அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 11 நவம்பர், 2015

ஆதரவற்ற முதியவர் முகத்தில் நீரை ஊற்றிய மெக்டொனால்ட்ஸ் ஊழியர்: தீயாக பரவும் வீடியோ

அமெரிக்காவில் மெக்டொனால்ட்ஸ் உணவக ஊழியர் ஒருவர் ஆதரவற்ற முதியவருக்கு உணவு அளிப்பதாக ஆசை காட்டி அவரது முகத்தில் தண்ணீரை ஊற்றியபோது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் தீயாக பரவியுள்ளது.



அமெரிக்காவின் மிஷிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகர் அருகே இருக்கும் மெக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை செய்த ஊழியர் ஒருவர் டிரைவ் த்ரூ ஜன்னல் வழியாக உணவு விற்பனை செய்துள்ளார். அப்போது அவர் சாலையோரம் நின்ற ஆதரவற்ற முதியவரை அழைத்து சான்ட்விச் வேண்டுமா வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று உணவு பொட்டலத்தை காட்டினார்.

அதை பார்த்து வந்த முதியவர் முகத்தில் ஊழியர் ஒரு கிளாஸ் தண்ணீரை ஊற்றினார். இதையடுத்து அந்த முதியவர், ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறிவிட்டு கொட்டும் மழையில் நனைந்தபடியே நடந்து சென்றார்.

இந்த சம்பவத்தை ட்ரைவ் த்ரூவில் காரில் இருந்தபடி ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். காரில் இருந்தவர் மெக்டொனால்ட்ஸ் ஊழியர் முதியவர் முகத்தில் நீரை ஊற்றியதை பார்த்து சிரிக்கும் சப்தம் வீடியோவில் கேட்கிறது. இந்த வீடியோவை இபாட் ஸ்கீஸ் என்பவர் ஃபேஸ்புக்கில் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே தவறு செய்த மெக்டொனால்ட்ஸ் ஊழியரை நிர்வாகம் பணிநீக்கம் செய்துள்ளது.




Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக