அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

'வெக்சிங்' (waxing) செய்யும் போது கவ­னிக்க வேண்­டி­யவை

வெக்சிங் என்­பது அழகுக் கலையில் அனை­வ­ருக்கும் தேவைப்­ப­டு­கிற ஒரு அவ­சிய சிகிச்சை. கை, கால்­களில் என உடலின் வெளியே தெரி­கிற பகு­தி­களில் மட்­டு­மின்றி, அக்குள் போன்ற மறை­வி­டங்கள், முகம், தாடை என எந்த இடத்­திலும் உள்ள அதி­கப்­ப­டி­யான, தேவை­யற்ற உரோம வளர்ச்­சியை இதன் மூலம் அகற்­றி­வி­டலாம்.


தேவை­யில்­லாத உரோமங்­களை நீக்­கு­வதில் எத்­த­னையோ வழிகள் இருந்­தாலும் அவற்றில் மிகவும் பாது­காப்­பா­னதும் பக்க விளை­வுகள் இல்­லா­த­து­மான முறை வெக்சிங். வெக்ஸிங் செய்யும் போது கவ­னத்தில் கொள்ள வேண்­டிய விட­யங்கள் பற்­றியும், வீட்­டி­லேயே வெக்ஸ் தயா­ரிக்­கிற முறை பற்­றியும் விளக்­கு­கிறார் அழகுக் கலை நிபுணர் ஷீபா­தேவி.

சரு­மத்தில் உள்ள தேவை­யில்­லாத முடி­களை நான்கு வழி­களில் அகற்­றலாம். இன்னும் புதி­தாக 2G, 3G, strip less wax என புதிய வடி­வங்­களில் waxing வந்­துள்­ளது. இவை­களை உப­யோ­கிப்­ப­தற்கு சில வழி­மு­றைகள் உள்­ளன. இந்த வகை­யான waxing முறை­களை பார்­லரில் தான் செய்து கொள்ள முடியும்.

இதற்­கென பிரத்தி­யே­க­மான தனித்­தனி உப­க­ர­ணங்கள் உள்­ளன. மேலும் உங்கள் சரு­மத்­திற்கு ஏற்­ற­வாறு தேர்வு செய்து உப­யோ­கப்­ப­டுத்த வேண்டும். எனவே, உங்கள் அழ­குக்­கலை நிபு­ணர்­க­ளிடம் கேட்டு செய்து கொள்­ளுங்கள்.
Flavoured waxing-இல் Hydrogenetic vegetable oil, zinc oxide, paraffin wax, mineral oil, base wax, Glycerine Rosynet and Titanium dioxide. இவை அனைத்தும் flavoured wax-இல் சேர்க்­கப்­ப­டு­கின்­றன.

1. திரெடிங்
குறிப்­பிட்ட அளவு கொண்ட நூலின் உத­வியால் புரு­வங்கள், உத­டு­க­ளுக்கு மேல், தாடை போன்ற இடங்­களில் உள்ள தேவை­யில்­லாத முடி­களை மட்டும் நீக்கும் முறையே திரெடிங். கை கால் போன்ற இடங்­களில் இந்த முறையில் அகற்ற முடி­யாது.

2. டெபி­லேஷன்
முடி­களை அகற்றும் பிரத்தி­யேக கிரீம் மூல­மாக செய்­வது. இது சரு­மத்­திற்கு நல்­ல­ தல்ல. இதனை உப­யோ­கித்தால் சருமம் கறுப்­பாக மாறி விடும். சருமப் பிரச்சி­னை­களும் வரலாம். தடிப்பு, அலர்ஜி வரலாம். தவிர முடி வளர்ச்சி முன்­பை­விட அதி­க­ரிக்கும் வாய்ப்­பு­களும் உண்டு.

3. ரேசர் மற்றும் எபி­லேட்டர்
Razor, epilatior போன்ற மெஷின்­களை பயன்­ப­டுத்­தினால் மிரு­து­வான சருமம் கிடைக்­காது. மேலும் வளரும் முடி முன்­பை­விட அடர்த்­தி­யா­கவும், சீக்­கி­ர­மா­கவும் வளரும்.
இந்த முறையில் முகத்தில் வளரும் முடியை அகற்ற முடி­யாது.

4. வெக்சிங்
வெக்ஸ் கல­வையின் மூலம் சரு­மத்­தி­லுள்ள தேவை­யற்ற ரோமங்­களை அகற்றும் முறை இது. இதற்­கான ெவக்ஸ் ரெடி­மே­டாக கடை­க­ளிலும் கிடைக்கும். நாமே வீட்­டிலும் சுல­ப­மாகத் தயா­ரித்து உப­யோ­கிக்­கலாம். தேவை­யற்ற உரோமங்­களை அகற்ற பல வழிகள் இருந்­தாலும், எந்த முறை­யிலும் மொத்த முடி­க­ளையும் அகற்ற முடி­யாது. மிகவும் நேரம் ஆகும். வலியும் கொடுக்கும். மிகவும் சுல­ப­மாக, குறைந்த வலியில் தேவை­யில்­லாத முடி­களை வேர்­களில் இருந்து சுல­ப­மாக எடுக்க ெவக்சிங் முறையே சிறந்­தது.

வெக்சிங் இப்­போது பல­வித வாச­னை­களில் ஃப்ளேவர்­டாக கிடைக்­கி­றது. வெக்ஸ் என்றால் சூடு செய்து தடவி வைத்து இழுக்க வேண்­டுமே என பயந்து போன காலம் இன்­றில்லை. இப்­போது வலியே இல்­லாத பெயின்லெஸ் ெவக்ஸ் கிடைக்­கி­றது. இதற்­கென மெஷின்கள் வந்­துள்­ளன. ஸ்விட்ச் ஓன் செய்­தாலே போதும் ெவக்ஸ் தயா­ராகி விடும். அதை உரோமங்­களை நீக்க வேண்­டிய பகு­தியில் தடவி, ஸ்ட்ரிப் அல்­லது துணி தேவைப்­ப­டாமல், வலி இல்­லாமல் முடி­களை அகற்­றலாம். முகத்­திற்கு என தனி வெக்ஸ் இன்று கிடைக்­கி­றது.

விதம் வித­மான வெக்ஸ்...
1. ஓரஞ்சு வெக்ஸ் - சரு­மத்தின் கரு­மையைப் போக்க
2. தேங்காய் வெக்ஸ் - முது­மையை விரட்ட
3. பிங்க் வெக்ஸ்- சென்­சிட்­டி­வான சரு­மத்­துக்கு
4. லெமன் வெக்ஸ் - பிரவுன் நிறத் திட்­டுகள் மற்றும் சுருக்­கங்கள் நீங்க
5. பாதாம் வெக்ஸ் - வறண்ட சரு­மத்­துக்கு
6. கிரீன் ஆப்பிள் வெக்ஸ் - அலர்­ஜி­யான சரு­மத்­துக்கு
7. வாழைப்­பழ வெக்ஸ் - சரு­மத்தில் சிவப்பு நிறத்­திட்­டு­களைத் தவிர்க்க
8. சாக்லெட் வெக்ஸ் - ஸ்ட்ரெஸ்சை குறைக்க
9. ஹேசல்நெட் வெக்ஸ் - சரு­மத்தின் நிறத்தை கூட்டி, மென்­மை­யாக்க
10. காபி வாக்ஸ் - சருமம்

கறுப்­பா­வதைத் தவிர்க்க
இப்­படி அவ­ரவர் சரு­மத்தின் தன்மை மற்றும் தேவைக்­கேற்ப பொருத்­த­மான ெவக்ஸை தேர்வு செய்­யலாம். இவை தவிர இன்று 2ஜி, 3ஜி வெக்ஸ்­களும், ஸ்ட்ரிப்லெஸ் வெக்ஸ் வகை­களும் விற்­ப­னைக்கு வந்­தி­ருக்­கின்­றன. இவற்றை உப­யோ­கிக்­க­வென பிரத்தி­யேக முறைகள் உள்­ளன. பெரும்­பாலும் இவை பியூட்டி பார்­லர்­க­ளி­லேயே அதிகம் பயன்­ப­டுத்­தப்­ப­டு­கின்­றன. இத்­த­கைய ஃப்ளேவர்ட் வெக்ஸ்­களில் ஹட்­ர­ஜ­னேட்டட் வெஜி­டபுள் ஒயில், ஸிங்க் ஒக்சைட், பாரபின் வெக்ஸ், மினரல் வெக்ஸ், கிளி­சரின், டைட்­டா­னியம் டை ஒக்சைட் போன்ற பல­வித இரசா­ய­னங்­களின் கலவை இருப்­பதால், அழகுக் கலை நிபுணர் அல்­லது சரும மருத்­து­வரின் ஆலோ­ச­னைக்குப் பிறகு பயன்­ப­டுத்­து­வது பாது­காப்­பா­னது.

வீட்­டி­லேயே வெக்ஸ் தயா­ரிப்­பது எப்­படி?
600 கிராம் சர்க்­கரை மற்றும் 250 மி.லி. எலு­மிச்சைச் சாறு இவை இரண்­டையும் கலந்து அடி­க­ன­மான பாத்­தி­ரத்தில் அடுப்பில் வைத்துக் கலக்­கவும். பிறகு அதி­க­மான தணலில் வைத்து 5 நிமி­டங்­க­ளுக்கு சூடு செய்­யவும். பிறகு குறை­வான தனலில் 2 முதல் 3 நிமி­டங்கள் கிளறிக் கொண்டே இருக்­கவும். மெழுகு போன்ற ஒரு பதத்­திற்கு வரும் வரை கிள­றவும். பிறகு அரை கப் தண்ணீர் ஊற்றிப் பார்க்­கவும். இந்த கலவை தண்­ணீரின் அடியில் சென்றால் சரி­யான பதம் வந்து விட்­டது. இல்லை என்றால் அந்த பக்­குவம் வரும் வரை செய்­யவும்.

எந்தப் பகு­தி­களில் உள்ள உரோமங்­களை வெக்சிங் மூலம் அகற்­றலாம்?
கைகள், கால்கள், அக்குள் பகுதி, முதுகு, கழுத்து, வயிறு மற்றும் முகம்.
எப்­படிச் செய்ய வேண்டும்?

முதலில் சரு­மத்தில் முடி­களை நீக்க வேண்­டிய பகு­தியில் டெல்கம் பவுடர் தட­வவும். பிறகு முனை மழுங்­கிய கத்­தியில் ெவக்ஸை எடுத்து சரு­மத்தின் மேல் முடியை நீக்க வேண்­டிய இடத்தில் தட­வவும். முடி எந்த நோக்கில் இருக்­கி­றதோ அதே திசையில் தடவவும். பிறகு அதன் மேல் ெவக்ஸ் ஸ்ட்ரிப் (கடை­களில் ரெடி­மே­டாக கிடைக்­கி­றது) வைத்து ஒரு சீரான முறையில் அழுத்­தவும். பிறகு முடி வளர்ச்­சிக்கு எதிர் திசையில் ஸ்ட்ரிப்பை பிடித்து இழுக்­கவும். இந்த முறையில் முடி­களை அகற்­றி­யதும், தண்­ணீரில் ஒரு­துளி ஆன்­டி­செப்டிக் திரவம் கலந்து ெகாட்டன் அல்­லது ஸ்ெபான்ஜில் நனைத்து சரு­மத்தை சுத்­தப்­ப­டுத்­தவும். பிறகு after waxing lotion அல்லது மசாஜ் கிரீம் கொண்டு மிருதுவாக மசாஜ் செய்யவும்.

உங்கள் கவனத்துக்கு...

1. வெக்சின் சூடு சருமத்துக்கு ஏற்றவாறு இருக்கிறதா என சரிபார்த்துத் தடவவும்.

2. வெட்டுக் காயங்களோ, கட்டிகளோ, புண்களோ இருந்தால் அந்த இடங்களில் வெக்ஸ் செய்ய வேண்டாம்.

3. கூடியவரையில் உபயோகித்துத் தூக்கி எறியக்கூடிய வெக்ஸ் ஸ்ட்ரிப்புகளையே பயன்படுத்தவும். பழைய துணிகளைத் தவிர்ப்பது பாதுகாப்பானது.


Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக