அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 15 நவம்பர், 2015

நீங்களும் அழைக்கலாம் 1929

"நீங்கள் ஏதே­னு­மொரு வித­மாக பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு இலக்­கா­கு­மி­டத்து அது ஒரு போதும் உங்கள் தவ­றன்று. நீங்கள் தவறு செய்­த­தாக ஒரு போதும் எண்ண வேண்டாம். பாலியல் துஷ்­பி­ர­யோ­க­மா­னது எப்­பொ­ழுதும் வளர்ந்­த­வர்­க­ளினால் அல்­லது பலம் மிக்­க­வர்­க­ளினால் புரி­யப்­ப­டு­கின்ற தவ­றான செய­லாகும். நீங்கள் வருந்­து­வதன் மூலம் குற்ற உணர்ச்­சிக்கு இட­ம­ளிக்­கா­தீர்கள். மேலும் மற்­ற­வர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்த இடமளிக்கவும் வேண்டாம்"

தற்­போது நாட்டில் அதி­க­ரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­கங்­களை கட்­டுப்­ப­டுத்­து­வ­தற்கு பல அணு­கு­மு­றைகள் காணப்­ப­டு­கின்­றன. இருந்­த­போ­திலும் அவை எந்­த­வி­த­மான பிர­தி­ப­லிப்­பையும் காட்­டு­வ­தாக தெரி­ய­வில்லை. ஏதோ ஒரு மூலையில் ஏதோ ஒரு வகையில் சிறு­வர்கள் பாதிக்­கப்­ப­டு­கின்­றார்கள். அவற்­றிலும் சில சம்­ப­வங்­களே வெளிச்­சத்­துக்கு கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றன.



இவ்­வி­டயம் தொடர்பில் கடந்த திங்­கட்­கி­ழமை அர­சாங்க தகவல் திணைக்­களம் மற்றும் சிறுவர் மற்றும் மகளிர் விவ­கார அமைச்சின் ஏற்­பாட்டின் கீழ் கருத்­த­ரங்­கொன்று ஒழுங்கு செய்­யப்­பட்­டி­ருந்­தது. இதன்­போது பல்­வேறு கருத்­துக்கள் பகிர்ந்­து­கொள்­ளப்­பட்­டன.

இன்று பிள்­ளை­களை எவ்­வாறு பாது­காப்­பது என்­பது பெற்றோர் மத்­தியில் எழும் பெரும் கேள்­வி­யாக இருந்து வரு­கின்­றது.

குறிப்­பாக சிறு குழந்­தைகள் தொடக்கம் பதின்­ம­வ­ய­தினர் வரை குழந்­தை­களின் பாது­காப்பை உறுதி செய்­வ­தற்கு பெற்றோர் மிகுந்த விழிப்­பு­ணர்­வுடன் செய­லாற்­று­வது அவ­சி­ய­மா­ன­தொன்­றாக காணப்­ப­டு­கின்­றது.

கள்­ள­மில்­லாத சிறு குழந்­தைகள் அனை­வ­ரு­டனும் ஒரே வகையில் பழக முற்­ப­டு­கின்­றனர். எனினும், அவர்கள் ஒரு சிலரால் துஷ்­பி­ர­யோ­கங்­க­ளுக்கு உட்­ப­டுத்­தப்­ப­டு­வ­துடன், அவர்­க­ளது வாழ்க்கை பாழ­டிக்­கவும் படு­கின்­றது. இதி­லி­ருந்தும் அவர்கள் மீள வேண்­டு­மானால், அனு­ப­வ­சா­லி­க­ளான பெற்­றோரே சரி­யான வழியில் அவர்­களை வழி­ந­டத்த வேண்டும்.

அந்­த­வ­கையில் ஒவ்­வொரு குழந்­தையின் பாது­காப்பும் அவர்­களின் பெற்­றோரின் கரங்­க­ளி­லேயே தங்­கி­யுள்­ளது.

சிறுவர் துஷ்­பி­ர­யோகம் என்றால் என்ன?

எவ­ரேனும் ஒரு நபர் தனது அதி­கா­ரத்தை பயன்­ப­டுத்தி, அச்­சு­றுத்தல் மூல­மாவோ அல்­லது தூண்­டுதல் மூல­மா­கவோ சிறு­வர்­களை ஏதே­னு­மொரு பாலியல் நட­வ­டிக்­கைக்­காக பயன்­ப­டுத்திக் கொள்­வார்­க­ளாயின், அது சிறுவர் பாலியல் துஷ்­பி­ர­யோ­க­மாகும்.

அநே­க­மாக இது வளர்ந்த ஒரு­வ­ரினால் பிள்­ளை­யொன்றின் மர்ம ஸ்தானத்தை தொடு­வ­தாக இருக்­கலாம். அதேபோல் அவ­ரு­டைய உடலின் மர்ம ஸ்தானத்தை தொடச் செய்­வ­தாக இருக்­கலாம்.

இது நேர­டி­யான உடல் தொடு­கை­யாக மட்­டு­மல்­லாது, தொடு­கை­யற்ற வேறு ஏதேனும் நடத்­தை­க­ளா­கவும் இருக்­கலாம். பிள்­ளை­க­ளுக்கு ஆபாச புகைப்­ப­டங்கள் மற்றும் திரைப்­ப­டங்­களை காட்­டு­வ­தா­கவும் அல்­லது பார்ப்­ப­தற்கு தூண்­டு­வ­தா­கவும் இருக்­கலாம்.இதேபோல் குடும்­பத்­தினுள் விரும்­பத்­த­காத வகையில் குடும்ப அங்­கத்­த­வர்­களால் சிறு­வர்கள் மீது புரி­யப்­ப­டு­கின்ற பாலியல் நட­வ­டிக்­கை­களும் இதனுள் உள்­ள­டங்கும்.

அநே­க­மாக இவ்­வா­றான பாலியல் நட­வ­டிக்­கைகள் அப்பா, சித்­தப்பா, மாமா, சகோ­தரர் அல்­லது வேறு உற­வி­னர்­க­ளாலும் இடம் பெறலாம். சிறு­வர்கள் நன்கு அறிந்­த­வர்­களால் மட்­டு­மன்றி அவர்கள் அறி­யா­த­வர்­க­ளாலும் இவ்­வா­றான செயல்கள் இடம்­பெ­றலாம். பெண் பிள்­ளைகள் மட்­டு­மன்றி ஆண் பிள்­ளை­களும் இது போன்ற துஷ்­பி­ர­யோகச் செயல்­க­ளுக்கு இலக்­கா­கலாம்.

எனவே, இது தொடர்பில் உங்கள் பிள்­ளை­களை நீங்கள் அறி­வு­றுத்­து­வது
எப்­படி?

துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு ஆளா­கக்­கூ­டிய நான்கு வழி­க­ளையும் இனங்­காட்­டுதல்

1. பாலியல் துஷ்­பி­ர­யோகம்

2. உடல் ரீதி­யான துஷ்­பி­ர­யோகம்

3. உள ரீதி­யான துஷ்­பி­ர­யோகம்

4. கவ­ன­யீ­னத்தால் ஏற்­ப­டு­பவை

* துஷ்­பி­ர­யோகம் என்­பது உடல் தொடுகை மூலமோ, உடல் தொடுகை அல்­லாத வழி­க­ளி­லிலோ நடை­பெறலாம்.

* வயதில் பெரி­யவர் ஒருவர் உங்­க­ளது உடம்பை அநா­வ­சி­ய­மான முறையில் தொடு­வ­தாக இருக்­கலாம். அல்­லது உங்கள் மூலம் தனது உடம்பை தொடச் செய்­வ­தாக இருக்­கலாம். இவை இரண்­டுமே உடல் ரீதி­யான துஷ்­பி­ர­யோ­கத்­திற்குள் அடங்கும்.

* எவ­ரேனும் உங்­க­ளுக்கு ஆபா­ச­மான, கூடாத படங்­களை, காட்­சி­களை, வீடி­யோக்­களை காட்­டு­வ­தற்கு முயற்­சிக்­கக்­கூடும். இப்­ப­டி­யா­னவை உடலை தொடாமல் செய்யும் உள ரீதி­யான துஷ்­பி­ர­யோ­க­மாகும்.

* இப்­படிச் செய்­ப­வர்­களில் நமக்குத் தெரிந்­த­வர்­களும் இருக்­கலாம், தெரி­யா­த­வர்­களும் இருக்­கலாம் என்ற வித்­தி­யா­சங்­களை பிள்­ளை­க­ளுக்கு தெளி­வு­ப­டுத்­துங்கள்.

பெண்­பிள்­ளை­க­ளுக்கு மாத்­தி­ர­மல்ல, ஆண்­பிள்­ளை­களும் இச்­சம்­ப­வங்­களால் பாதிக்­கப்­ப­டலாம்.

நல்­லது எது கெட்­டது எது என வேறு­படுத்திக் காட்­டுதல்

* எவ­ரா­வது நம்மை தொடும் விதத்தில் அவர் நல்ல எண்­ணத்­துடன் அவ்­வாறு செய்­கின்­றாரா? தீய எண்­ணத்­துடன் அவ்­வாறு செய்­கின்­றாரா? என்­பதை உண­ரக்­கூ­டி­ய­தாக இருக்க வேண்டும்.

* நல்ல எண்­ணத்­துடன் தொடு­வ­தென்­பது நமது தாய், தந்­தையர் நம்மை அன்­புடன் தொடு­வதைப் போன்­றது.

* உடலின் சில அங்­கங்­களை வேறொ­ருவர் தொடும் போது அது அசௌ­க­ரி­ய­மாக இருக்­கு­மென்றால், அது தீய எண்­ணத்­து­ட­னான தொடுகை.

* நம்மை நோகச் செய்­வ­தா­கவோ, நாம் விரும்­பாத அங்­கத்தில் எவ­ரேனும் தொடு­கின்றார் என்றால், யாரேனும் தங்கள் உடம்பின் ஓர் அங்­கத்தை தொடு­மாறு நம்மை கட்­டா­யப்­ப­டுத்­தினால், அதுவும் கூடாத செய­லா­கவே கரு­தப்­ப­டு­கின்­றது.

* எவ­ரேனும் ஒருவர் நமது உடலை தொடு­வ­துடன் அதனை யாரி­டமும் கூற­வேண்டாம் என்று கூறினால், அல்­லது தவ­றாக அவ்­வாறு நடந்­து­விட்டு அதனை யாரி­ட­மா­வது கூறும் சந்­தர்ப்­பத்தில் உங்­களை தண்­டிப்­ப­தாக கூறினால் அதுவும் கூடாத செயலே என்­பதை உணரச் செய்­யுங்கள்.

இவ்­வாறு இடம்­பெற்றால் என்ன செய்­யலாம்?

* உங்கள் உடல் உங்­க­ளுக்கு மட்­டுமே உரி­மை­யா­னது என்­பதை கூறுங்கள்.

* நமது உடலை தொடு­வ­தற்கு எவ­ருக்கும் உரிமை இல்லை, அப்­படி செய்தால் வேண்டாம் என்று எதிர்ப்பை காட்­டுங்கள்

* நமக்கு பாது­காப்­பற்ற இட­மென்று தோன்­று­கின்ற இடங்­களில் அல்­லது நம்­முடன் தவ­றாக நடந்­து­கொள்­வார்கள் என்று நினைக்­கின்ற நபர்கள் இருக்­கின்ற இடங்­களில் தனி­யாக இருப்­பதை தவிர்த்துக் கொள்­ளுங்கள்

* பய­மு­றுத்தும் வகை­யிலோ, அசௌ­க­ரி­யத்­திற்கு உள்­ளாக்கும் வகை­யிலோ யாரா­வது நம்மை தொடு­வ­தற்கு முயற்­சிப்­பார்­க­ளாயின், வேண்­டா­மென்று தடுத்து விடுங்கள். எதிர்த்து விடுங்கள். விருப்­ப­மின்­மையை உணர்த்­துங்கள்

* யாரா­வது தவ­றான விதத்தில் தொட்டு­விட்டால் உட­ன­டி­யாக தயக்­க­மின்றி உங்­க­ளுக்கு நம்­பிக்­கை­யான ஒரு­வ­ரிடம் கூறுங்கள். அதனை இர­க­சியம் என நினைத்து வெளியில் கூறாமல் இருந்­து­ வி­ட­வேண்டாம்..

* யாரு­டைய அச்­சு­றுத்­த­லுக்கும் பயப்­ப­டாது துணி­வாக எதிர்­கொள்­ளுங்கள்என சில முக்­கி­ய­மான வழி­காட்­ட­லுக்கு உங்­க­ளது பிள்­ளை­களை பழக்­கப்­ப­டுத்­துங்கள்.

இதுவே பெற்­றோர்­க­ளா­கிய நீங்கள் உங்கள் பிள்­ளை­களை இவ்­வா­றான ஆபத்­துக்­க­ளி­லி­ருந்து பாது­காக்­கக்­கூ­டி­ய­தான வழி­வ­கைகள்.

"ஏதே­னு­மொரு வித­மாக நீங்கள் பாலியல் துஷ்­பி­ர­யோ­கத்­துக்கு இலக்­கா­கு­மி­டத்து அது ஒரு போதும் உங்கள் தவ­றன்று. ஒரு போதும் நீங்கள் தவறு செய்­த­தாக எண்ண வேண்டாம்.

பாலியல் துஷ்­பி­ர­யோ­க­மா­னது எப்­பொ­ழுதும் வளர்ந்­த­வர்­க­ளினால் அல்­லது பலம் மிக்­க­வர்­க­ளினால் புரி­யப்­ப­டு­கின்ற தவ­றான செய­லாகும். நீங்கள் வருந்­து­வதன் மூலம் குற்ற உணர்ச்­சிக்கு இட­ம­ளிக்­கா­தீர்கள்.

மேலும் மற்­ற­வர்கள் உங்கள் மீது குற்றம் சுமத்த இடமளிக்கவும் வேண்டாம்" இவ்வாறான சந்தர்ப்பங்க ளில் உங்களுக்கோ அல்லது உங்களது நண்பருக்கோ ஏதேனும் பிரச்சினை இருப்பின் 1929க்கு தொடர்பு கொள்ளுங் கள்.

18 வய­திற்கு குறைந்த அனை­வ­ருமே சிறு­வர்­க­ளா­கவே கரு­தப்­ப­டு­கின்­றனர். இனம், மதம், மொழி, வயது போன்ற பேதங்­க­ளின்றி, அனை­வரும் இந்த சமு­தா­யத்தில் வாழ்­வ­தற்கு உரிமை பெற்­ற­வர்­களே.

தங்கள் குழந்­தை­க­ளுக்கு மாத்­தி­ர­மன்றி, அனைத்து குழந்­தை­க­ளையும் தங்கள் குழந்­தை­க­ளாக எண்ணி செயற்­ப­டுங்கள். அவற்றை குழந்­தை­க­ளுக்கும் சொல்­லிக்­கொ­டுங்கள்.

சிறந்த எதிர்­கா­லத்தை தங்கள் குழந்­தை­க­ளுக்கு வழங்­கு­வது உங்கள் கைகளில் தரப்­பட்­டுள்­ளது.

சிறு­வர்­களின் பாது­காப்பின் பேரில் இவற்றை செயற்­ப­டுத்த முன்­வ­ர­வேண்டும் என்­பதை இச்­சந்­தர்ப்­பத்தில் நினைவில் கொள்வது அவசியமாகும்.

ரெ.தேவிகா
வீரகேசரி
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக