அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வியாழன், 24 செப்டம்பர், 2015

எக்ஸெல் டிப்ஸ்... பைல்களை ஒழுங்கு படுத்த, பைசாவிற்கும் ரூபாய்க்கும் இடையே புள்ளி

எக்ஸெல் புரோகிராமில், பைல் ஒன்றைத் திறக்க முயற்சிக்கையில், நமக்கு File Open டயலாக் பாக்ஸ் கிடைக்கிறது. இந்த டயலாக் பாக்ஸ், விண்டோஸ் சிஸ்டத்தில், பல செயலிகளுடன் நாம் பயன்படுத்தும் அதே டயலாக் பாக்ஸ் ஆகத்தான் உள்ளது. இருப்பினும், இதில் காட்டப்படும் பைல்களை, நாம் ஏதேனும் ஒரு வகையில் ஒழுங்கு படுத்திப் பெறலாம். அதற்கான வழிமுறைகள் இதோ:


1. எக்ஸெல் புரோகிராமில், file மெனுவில் Open தேர்ந்தெடுக்கவும். அல்லது ஸ்டாண்டர்ட் டூல் பாரில், Open டூலில் கிளிக் செய்திடவும்.

2. இந்த டயலாக் பாக்ஸில், View டூலில் வலது பக்கமாக உள்ள கீழ் விரி அம்புக் குறியில் கிளிக் செய்திடவும். எக்ஸெல் இப்போது கீழாக ஒரு மெனுவினைக் காட்டும்.

3. இந்த மெனுவில் Arrange Icons என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். இங்கு எக்ஸெல், Open டயலாக் பாக்ஸில், பைல்களை எப்படி வகைப்படுத்தலாம் என்பதற்கான சில வழிகளைக் காட்டும்.

4. எந்த வரிசையில் பைல்கள் காட்டப்பட வேண்டும் என்பதனை நீங்கள் முடிவு செய்து, அந்த வழிகளைத் தேர்ந்தெடுக்கலாம். நீங்கள் தேர்ந்தெடுக்கும் வழியின் அடிப்படையில் பைல்கள் உடனே வகைப்படுத்தப்படும்.

5. சில விண்டோஸ் சிஸ்டம் இயக்கத்தில், இந்த Arrange Icons இல்லாமல் இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில், Open டயலாக் பாக்ஸின் பைல்கள் காட்டப்படும் இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். அங்கு கிடைக்கும் Context மெனுவில், இந்த Arrange Icons அல்லது Sort By ஆப்ஷன் கிடைக்கும். அதனைப் பயன்படுத்தி, பைல்களை வகைப்படுத்தலாம்.

6. நீங்கள் வகைப்படுத்தும் நிலைகளை, எக்ஸெல் நினைவில் வைத்துக் கொண்டு, மீண்டும் அதனை நீங்கள் மாற்றாதவரை, அதே வகைகளில் காட்டும்.

பைசாவிற்கும் ரூபாய்க்கும் இடையே புள்ளி:

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் கரன்சியான ரூபாய் எவ்வளவு என்று குறிப்பிடுகையில் சரியாகக் கணக்கிடும் வகையில் பைசாவையும் சேர்த்துக் குறிப்பிடுவோம். ஆனால் ஒவ்வொரு முறையும் ரூபாய்க்கும் பைசாவிற்கு இடையே புள்ளி அமைப்பது சற்று சிரமமாக இருக்கும். இதனை எக்ஸெல் புரோகிராமே அமைக்கும்படி செட் செய்திடலாம். எப்படி என்று பார்ப்போமா!

எடுத்துக் காட்டாக நீங்கள் பண மதிப்பைக் குறிப்பிடுகையில் ரூபாய் பைசா இணைந்த எண்ணை புள்ளி இடாமல் முதலில் அமைக்கவும். எடுத்துக் காட்டாக 11245, 2345, 5693, 236798 என அமைப்பதாக வைத்துக் கொள்வோம். நீங்கள் கீழ்க்காணும் முறையில் அமைத்துவிட்டால் இந்த எண்கள் 112.45, 23.45, 56.93, 2367.98 என அமைக்கப்படும். நீங்கள் செட் செய்திட வேண்டிய முறை:

 “Tools” மெனு கிளிக் செய்து அதில் “Options” பிரிவைத் தேர்ந்தெடுக்கவும்.

இனி கிடைக்கும் “Options” என்னும் பல டேப்கள் அடங்கிய விண்டோவில் “Edit” என்னும் டேபில் கிளிக் செய்திடவும். இதில் “Fixed decimal” என்னும் பிரிவில் செக் செய்திடவும்.

இப்போது “Places” என்னும் இடத்தின் முன்னால் “2” என அமைத்திடவும். பின் ஓகே கிளிக் செய்து விண்டோவை மூடவும்.

இனி நீங்கள் அமைத்திடும் எண்களின் இறுதி இரண்டு இலக்கங்களுக்கு முன்னால் புள்ளி தானே அமைக்கப்படும்.

இந்த செயல்பாடு தேவையில்லை என்றால் “Fixed decimal” என்னும் பிரிவின் முன் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக