அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

திங்கள், 29 பிப்ரவரி, 2016

12 வரு­டங்களுக்கு முன்னர் உறை நிலையில் பேணப்­பட்ட கரு­முட்டை மூலம் பிர­ச­வ­மான குழந்தை (படங்கள் இணைப்பு)

சீனாவில் 12 வரு­டங்களுக்கு முன் உறை நி­லையில் பேணப்­பட்ட கரு முட்­டையைப் பயன்­ப­டுத்தி குழந்­தை­யொன்று வெற்­றி­க­ர­மாக பிர­ச­விக்கச் செய்­யப்­பட்­டுள்­ளது.



கடந்த புதன்­கி­ழமை இடம்­பெற்ற இந்த பிர­சவம் குறித்து சர்­வ­தேச ஊட­கங்கள் சனிக்­கி­ழமை செய்­தி­களை வெளி­யிட்­டுள்­ளன.

மேற்­படி குழந்­தை­யா­னது அந்­நாட்டில் அதி நீண்ட காலம் உறை நிலையில் பேணப்பட்டு பிறந்த சோதனைக் குழாய் குழந்தை என்ற பெயரைப் பெறு­கி­றது.

கருப்­பையில் கட்­டிகள் உரு­வாகும் பிரச்­சி­னைக்­குள்­ளான 40 வயது பெண்­ணொ­ரு­வ­ரது கரு­முட்­டைகள் பிற்­கால தேவைக்­காக உறை நிலையில் பேணப்­பட்­டன.

அவர் மேற்­படி கரு­முட்­டை­களைப் பயன்­ப­டுத்தி 2003 ஆம் ஆண்டில் முதல் தட­வை­யாக கர்ப்பம் தரித்தார்.

அதன் பின் 13 வரு­டங்கள் கழித்து அந்­நாட்டின் குடும்­பத்­திற்கு ஒரு குழந்தை கொள்­கையில் மாற்றம் கொண்டு வரப்­பட்­ட­தற்குப் பின்னர் உறை நிலையில் பேணப்­பட்­டி­ருந்த தனது கரு­முட்­டை­களைப் பயன்படுத்தி தற்போது கருத்தரித்து ஆரோக்கியமான ஆண் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக