அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 27 நவம்பர், 2015

செந்தூரனின் புகைப்படத்தை தவறாக ஆள்மாறாட்டத்துடன் பிரசுரிக்க வேண்டாம்

உயிர்நீத்த இராஜேஸ்வரன் செந்தூரனின் புகைப்படம் பல்வேறு ஊடகங்கள், சமூக வலைத்தளங்களில் தவறுதலாக ஆள்மாறாட்டத்துடன் பயன்படுத்தப்படுவதாக உறவினர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.



செந்தூரனின் படம் என பெரும்பாலான ஊடகங்களில் வெளியிடப்பட்டுள்ள புகைப்படம் உயிரிழந்த செந்தூரனின் மாமாவின் மகனது (மச்சான்) புகைப்படம் ஆகும்.

செந்தூரனின் முகப்பு புத்தகத்தில் உள்ள படம் ஒன்றினை பயன்படுத்தியதனால் தான் மேற்படி சிக்கல் எழுந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறித்த புகைப்படத்தை யாரும் தவறாக பயன்படுத்த வேண்டாமென உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உண்மையில் செந்தூரனின் புகைப்படம் கீழே தரப்படுகிறது.

Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக