பாடல்களை, எம்பி3 வடிவிலோ அல்லது வீடியோ பைல்களாகவோ தேர்ந்தெடுத்துப் பதிவது தற்போது அனைவரும் மேற்கொள்ளும் பழக்கமாக உள்ளது. பல இணைய நிறுவனங்கள், இந்தப் பாடல் கோப்புகளைப் பதிந்து வைத்திட, இலவசமாகவும், கட்டணம் பெற்றுக் கொண்டும், தங்கள் சர்வர்களில் இடம் தந்து வருகின்றன. இதன் மூலம், நாம் உலகின் எந்த மூலையில் இருந்தாலும், இவ்வாறு சேமித்து வைத்த பாடல் கோப்புகளைப் பெற்று இயக்க முடியும். அத்தகைய தளங்களையும், அவற்றின் இலவச மற்றும் கட்டண திட்டங்கள் சிலவற்றையும் இங்கு காணலாம்.
1. கூகுள் பிளே மியூசிக் (Google Play Music):
தொடக்கத்தில் இது Google Music எனப் பெயர் பெற்றிருந்தது. இது முற்றிலும் இலவசம். ஆனால், அதிகபட்சமாக 50,000 பாடல்களைப் பதிவு செய்திடலாம். எங்கிருந்தும், எந்த சாதனம் வழியாகவும் பெற்று இயக்கி ரசிக்கலாம். இதனைப் பெற https://play.google.com/music/listen?u=0#/manager என்ற தளத்தில் கூகுள் தரும் இலவச அப்ளிகேஷனைத் தரவிறக்கம் செய்து, உங்கள் கம்ப்யூட்டரில், மொபைல் போனில் இன்ஸ்டால் செய்திடவும். அதில் உங்கள் கூகுள் அக்கவுண்ட் மூலம் உள்ளே செல்லலாம். நீங்கள் மியூசிக் பைல்களை வைத்துள்ள போல்டர்களை அதற்குக் காட்டவும். உடனே, கூகுள் பிளே மியூசிக், அந்த பைல்களைத் தன் தளத்தில் பதிந்து வைத்துக் கொள்ளும். உங்கள் மியூசிக் போல்டரிலேயே இந்த அப்ளிகேஷன் அமர்ந்து கொண்டு, நீங்கள் கம்ப்யூட்டரில் பதியும் பாடல்களைத் தன் பக்கத்தில், உங்கள் அக்கவுண்ட்டில் பதிந்து கொள்ளும். நீங்களும், இணைய தளங்களிலிருந்து, மியூசிக் பைல்களை நேரடியாக உங்கள் அக்கவுண்ட்டில் பதிந்துவைக்கலாம். பின்னர், இவற்றை உங்கள் சாதனத்திற்கு மாற்றிக் கொள்ளலாம்.
இதில் 50,000 பாடல்கள் வரை இலவசமாகப் பதிந்து வைத்துக் கொள்ளலாம். அதற்கும் மேலாகக் கட்டணம் செலுத்தியும் இதில் இடம் பெற இயலாது. ஆனால், கூகுள் இன்னொரு தனிப்பட்ட சேவையைத் தருகிறது. அது “Google Play Music All Access” என அழைக்கப்படுகிறது. இதில் பல லட்சக்கணக்கான பாடல்களைப் பதிந்து வைத்து, எங்கும் அணுகிப் பெறலாம். இதற்கான மாதக் கட்டணம் 9.99 டாலர்.
2. அமேஸான் மியூசிக் (Amazon Music):
இந்த சேவையும் கூகுள் பிளே மியூசிக் போலவே செயல்படுத்தப்படுகிறது. Amazon Music Importer என்ற அப்ளிகேஷன் மூலம், நம் கம்ப்யூட்டரிலிருந்து அமேஸான் மியூசிக் அக்கவுண்ட்டிற்கு பாடல் கோப்புகளை அப்லோட் செய்திடலாம். இதன் தளத்தில் “Upload Your Music” என்பதை இயக்கி பைல்களை அப்லோட் செய்திடலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட அலைக்கற்றை அளவில், எந்த அளவிற்கு ஏற்றுக் கொள்ள முடியுமோ, அந்த அளவிற்கு அட்ஜஸ்ட் செய்யப்பட்டு பைல்கள் பதிந்து வைத்துக் கொள்ளப்படும். பின்னர், கம்ப்யூட்டர் மற்றும் ஆண்ட்ராய்ட், ஐபோன் மற்றும் ஐபேட் மூலமாகவும் பாடல்களை இயக்கிக் கேட்கலாம். ஆனால், கூகுள் அளவுக்கு அமேஸான் தளம் தாராள மனப்பான்மை கொண்டதல்ல. இதில் 250 பாடல்களை மட்டுமே பதிந்து வைக்க முடியும். ஆனால், அமேஸான் தளத்தில் நீங்கள் எம்பி3 பாடல்களைக் கட்டணம் செலுத்தி வாங்கினால், அவை இதே இடத்திலும் பதிந்து வைக்கப்படும். அந்த பாடல்கள், 250 பாடல் எண்ணிக்கை வரையறையில் சேராது. இவையும் சேர்த்து, பாடல்களின் எண்ணிக்கை 50,000 ஐத் தாண்டுகையில், ஆண்டுக்கு 25 டாலர் செலுத்தி, 2,50,000 பாடல்களைச் சேமித்து வைக்க அமேஸான் இடம் தருகிறது. இவ்வளவு குறைந்த கட்டணத்தில் கூகுள் அனுமதிப்பதில்லை என்பதனையும் இங்கே கருத்தில் கொள்ள வேண்டும்.
3. ஐ ட்யூன்ஸ் மேட்ச் மற்றும் ஆப்பிள் மியூசிக் (iTunes Match and Apple Music):
ஐ ட்யூன்ஸ் பிரிவில் பதியப்பட்டதாக, iTunes Match வசதியை ஆப்பிள் நிறுவனம் தருகிறது. இந்த டூல், உங்கள் ஐ ட்யூன்ஸ் லைப்ரேரியை ஸ்கேன் செய்து, ஆப்பிள் ஏற்கனவே கொண்டுள்ள பாடல்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து, அவற்றை உங்களுக்குத் தருகிறது. ஐ ட்யூன்ஸ் பயன்படுத்த ஆண்டுக்கு 25 டாலர்கள் கட்டணம் செலுத்த வேண்டும். இலவசம் எல்லாம் ஆப்பிள் நிறுவனத்திடம் கிடையாது. இன்னொரு வகை வசதியும் உள்ளது.
அது Apple Music. இந்த தளத்தில் iCloud Music Library இணைக்கப்பட்டுள்ளது. மாதந்தோறும் 10 டாலர் செலுத்தி இதனைப் பயன்படுத்தலாம். தொழில் நுட்ப ரீதியில் பார்த்தால், ஐட்யூன்ஸ் மேட்ச் மற்றும் ஆப்பிள் மியூசிக் தனித்தனியாக இயங்குபவை ஆகும். இரண்டுக்குமான அனைத்து வகை வேறுபாடும் தெரிய வேண்டும் என்றால் https://support.apple.com/en-gb/HT204962 என்ற இணைய தளம் செல்லவும். ஐ ட்யூன்ஸ் மேட்ச் இதனை எழுதும் வரை, 25,000 பாடல்களைப் பதிய தன் தளத்தில் அனுமதித்தது. ஆனால், அந்த எண்ணிக்கையை ஒரு
லட்சமாக உயர்த்த இருப்பதாக ஆப்பிள் அறிவித்துள்ளது. ஆண்டுக்கு 25 டாலர் கட்டணத்தில், ஒரு லட்சம் பாடல்கள் என வரையறை இருக்கும்.
4. மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ் மற்றும் குரூவ் மியூசிக் (Microsoft OneDrive and Groove Music):
இப்போது மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவ் தளத்தில் நாம் பாடல்களைப் பதிந்து பாதுகாத்துப் பயன்படுத்தலாம். மைக்ரோசாப்ட் குரூவ் மியூசிக் அப்ளிகேஷன் மூலம், பதிந்த பாடல்களைக் கேட்கலாம். நீங்கள் சேவ் செய்திட எண்ணும் பாடல்களின் எண்ணிக்கைச் சற்றுக் குறைவான எண்ணிக்கையில் இருந்தால், இந்த வசதியைப் பயன்படுத்தலாம். மேலும், சேவ் செய்திடும் பாடல்களை, ஒன் ட்ரைவ் வழியாக பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது லேப்டாப் கம்ப்யூட்டருடன் ஒருங்கிணைக்கலாம். குரூவ் மியூசிக் அப்ளிகேஷனை, விண்டோஸ் 10, ஐபோன், ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபேட் செயலிகளில் பயன்படுத்தலாம்.
மைக்ரோசாப்ட் ஒன் ட்ரைவில் 15 ஜி.பி.என்ற அளவில் இலவசமாக நம் டேட்டா பைல்களை சேவ் செய்திட அனுமதிக்கிறது. பாடல்களைப் பதிகையில், அவற்றிற்கான இடமும் இந்த கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். மாதந்தோறும் 7 டாலர் கட்டணமாகச் செலுத்தி, ஆபீஸ் 365 பயன்படுத்துபவர்களுக்கு ஒன் ட்ரைவ் இடம், இட வரையறையின்றி வழங்கப்படுகிறது.
உங்கள் பாடல்களின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பின், நீங்கள் ட்ராப் பாக்ஸ் அல்லது கூகுள் ட்ரைவில் அவற்றை சேவ் செய்து, தேவைப்படும்போது பயன்படுத்தலாம். அதிகப்படியான எண்ணிக்கையில் பாடல்கள் இருப்பின், மேலே தரப்பட்டுள்ள வசதிகளைப் பயன்படுத்தலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக