட்டம் கைவிடப்பட்டதாகஇ கவலையுடன் அந்த ராஜதந்திரி சொன்னார்.

இதேவேளை இணைத் தலைமை நாடுகளின் கோரிக்கையை புலிகள் நிராகரிக்க காரணமாக இருந்தது இந்தியாவின் தமிழ் நாட்டு தலைவர்கள் முக்கியஸ்தர்கள் கொடுத்த நம்பிக்கையும்இ புலம்பெயர் நாடுகளில் இருந்த விடுதலைப்புலிகளின் சில முக்கியஸ்தர்கள் கொடுத்த நம்பிக்கையுமே காரணம் என பின்னாளில் விடுதலைப் புலிகளோடு நெருக்கமுடைய ஒருவர் கூறியிருந்தார்.

ஆனால் புலிகள் தரப்பில் இது குறித்த தகவல்களை என்னால் பெற முடியவோ உறுதிப்படுத்தவோ முடியவில்லை. இது பற்றி தெரிந்தவர்கள் சொல்லலாம்.

இணைத் தலைமை நாடுகள் உண்மையில் இந்த திட்டத்தை முன்வைத்து புலிகள் அதனை நிராகரித்து இருந்தமை உண்மையானால் அந்த முடிவு சரியானதா?

கிளிநொச்சி வீழ்ச்சியின் பின்பும் தாக்குப் பிடிக்கலாம் என நினைத்திருந்தால்இ புலிகள் தமது பலம் தொடர்பில் சரியான கணிப்பீட்டை கொண்டிருந்தனரா?

2007ஆம் ஆண்டின் இறுதிப் பகுதியில் ஒரு ராஜதந்திரி புலிகளின் பலம் இப்போ எப்படி என்று கேட்டார். அதற்கு நான் சொன்னேன் அவர்கள் மிகப் பலமாக இருக்கிறார்கள். முன்னேறும் படையினரை முன்னைய சமர்கள் போல் எதிர்கொள்வார்கள் என கூறிய போது அவர் சிரித்தார்.

ஏன் என்று கேட்டதற்கு தமக்கு கிடைத்த சரியான தகவல்களின்படி இலங்கை இராணுவத்தின் ஆழ ஊடுருவித் தாக்கும் அணிகள் பல புலிகளின் இதயம் என்று சொல்லப்படும் முல்லைத்தீவில் கூட நிற்கிறார்கள் என்றார். புலிகளின் உடையிலேயே புலிகளாக நிற்கும் அவர்களை புலிகள் கூட அடையாளம் காணாமல் தமது நகர்வுகளை முன்னெடுக்கிறார்கள்... என்றார்.

இது குறித்து 2008ன் ஆரம்பம் என நினைக்கிறேன். சர்வதேச சூழல் எப்படி இருக்கிறது என கேட்பதற்கு சமாதான காலத்தில் சந்தித்த ஒரு புலிகளின் முக்கியஸ்தர் எனது தொலைபேசியை எங்கிருந்தோ பெற்று கதைத்த போது இதனை சொன்னேன். அவர் முழுதாக மறுத்து உவங்கள் விசரங்கள் உப்பிடித்தான் சொல்வாங்கள்... நாம் பலமாகவே உள்ளோம் என்றார்.

உண்மையில் சம்பந்தப்பட்டவர்கள் தமது மெளனத்தை கலைக்கும் வரை இவை கதைகளாகவே தொடரும்.

நடராஜா குருபரன்

தினகரன் 14.06.2015
Share |
Image Hosted by ImageShack.us

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக