எம்மில் பலருக்கும் இப்போது கூட ஒரு சந்தேகம் இருந்துகொண்டேயிருக்கிறது. அதிலும் குறிப்பாக திருமணமான தம்பதிகளிடையே இந்த சந்தேகம் சர்வசாதாரணம். உடலுறவுக்கும் இதய ஆரோக்கிய சீர்கேட்டிற்கும் தொடர்பி ருக்கிறதா? என மருத்துவர்களை கேட் காத தம்பதிகளேயில்லை எனலாம். உண்மை யிலேயே இதயத்தின் ஆரோக்கியத்திற்கும் உடலுறவுக்கும் தொடர்பிருக்கிறதா? வாருங் கள் பார்ப்போம்.
முதலில் இது குறித்து உலகளாவிய செக்ஸாலாஜிஸ்ட் என்னும் காம இயல் மருத்துவர்கள் பல கட்டத்தில் ஆய்வு மேற்கொண்டார்கள். அந்த ஆய்வின் முடிவில் உடலுறவால் எந்த ஆரோக்கியமான இதயமும் பாதிக்கப்படு வதில்லை என்று கண்டறிந்தனர். அதே சமயத்
தில் ஒருமித்த எண்ணத்துடன் உடலுறவில் ஈடு பட்டால் மாரடைப்பு என்கின்ற ஆபத்திலிருந்து தப்பிக்க இயலும் என்பதையும் கண்டறிந்தி ருக்கின்றனர்.
உடலுறவை மருத்துவ ஆய்வாளர்கள் எழுச்சி நிலை, கிளர்ச்சி நிலை, உச்ச நிலை, மீள் நிலை என நான்கு வகையாக பிரிக்கி றார்கள். மேற்கூறிய நான்கு நிலைகளிலும் இதயமானது பல்வேறு ஆரோக்கியமான மாற்றங்களை அடைகிறது. அதே சமயத்தில் இதயத்திற்கு போதுமான உடற்பயிற்சி இல்லாதது, உடலின் எடை அதிகமாவது, மன இறுக்கம் ஆகியவை தான் மாரடைப்பிற்கு அடிப்படையான மூன்று காரணங்
கள் என்பதையும் கண்டறிந் திருக்கின்றனர். இந்த மூன்று காரணங்களையும் வெல்லக் கூடிய ஆற்றல் உடலுறவிற்கு உண்டு என்றும் அறிந்திருக்கின்றனர்.
அதே போல் உடலுறவில் ஈடுபடும் போது, ஈடுபடுபவர்களின் வயது, திருமணத்திற்கு முன்னரா? பின்னரா? அல்லது திருமண பந்தத்திற்கு அப்பாற்பட்டு உடலுறவில் ஈடுபடுவது என்ற மூன்று காரணங்களைக் கொண்டே உடலுறவின் போது இதயத் திற்கு எவ்வளவு தூரம் அவை நன்மை பயக்கின்றன என்பதை குறிப்பிட முடியும் என்பதையும் கண்டறிந்திருக்கின்றன.
உடலுறவின் போது ஏற்படும் மாற்றங்கள் பொதுவானவையாக இருந்தாலும், இதற்காக தம்பதிகள் எடுத்துக் கொண்ட நேரம், உடலுறவின் தன்மை போறவை ஒருவருக்கொருவர் மாறுபடக்கூடும். அதேபோல் அவர்களின் வயதும் ஒரு காரணமாக அமைகிறது. உதாரணமாக உடலுறவில் ஈடுபடுபவர்களால் எரிக்கப்படும் கலோரி களின் எண்ணிக்கையில் இந்த மாற்றம் பிரதி பலிக்கிறது. ஒருவர் இரண்டு அடுக்கு மாடிக் கட்டடத்திற்கான மாடிப்படிகளில் ஏறும் போது செலவிடும் ஆற்றலுக்கு இணையானது ஒரு முறை உடலுறவுக் கொள்வது என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
வேறு கோணங்களில் பார்க்கும் போது கூட உடலுறவு என்பது ஒரு உடற்பயிற்சியாகத்தான் கருதவேண்டும். உடலுறவின் போது அந்த அசைவுகளால் அந்தந்த பகுதிகளில் உள்ள தசைகள் மட்டுமல்லாது முதுகு தண்டுவடப் பகுதி உள்ள தசைகளும் வலுவடைகின்றன. இதனை ஒருவன் மெதுவாக ஓடும் பயிற்சியில் முப்பது நிமிட அளவிற்கு ஓடினால் என்ன ஆற்றல் செலவாகுமோ அதனை ஒரு முறை உடலுறவுக் கொண்டால் கிடைத்துவிடும் எனறு காம இயல் நிபுணர்கள் தெரிவிக் கிறார்கள்.
ஆகையால் பாதுகாப்பான முறையில் படுக்கையறையில் உடலுறவுக் கொண்டால் மார டைப்பிலிருந்து இதயம் பாதுகாக்கப்படும்
- டொக்டர். S. ராஜசேகர், M.D.,- தொகுப்பு: அனுஷா.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக