அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­தி­ர­சி­கிச்சை மாத­விடாய் சக்­க­ரத்தில் ஏற்­ப­டுத்தும் மாற்றம்

குடும்ப தம்­ப­திகள் தமது குடும்­பத்தில் இருக்கும் பல பிரச்­சி­னை­களை வெற்றி கொண்டு தமது குடும்­பம் எவ்­வாறு அமைய வேண்டும் என திட்­ட­மிட வேண்­டி­யது அவ­சியம். அதா­வது தமக்கு இரண்டு பிள்­ளைகள் போதுமா? அல்­லது மூன்று பிள்­ளைகள் போதுமா? என திட்­ட­மிட்டுக் கொள்­வது சிறந்­தது. இன்­றைய கால­கட்­டத்தில் அதி­க­ரித்து வரும் வாழ்க்கை செல­வினால் பல குடும்­பங்கள் தடு­மாறும் போது குடும்­பத்தை திட்­ட­மிட்டு அமைத்துக் கொள்­வது தங்­க­ளுக்கு இருக்கும் பிள்­ளை­களை நன்கு கற்­பித்து ஆரோக்­கி­ய­மாக வளர்க்க உதவும். இவ்­வாறு குடும்­பத்தை சரி­யாக திட்­ட­மி­டாது இருந்தால் பின்னர் திட்­ட­மி­டாது கர்ப்பம் தரித்து திட்­ட­மி­டாது பிள்­ளைகள் பிறக்கும் போது குடும்­பங்கள் தடு­மா­று­வது தவிர்க்க முடி­யாமல் போகின்­றது. இந்­நி­லையில் இருக்கும் பிள்­ளை­க­ளையும் சரி­யாக கவ­னிக்­காமல் போகும் நிலை ஏற்­ப­டு­கின்­றது. இதனால் குடும்­பங்­களை திட்­ட­மிட உதவும் குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை பற்றி அறிந்­தி­ருப்­பது அவ­சி­ய­மாகும்.



குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை நிரந்­த­ர­மா­னதா?

ஆம், பெண்­களில் செய்­யப்­பட்டு வரும் குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சை­யா­னது நிரந்­த­ர­மான கட்­டுப்­பாட்டு முறை­யாகும். இதனை LRT சத்­திர சிகிச்சை என அழைப்­பார்கள். இதனால் தம்­ப­திகள் தமக்கு தேவை­யான குழந்­தை­களை பெற்­றெ­டுத்து முடிந்த பின்னர் செய்­வ­தற்கு ஆலோ­சனை வழங்­குவோம். பின்னர் மீண்டும் ஒரு குழந்தை பெற­லாமா என சிந்­திப்­ப­வர்கள் இம்­மு­றைக்கு செல்­வது கடினம். ஏனெனில் இது ஒரு நிரந்­த­ர­மான குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை முறை­யாகும்.

குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சையில் என்ன நடை­பெறும்?

பெண்­களில் செய்­யப்­படும் குடும்ப கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சையில் கர்ப்­பப்­பையின் இரு புறத்­திலும் இருக்கும் பலோப்­பியன் குழாய்­களில் கட்­டு­ப்போ­டப்­பட்டு வெட்­டப்­ப­டு­கின்­றது. இதன் போது சூல் முட்­டை­களும் விந்­து­களும் சந்­திக்க முடி­யாது தொடர்பு துண்­டிக்­கப்­ப­டு­கின்­றது. இத­னையே LRT சத்­திர சிகிச்சை என அழைக்­கப்­படும்.

குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சை­யினால் பெண்­களின் மாத­விடாய் சக்­க­ரத்தில் மாற்­றங்கள் வருமா?

பல பெண்கள் குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்­வ­தற்கு தயங்­கு­வ­தற்கு காரணம் தமது மாத­விடாய் குரு­திப்­போக்கில் மாற்­றங்கள் வந்­து­விடும் அதிகம் போகத்­தொ­டங்கும் என நினைத்­தே­யாகும். இவ்­வாறு பலர் சொல்லும் உண்­மை­யற்ற தக­வல்­களை நினைத்து இவ்­வித சத்­திர சிகிச்­சைக்குப் பின்­வாங்­கு­வது வழக்கம். ஆனால் குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சையால் மாத­விடாய் போக்கில் மாற்­றங்­களோ அல்­லது அதி­க­ரிப்போ ஏற்­ப­ட­மாட்­டாது. இது குறித்து நீங்கள் பயப்­ப­டாது தகுந்த மருத்­துவ ஆலோ­சனை மூலம் உங்கள் சந்­தே­கங்­களை போக்க வேண்டும்.

குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சையில் பெண்­களின் உடல் பருமன் அதி­க­ரிக்­குமா?

குடும்பக் கட்­டுப்­பாட்டு LRT சத்­திர சிகிச்­சை­யினால் பெண்கள் பருமன் அதி­க­ரிக்கும், உடல் நிறை கூடி­விடும் என நினைப்­பது தவறு. இவ்­வித உண்­மை­யற்ற கதை­களை நம்பி நீங்கள் முடி­வு­களை எடுக்கத் தயங்க வேண்டாம். பெண்­களின் குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சையால் பெண்­களின் உடல் நிறை அதி­க­ரிக்­காது. அதற்கு வேறு கார­ணங்கள் இருக்­குமா? என ஆராய்ந்து பார்க்க வேண்டும்.

குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்­த­வர்­க­ளிலும் மீண்டும் கருத்­த­ரிக்கும் சந்­தர்ப்­பங்கள் உள்­ளதா?

நிரந்­தர குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்ட பெண்­களில் ஒரு சிலர் கர்ப்பம் தரித்­தார்கள் என சில கதைகள் கேள்­விப்­பட்­டி­ருப்­பீர்கள். இது மிகவும் அரி­தாக நடை­பெறும் சம்­பவம். எங்கள் யாருக்கோ நடை­பெற்று விட்ட இவ்­வா­றான மிக அரிய நிகழ்­வு­களை நினைத்து நீங்கள் பயப்­பட்டு குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்ய பின்­னிற்க வேண்டாம். நிரந்­தர குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்சை செய்­த­வர்கள் மீண்டும் கருத்­த­ரித்த சந்­தர்ப்­பங்கள் மிக மிக குறைவு.

குடும்பக் கட்­டுப்­பாட்டு சத்­திர சிகிச்­சைக்கு வயிற்றை பெரி­த­ளவில் வெட்ட வேண்­டுமா?

குடும்பக் கட்­டுப்­பாட்டு LRT சத்­திர சிகிச்சை பெண்­களில் முன்னர் வயிற்றை வெட்­டித்தான் செய்­யப்­பட்­டது. ஆனால் தற்­போது லப்­ரஸ்­கோப்பி முறையில் வயிற்றில் பெரிய வெட்டுக் காயங்கள் இல்­லாது சிறிய துளை மூலம் செய்­யப்­படும். இதனால் பெண்கள் ஒரே நாளில் வீடு செல்லக் கூடி­ய­தாக இருக்கும். இதன் பின்னர் ஏற்படும் வயிற்று வலியும் குறைவு. இதனால் இந்த நிரந்தர குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை மிகவும் இலகுவாக்கப்பட்டுள்ளது.

இந்த சத்திர சிகிச்சை பிரசவம் முடிவடைந்து எவ்வளவு காலத்தில் செய்ய முடியும்?

குடும்பக் கட்டுப்பாட்டு சத்திர சிகிச்சை யானது கடைசிப் பிரசவத்தின் போது செய்ய முடியும். இல்லாவிட்டால் சில மாதகால இடைவெளியின் பின்னர் கூட செய்ய முடியும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக