அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 16 செப்டம்பர், 2015

என் மகளோடு சேர்த்து என்னையும் தகனம் செய்யுங்கள்: டெல்லி பெண்ணின் கடைசி ஆசை

                                                    Vidhi with husband Pradeep Chadha

டெல்லியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது இரண்டு வயது மகளை கொலை செய்து விட்டு தானும் தூக்கு போக்கு தற்கொலை செய்து கொண்டார். மேற்கு டெல்லியில் உள்ள ரஜௌரி கார்டன் பகுதியில் வசித்து வருபவர் பிரதீப் சதா. அவரின் மனைவி விதி. அவருக்கு பிரசவம் நடக்கையில் ஏற்பட்ட சிக்கலால் அவர்களின் மகள் குர்னீர் உடல்நலக்குறைவோடு பிறந்தார். லட்சக் கணக்கில் செலவு செய்தும் குழந்தையின் உடல்நலம் சரியாகவில்லை.



குர்னீருக்கு 2 வயதாகியுள்ளது. மருத்துவமனையும், மருந்தும், வலியுமாக குர்னீர் வளர்வதை பார்க்க முடியாமல் விதி தவித்தார். தனது குழந்தைக்கு இனியும் உடல் நலம் சரியாகாது என்று நினைத்த விதி அது வாழ்நாள் முழுவதும் வேதனைப்படாமல் இருக்க தீர்வு காண விரும்பினார்.

இதையடுத்து விதி கடந்த திங்கட்கிழமை குழந்தையை கழுத்தை நெறித்துக் கொலை செய்தார். பின்னர் அவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அலுவலக வேலை முடிந்து இரவு 7 மணிக்கு வீட்டிற்கு வந்த பிரதீப் கதவை தட்டியும் அவர் திறக்கவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது மனைவியும், மகளும் இறந்து கிடந்ததை பார்த்து பிரதீப் அதிர்ச்சி அடைந்தார்.

விதி தான் தற்கொலை செய்யும் முன்பு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,

என் குழந்தை படும் அவஸ்தையை பார்க்க முடியாமல் தான் இப்படி செய்கிறேன். எங்களின் முடிவுக்கு யாரும் காரணம் இல்லை. தயவு செய்து என் உடலை என் மகளின் உடலோடு சேர்த்து தகனம் செய்யுங்கள். என் நகைகளை ஏழைகளுக்கு அளித்து விடுங்கள் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக