அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

கீழ்த் தாடை வலியும் மாரடைப்பின் அடையாளமே!

மாரடைப்பை சரிசெய்யும் அதிநவீன சிகிச்சைகள்!

“1,70,000,00! அதாவது, ஒரு கோடியே எழுபது லட்சம்! இது என்ன கணக்கு என்கிறீர்களா? ஆண் டொன்றுக்கு உலகளவில் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை. இதுபோலவே இன்னும் ஒரு கோடியே எழுபது லட்சம் பேர் ஆண்டுதோறும் மாரடைப்புக்கான சாத்தியக் கூறுகளை வளர்த்துக்கொள்கிறார்கள்.


முன்னைய காலங்களில் அறுபது வயதுக்கு மேற்பட் டவர்கள்தான் மாரடைப்பால் உயிரிழந்தனர். இன்று முப்பத்தைந்து வயதுக்குள்ளாகவே மாரடைப்புக்கு ஆளாகிறார்கள்.

பெண்களைப் பொறுத்தவரையில் மாதவிடாய்ச் சக்கரம் இயங்கும்போது அவர்களுக்கு இயற்கையா கவே ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப்பெறும். இதனால் மெனோபாஸ் பருவத்தை எட்டிய பெண்களே பெரும்பாலும் மாரடைப்புக்கு ஆளாயினர். இன்றோ மெனோபாஸுக்கு முன்னரே அதாவது ஈஸ்ட்ரோஜென் சுரப் புகள் இயங்கும்போதே மாரடைப்புக்கு ஆளா கிறார்கள். இவ்வாறு உயிரிழப்பவர்களில் ஆசிய நாட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம்” என்று அதிர்ச்சித் தகவல் தருகிறார் டொக்டர் ஏ.மாதவன். இவர், மதுரையில் இயங்கிவரும் வேலம்மாள் மருத்துவ மனையின் இதயவியல் பிரிவு மற்றும் அதற்கான ஆய்வகத்தின் இயக்குநர். ‘வீரகேசரி’க் காக அவரைச் சந்தித்தபோதே அவர் இத்த கவலை அளித்தார். தொடர்ந்து அவரிடம் பேசியபோது...

மாரடைப்பால் உயிரிழந்தவர்களின் குடும்ப வரலாற்றைப் பார்த்தால் இறந்தவரது மிக நெருங்கிய உறவினர் அதாவது சகோதர, சகோதரி முறையில் இரத்த சம்பந்தம் உள்ள எவரேனும் மாரடைப்பால் உயிரிழந்திருப்
பார்கள். அந்த மரபணுத் தாக்கம் இறந்த வரிடமும் இருந்திருக்கும். அல்லது பெரும் பாலும் நீரிழிவு நோயால் மாரடைப்பு உண்டா கியிருக்கும். இந்த இரண்டு காரணங்களுமே இளம் வயதில் மாரடைப்பால் பலரும் உயிரி ழக்கக் காரணமாகின்றன.

இவை எல்லாவற்றுக்கும் அடிப்படை மாறியிருக்கும் இன்றைய வாழ்க்கை முறை தான். முக்கியமாக, ஆங்கில நாட்டு மக்களு டன் ஒப்பிடுகையில் ஆசிய நாட்டவர்கள் குள்ளமான தோற்றத்தைக் கொண்டவர்கள். ஐரோப்பியர்களின் இரத்தக் குழாயின் சுற்றளவைவிட, குள்ளமான தோற்றம் கொண்ட ஆசிய நாட்டவர்களின் இரத்தக் குழாயின் சுற்றளவு குறைவு. இதனால், ஆசிய நாட்டவர்களின் இரத்தக்குழாய் விரைவாகவே கொழுப்பினால் அடைபட்டு விடுகிறது. ஐரோப்பியர்களது இரத்தக்குழாய் அடைபடுவதற்கு அதைவிடச் சற்று நீண்ட காலம் ஆகிறது. மேலும் ஆசிய நாட்டவரே நீரிழிவுக்கு மிக அதிகளவில் முகங்கொடுக்கிறார்கள். இவையனைத்தின் அடிப்படையிலும்தான் ஐரோப்பியர்களைவிட ஆசியர்களே பெருவாரியாக மாரடைப்பினால் உயிரிழக்கிறார்கள்.

இந்த இரு காரணிகளைத் தவிர்த்து உலகப் பொதுவான காரணிகள் சிலவும் இருக்கின்றன. உயர் இரத்த அழுத்தம், புகைபிடித்தல், மிகக் குறைந்த உடல் உழைப்பு, கொழுப்புச்சத்து, மன அழுத்தம், காய்கறி மற்றும் பழங்களை உட்கொள்ளாதது என அந்தப் பட்டியல் நீள்கி றது. ‘ஜங்க்ஃபுட்’ எனப்படும் கொழுப்புச் சத்து நிறைந்த உணவு இன்று நாகரிக உணவாக மாறிவிட்டது. இதை அடிக்கடி உட்கொள்வதால் கொழுப்புச்சத்து இரத்தக் குழாயில் படிந்துவிடுகிறது. அது நேரடியாக மாரடைப்புக்கு இட்டுச் செல்கிறது.

இதுபோலவே ஆட்டிறைச்சியை அதிகம் விரும்பிச் சாப்பிடுவதாலும் கொழுப்புச் சத்து அதிகமாக உடலில் சேர்கிறது. அசைவ உணவுகளில் ஆர்வம் இருப்பவர்கள் ஆட்டி றைச்சியைக் குறைவாக உட்கொள்வது நல்லது. அதற்குப் பதிலாக, கோழியிறைச்சி, மீன் ஆகியவற்றை எண்ணெய்யில் பொரிக்காமல் குழம்பு வைத்துச் சாப்பிடுவது நல்லது.

புகைப்பழக்கம் மற்றும் நீரிழிவு நோய் இரண்டும் இருந்தால் அது பெரும்பாலும் மரணத்தை ஏற்படுத்தக்கூடிய அளவுக்கு அதிக தாக்கம் விளைவிக்கக்கூடியது. உடலை அசைத்துச் செய்யும் வேலைகள் மிகக் குறைந்து

விட்டன. இதனால், இரத்தக்குழாயில் படியும் கொழுப்பு மாரடைப்பை ஏற்படுத்துகிறது.

இன்றைய இளம் தலைமுறையினர், இளம் வயதிலேயே வாழ்க்கையில் சாதித்துவிடவேண்டும் என்ற எண்ணத்தில் அதீத வேலைப்பளுவைத் தயக்கமின்றி ஏற்றுக்கொள்கிறார்கள். அதிலும் வேலைகளைக் குறிப்பிட்ட நேரத்துக்குள் முடிக்க வேண்டும் என்ற பதை பதைப்பு அவர்களிடம் மன அழுத்தத்தை ஏற்படுத்திவிடுகிறது. போதாக்குறைக்கு, அவர்களில் பெரும்பாலானவர்கள் கணினி சார்ந்த வேலையே செய்வதால் உடல் உழைப்பும் அருகிவிடுகிறது. மன அழுத்தமும் உடல் உழைப்பின்மையும் மாரடைப்புக்கு வழி வகுத்துவிடுகிறது.

மாரடைப்பு அபாயம் இருப்பதை முன்கூட்டியே அறிந்து கொள்ள முடியும். ஆனால் யாரும் அதைச் சட்டை செய்வதில்லை.

இன்று முப்பத்தைந்து வயதைத் தாண்டிய வர்கள் பலருக்கும் நெஞ்செரிச்சல் அல்லது அல்சர் இருக்கும். இதை சாதாரணமாக எண்ணி தாமே மருந்துகளை வாங்கிச் சாப்பிட்டு விடுவார்கள்.

ஆனால், அது மாரடைப்புக்கான அறிகுறி என்று அவர்களுக்குத் தெரிவதில்லை. இவ்வா றானவர்கள், தமக்கு சொல்ல முடியாத ஒரு வலி இருந்தால் அதை உடனடியாக மருத்துவரின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும். அதுபோலவே, இடது மார்பில் ஏற்படும் வலியானது இடது கைக்கும் முதுகுக் கும் பரவுகிறது என்று உணர்ந்தால் அது நிச்சயமாக மாரடைப்புக்கான அறிகுறியே என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

இன்னும் சிலர், கீழ்த் தாடை வலிக்கிறது என்று பல் வைத்தியரிடம் போவார்கள். இறுதி யில் அவர்களுக்கு வந்திருப்பது மாரடைப்பு என்று கண்டறிவார்கள்.

நீரிழிவு நோயாளிகள் சிலருக்கு இந்த அறி குறிகளை அடையாளம் காணத் தெரிவதில்லை. அவர்கள் தமது இடது பாகத்தில் ஏதேனும் ஒரு அசாதாரண மாற்றத்தை உணர்ந்தால் அவர் கள் உடனடியாக இதய நோய்களுக்கான நிபு ணரைக் கலந்தாலோசிப்பது அவசியம்.

ஒரு­வ­ருக்கு மார­டைப்பு வந்­து­விட்டால் அவர் மருத்­துவ கண்­கா­ணிப் பின் கீழ் உடனடியாகக் கொண்­டு­வ­ரப்­பட­ வேண்டும். ஒரு வேளை தனித்து இருக்கும் வேளையில் மார­டைப்பு வந்­துவிட் டால், மருத்­து­வ­ம­னைக்கோ, உற­வினர்­க­ளுக்கோ விட­யத்தைத் தெரிவிக் கும் அதே­வேளை, 325 கிராம் கரையக் கூடிய ‘அஸ்­பிரின்’ அல்­லது ‘டிஸ்­பிரின்’ மாத்­தி­ரையை எடுத்துக்கொள்ளலாம்.

அடுத்து உடனடியாகச் செய்யவேண்டியது மருத்துவமனைக்குச் செல்வதே. ஏனெனில், தாமதமாகும் ஒவ்வொரு நொடியும் ‘கோல்டன் ஹவர்’ எனப்படும் உங்களைக் காப்பாற்றிக் கொள்ளக்கூடிய ஒரு மணித்தி யாலத்தின் மணித்துளிகளே!

நீங்கள் மருத்துவமனை சென்றதும் உட னடியாக ஈ.சி.ஜி. பரிசோதனை செய்தபின், ‘த்ராம்போலைசேஷன்’ எனப்படும் சிகிச்சை மேற்கொள்வார்கள். எம்மைப் போன்ற சகல வசதிகளும் கொண்ட மருத்துவமனையாக இருந்தால் உடனடியாக ‘பிரைமரி எஞ்சியோ பிளாஸ்ரி’ சிகிச்சை செய்வார்கள். இதன்மூலம் இதயத் தசைகளைக் காப்பாற்ற முடியும்.

மாரடைப்பு ஏற்பட்ட சிலருக்கு பேஸ்மேக் கர்கள் பொருத்தப்படும். அவ்வாறான சந் தர்ப்பங்களில், அவர்கள் அதீத கதிர்வீச்சு நிறைந்த இடங்களுக்கு அருகாமையில் செல் லக்கூடாது என அறிவுறுத்தப்படுவார்கள். ஏனென்றால், அந்தக் கதிர்வீச்சானது, அவரில் பொருத்தப்பட்டிருக்கும் பேஸ்மேக்கரின் இயக்கத்தைக் குழப்பிவிடக் கூடும். இதனால், செல்போனைக்கூட ஆறு சென்றிமீற்றர் தள்ளி வைத்தே பயன்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஏனைய மருத்துவத் துறைகள் போலவே இதய சிகிச்சைத் துறையிலும் பல மாற்றங்கள், முன்னேற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

முன்னைய காலங்களில் பயன்படுத்தப் பட்ட ‘எக்கோ கார்டியோகிராம்’ எனப்படும் சிகிச்சை தற்போது ‘3டி’ தொழில்நுட்பத்துடன் அறிமுகமாகியிருக்கிறது. அதேபோல், எம்.ஆர்.ஐ. ஸ்கேனரின் துணையுடன் ‘ஹார்ட் மஸ்ல் வயபிலிட்டி’ அதாவது பாதிக்கப்பட்ட தசைகள் உயிரோட்டத்துடன் இருக்கின்றவா என்பதைக் கண்டறியும் வசதி ஏற்பட்டுள்ளது.

‘ஸ்டென்ட்’ என்று சொல்லப்படும் மருந் துகளை நேரடியாக பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்தும் சிகிச்சையும் நவீனமயமாகியிருக் கிறது. முன்பு ஸ்டென்ட் எனப்படும் குச்சி போன்ற பகுதியில் ‘பொலிமரில்’ தயாரிக்கப் பட்ட ஒரு சிறு தளத்தில் மருந்துகள் வைத்து பாதிக்கப்பட்ட பகுதியில் பொருத்தப்படும். மருந்துகளும் பொலிமரும் கரைந்து கரைந்து சிகிச்சையளிக்கும் அதேவேளை, அந்தக் குச்சி போன்ற பொருள் இருந்துகொண்டே இருக்கும். தற்போது ஸ்டென்ட்களுமே கூடக் கரைந்துவிடக் கூடியனவாக வருகின் றன. மேலும், தற்போதைய ஸ்டென்ட் மூலம் மீண்டும் மாரடைப்பு வருவதை பெரும்பா லும் தடுக்குமளவு சிகிச்சையளிக்க முடியும்.

‘இன்ட்ரா வஸ்குலர் அல்ட்ரா சவுண்ட்’ என்ற சிகிச்சை மூலம், பாதிக்கப்பட்ட இரத் தக் குழாயின் அளவை மிகச் சரியாகத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப சிகிச்சைகளை அளிக்க முடிகிறது. முன்னைய காலங்களில் இந்த அளவை அனுமானத்தின் பேரிலேயே பொருத்த வேண்டியிருந்தது.

பேஸ்மேக்கர் பற்றிக் குறிப்பிட்டிருந்தேன். முன்னைய காலங்களில் கதிர்வீச்சு அபா யம் இருந்ததால் பேஸ்மேக்கர் பொருத்தப்பட்ட வர்கள் எந்தச் சந்தர்ப்பத்திலும் எம்.ஆர்.ஐ. ஸ்கேனிங் செய்துகொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டது. தற்போது, அறிமுகப் படுத்தப்பட்டிருக்கும் பேஸ்மேக்கர்கள் எம்.ஆர்.ஐ. ஸ்கேனின் தாக்கத்தால் பாதிப்புறாத வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. இளம் வயதில் பேஸ்மேக்கர்கள் பொருத்த வேண்டிய சந்தர்ப்பங்களில் இந்த நவீன பேஸ்மேக்கரைப் பொருத்திக்கொள்ளலாம். இதன்மூலம், எதிர் காலத்தில் அவர்கள் ஏதேனும் காரணத்துக்காக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து கொள்ள வேண் டிய தேவை ஏற்பட்டால் தயக்கமின்றிச் செய்து கொள்ளலாம்.

இதுபோன்ற பல முன்னேற்றங்கள் இதயவியல் துறையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக் கின்றன. அவற்றைப் பயன்படுத்திக் கொள் வதற்கு சரியான மருத்துவமனையை நாடு வதும் மிக அவசியமே!

டொக்டர் ஏ.மாதவன் MNAMS., DNB(Gen.Med)., DNB(Card)., FESC., FCSI.

தொடர்புகளுக்கு:

0091 -9443726123

0091 9750926123
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக