அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 18 செப்டம்பர், 2015

முகத்தில் வரும் சீழ் நிறைந்த முகப்பருக்களை போக்குவதற்கான சில இயற்கை வழிகள்!!!

பேக்கிங் சோடா: பேக்கிங் சோடா சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெயை நீக்குவதோடு, பருக்களில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து சருமத்துளைகளை இறுக்கிவிடும். அத்தகைய பேக்கிங் சோடாவில் நீர் மற்றும் சிறிது வெள்ளரிக்காய் சாறு சேர்த்து கலந்து, பாதிக்கப்பட்ட இடத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி செய்தால் விரைவில் சீழ் நிறைந்த பருக்கள் நீங்கிவிடும்.



முட்டை வெள்ளைக்கரு: முட்டையின் வெள்ளைக்கருவில் புரோட்டீன் மட்டுமின்றி, ஆன்டி-வைரல் மற்றும் ஆன்டி-பாக்டீரியல் தன்மை இருப்பதால், இவை பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும். மேலும் முட்டையின் வெள்ளைக்கரு சருமத்துளைகளை சுருங்கச் செய்து, பருக்கள் வராமல் தடுக்கும். அதற்கு முட்டையின் வெள்ளைக்கருவுடன் தேன் சேர்த்து கலந்து, முகத்தில் தடவி உலர வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்.

தேங்காய் எண்ணெய்: தேங்காய் எண்ணெயில் உள்ள ஆசிட் மற்றும் ஆன்டி-வைரல், ஆன்டி-பாக்டீரியல் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு தன்மையினால், சீழ் உள்ள பருக்கள் வருவது குறைந்துவிடும். மேலும் இதில் வைட்டமின் ஈ இருப்பதால், தேங்காய் எண்ணெய் கொண்டு பாதிக்கப்பட்ட பகுதியை மசாஜ் செய்வது நல்ல பலனைத் தரும்.

க்ரீன் டீ: க்ரீன் டீயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட், சருமத்தினுள் உள்ள பாதிப்புக்களை சரிசெய்யும். குறிப்பாக அரிப்பு மிக்க பருக்களைப் போக்கும். அதற்கு க்ரீன் டீயை முகத்தில் தடவுவதுடன், தினமும் ஒரு கப் குடித்தும் வாருங்கள்.

மஞ்சள் தூள்: தினமும் முகம் மற்றும் உடல் முழுவதும் மஞ்சள் தேய்த்து குளித்து வந்தால், சீழ் நிறைந்த பருக்கள் வருவதைத் தடுக்கலாம். இதற்கு மஞ்சளில் உள்ள நோயெதிர்ப்பு அழற்சி தன்மை மங்றறும் ஆன்டி-செப்டிக் தன்மை தான் காரணம். வேண்டுமானால், மஞ்சள் தூளை நீரில் கலந்து பேஸ்ட் செய்து, முகத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவ வேண்டும்.

தேன்: தேனில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் தன்மையினால் தான் பல்வேறு ஃபேஸ் பேக் மற்றும் இதர அழகு சாதனப் பொருட்களில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. மேலும் தேன் சருமத்திற்கு நல்ல மாய்ஸ்சுரைசர் போன்றும் செயல்படும். அதுமட்டுமின்றி, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசையையும் தேன் நீக்கிவிடும். எனவே சீழ்மிக்க பருக்களைக் கொண்டவர்கள், தேனை தினமும் சருமத்தில் தடவி சிறிது நேரம் ஊற வைத்து கழுவுங்கள்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக