"தமிழுக்கும் அமுதென்று பேர், அந்த தமிழ் இன்ப தமிழ் எங்கள் உயிருக்கு நேர், உயிருக்கு நேர்.." என்ற பாடல் வரிக்கு ஏற்பவும், "செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்ப தேன் வந்து பாயுது காதினிலே.." என்ற பாரதியின் வார்த்தைகளுக்கும் இணையானது தமிழ் மொழியின் சிறப்பு. ஆனால், தமிழ் இப்போது ஆங்கில கலப்புடன் தங்லிஷில் தான் பெரும்பாலும் பேசப்படுகிறது.
தங்லிஷில் பேசுவதால் தமிழ் மெல்ல சாகும் என சிலர் கூறுவார்கள். ஆனால், உண்மையில் ஆங்கிலம் தான் நம்மிடையே மாட்டிக் கொண்டு சின்னாபின்னமாகி வருகிறது. உலக அளவில் ஓர் வார்த்தைக்கு ஒரு பொருள் வைத்து பயன்படுத்தினால். அதே வார்த்தையை தங்லிஷில் முற்றிலும் வேறு அர்த்தத்துடன் பயன்படுத்தும் வழக்கம் நமது சென்னை தமிழ் பாஷையில் இருக்கிறது.
அதில் சில முக்கியமான தங்லிஷ் வார்த்தைகள் மற்றும் முற்றிலும் வேற்பட்ட அதன் பொருள்கள் குறித்து இனிக் காணலாம்....
தங்லிஷில் பேசுவதால் தமிழ் மெல்ல சாகும் என சிலர் கூறுவார்கள். ஆனால், உண்மையில் ஆங்கிலம் தான் நம்மிடையே மாட்டிக் கொண்டு சின்னாபின்னமாகி வருகிறது. உலக அளவில் ஓர் வார்த்தைக்கு ஒரு பொருள் வைத்து பயன்படுத்தினால். அதே வார்த்தையை தங்லிஷில் முற்றிலும் வேறு அர்த்தத்துடன் பயன்படுத்தும் வழக்கம் நமது சென்னை தமிழ் பாஷையில் இருக்கிறது.
அதில் சில முக்கியமான தங்லிஷ் வார்த்தைகள் மற்றும் முற்றிலும் வேற்பட்ட அதன் பொருள்கள் குறித்து இனிக் காணலாம்....
Item
ஆங்கில வார்த்தையில் Item என்பது பொருள் பட்டியலை குறிக்கும் வார்த்தை. ஆனால், தங்லிஷில் இது பலான பெண்களை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.Reel
திரைப்படம் ஒளிப்பதிவு செய்ய பயன்படுத்தும் பொருள் தான் Reel - ரீல். ஆனால் இது நமது தங்லிஷில் பொய் கூறுபவன் என்ற பொருளுடன் பயன்படுத்தப்படுகிறது.
Setup
Setup எனும் வார்த்தை அமைப்பை குறிக்கும் சொல். ஆனால், தங்லிஷில் இது இரண்டாம் தாரம் அல்லது, திருமணம் செய்யாமல் ஓர் பெண்ணுடன் உறவில் இருப்பதை குறிக்கிறது.
Soup
Soup என்பது ஓர் உணவு வகை. ஆனால், காதலில் தோல்வியுற்ற ஆண்களை Soup பாய்ஸ் என்று குறிப்பிடுகிறார்கள்.
Gate
Gate என்பதன் உண்மை பொருள் கதவு. ஆனால், தங்லிஷில் ஒருவரை வழிமறித்து நிற்பதை gate என்று குறிப்பிடுகிறார்கள்.
Blade
Blade என்பது சவரம் செய்ய பயன்படுத்துவது ஆகும். இது தங்லிஷில் மொக்கை போட்டு கழுத்தறுக்கிறான் என்று கூறப்படுகிறது.
Peter
உலகில் எங்கு சென்றாலும் பீட்டர் என்றால், அவன் ஓர் கிறுஸ்துவன் என்பதை தான் குறிக்கும். ஆனால், சென்னையில் மட்டும் அவன் ஆங்கிலம் பேசி சீன் போடுபவன் என்று பொருள் தரும்.
Figure
Figure என்றால் ஓர் வடிவத்தை குறிக்கும் சொல் ஆகும். தங்லிஷில் இது ஓர் அழகான பெண்ணை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.
Mood
Mood என்பது மனநிலையை குறிக்கும் சொல். ஆனால் தங்லிஷில் இது வாயை மூடு என்ற பொருளில் பயன்படுத்தப்படுகிறது.
Sketch
Sketch என்றால் வர்ணம் தீட்டும் பென்சில் ஆகும். இது தங்லிஷில் ஒருவனை கொலை செய்ய தீட்டப்படும் திட்டம் என்ற பொருள் கொண்டு பயன்படுத்தப்படுகிறது.
Bake
ஆங்கிலத்தில் bake என்றால் கேக் போன்ற பேக்கரி உணவு பொருளாகும். ஆனால், தங்லிஷில் இது முட்டாள் என்ற பொருளுடன் பயன்படுத்தப்படுகிறது.
Kick
உதைத்தல் எனும் பொருள் கொண்ட வார்த்தை தான் kick. ஆனால், இது தங்லிஷில் போதை ஏறுகிறது என்ற பொருளுடன் பயன்படுத்தப்படுகிறது.
Matter
அறிவியல் ரீதியாக matter என்பது எடை அல்லது சக்தி கொண்ட ஒரு பொருளை குறிக்கிறது. ஆனால், தங்லிஷில் இது உடலுறவுக் கொள்வதை குறிக்கும் சொல்லாக பயன்படுத்தப்படுகிறது.
Thatstamil
Thatstamil
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக