அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2015

ஃபேஸ்புக் தளத்தில் உங்களுக்கு தெரியமல் சேர்க்கப்பட்டிருக்கும் சில அம்சங்கள்.

பிரனவுன்சியேஷன் (pronunciation) கைடு
ஃபேஸ்புக்கில் பிரனவுன்சியேஷன் கைடு செட் செய்ய உங்களது ஃப்ரோபைலில் அபவுட் 'about' சென்று டீடெயில்ஸ் அபவுட் யூ 'details about you' ஆப்ஷனை க்ளிக் செய்து, நேம் பிரனவுன்சியேஷன் 'name pronunciation' ஆப்ஷனை க்ளிக் செய்ய வேண்டும்.



ஒன் டைம் பாஸ்வேர்டு
பொது இடங்களில் ஃபேஸ்புக் பயன்படுத்தும் சூழ்நிலை ஏற்பட்டால் உங்களது மொபைல் போனில் இருந்து 'OTP' என டைப் செய்து 32665 என்ற எண்ணிற்கு குறுந்தகவல் அனுப்புங்கள், இவ்வாறு செய்யும் போது உங்களது ஒரு முறை பயன்படுத்த கூடிய கடவு சொல் அனுப்பப்படும், இதனை அதிகபட்சம் 20 நிமிடங்களுக்கு பயன்படுத்த முடியும்.

நோட்டிபிகேஷன்
தனித்தனி போஸ்ட்களுக்கு வரும் நோட்டிபிகேஷன்களை ஆஃப் செய்ய, குறிப்பிட்ட நோட்டிபிகேஷன்களுக்கு க்ளிக் செய்து வலது புறத்தில் தெரியும் 'X' பட்டனை க்ளிக் செய்தால், மீண்டும் உங்களுக்கு நோட்டிபிகேஷன்கள் வராது.

அறிவிப்பு
சிலர் திருமணம் செய்யும் போது ஃபேஸ்புக் போஸ்ட் மூலம் அனைவருக்கும் அறிவித்து விடுவர், சில ஆண்டுகளில் ஏதும் பிரச்சனை ஏற்பட்டு பிரிவை சந்திக்கும் போது நீங்கள் ஸ்டேட்டஸ் மாற்றுவதை யாரும் பார்க்காமல் இருக்க செய்ய முடியும், இதை செய்ய ஃபேமிலி அன்டு ரிலேஷன்ஷிப்ஸ் 'family and relationships' சென்று ஃப்ரென்ட்ஸ் 'friends' அல்லது பப்ளிக் 'public'ஆப்ஷனில் ஒன்லீ மீ 'only me' ஆப்ஷனை க்ளிக் செய்து ஸ்டேட்டசை மாற்றலாம்.

புகைப்படம்
புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் போஸ்ட் செய்யும் போது அவைகளை எடிட் செய்யும் ஆப்ஷன் தற்சமயம் ஐபோன்களுக்கு மட்டும் வழங்கப்பட்டுள்ளதோடு இந்த அம்சம் விரைவில் ஆண்ட்ராய்டு பயனாளிகளுக்கும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பாதுகாப்பு
பல கருவிகளில் ஃபேஸ்புக் அக்கவுன்டு பயன்படுத்தும் போது ஒரு கருவியில் லாக் அவுட் செய்தால் மற்ற கருவிகளில் தானாக லாக் அவுட் ஆகி விடும்.

 tamil.gizbot
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக