அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

புதன், 27 ஏப்ரல், 2016

எக்ஸெல் டிப்ஸ்... பிரிண்ட் மார்ஜின் புதிதாய் செட் செய்திட - தலைப்பு தொடர்ந்து காட்டப்பட

பிரிண்ட் மார்ஜின் புதிதாய் செட் செய்திட: நீங்கள் முதன் முதலில், எக்ஸெல் புரோகிராமினைத் தொடங்குகையில், காலியாகக் காணப்படும் ஒர்க் ஷீட்டில், சில அம்சங்கள், மாறா நிலையில் ஏற்கனவே அமைக்கப்பட்டிருகக்கும். அவற்றில் நீங்கள் ஒர்க் ஷீட் அச்சடிக்கையில் தேவைப்படும் பக்க மார்ஜின் ஒன்றாகும். நீங்கள் இதனை மாற்றி அமைக்க விரும்பினால், கீழே குறிப்பிட்டுள்ளபடி செயல்பட வேண்டும்.



1. புதிய எக்ஸெல் ஒர்க்புக் ஒன்றினைத் திறக்கவும்.

2. இந்த ஒர்க் புக்கில் உள்ள அனைத்து ஒர்க் ஷீட்களுக்கும், பிரிண்ட் மார்ஜினை மாற்றி அமைக்கவும். இது எப்போதும் நீங்கள் விரும்பும், மாறா நிலை மார்ஜின் ஆக இருக்க வேண்டும்.

3. தொடர்ந்து, நீங்கள் ஒர்க் புக்கில் மேற்கொள்ள விரும்பும் மாற்றங்களையும் மேற்கொள்ளவும். இது ஹெடர் மற்றும் புட்டர் மற்றும் பிற அம்சங்களாகவும் இருக்கலாம்.

4. அனைத்து மாற்றங்களையும் மேற்கொண்ட பிறகு, பைல் மெனுவில் Save As என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் உடனே, Save As டயலாக் பாக்ஸைக் காட்டும்.

5. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக உள்ள, கீழ் விரி மெனுப் பட்டியலைக் கிளிக் செய்து திறக்கவும். இந்த மெனுவில், Excel Template அல்லது Excel Macro-Enabled Template என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் மேக்ரோ பயன்படுத்துவது இல்லை என்றால், முதல் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும்.

6. அடுத்து சேவ் செய்திட வேண்டிய பைலின் பெயரை அமைக்க வேண்டும். இந்த பைல் பெயரை Book.xltx அல்லது Book.xlt என மேக்ரோ பயன்படுத்துவதைப் பொறுத்து அமைக்க வேண்டும்.

7. இந்த புதிய டெம்ப்ளேட் பைலை XLStart போல்டரில் சேவ் செய்திடவும். default template போல்டரில் சேவ் செய்திடக் கூடாது.

8. XLStart போல்டர் எங்குள்ளது என்று தெரியாவிட்டால், தேடல் கட்டத்தில் டைப் செய்து தேடிப் பெறவும். ஏனென்றால், உங்கள் கம்ப்யூட்டரில், எக்ஸெல் எப்படி பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதைப் பொறுத்து, இதன் இடம் மாறும்.

9. உங்கள் கம்ப்யூட்டர் ஏதேனும் நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டு, எக்ஸெல் புரோகிராம் சர்வரிலிருந்து உங்களுக்குக் கிடைப்பதாக இருந்தால், இந்த மாற்றங்களை ஏற்படுத்த உங்களால் முடியாது. உங்கள் நெட்வொர்க் அட்மினிஸ்ட்ரேட்டரிடம் அனுமதி பெற்று, தேவையான மாற்றங்களை மேற்கொள்ள வேண்டும்.

தலைப்பு தொடர்ந்து காட்டப்பட: எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் மேல் உள்ள படுக்கை வரிசைகளில், செல்களுக்கான தலைப்புகளை டைப் செய்து வைத்திருப்போம். பின் அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில், அந்த தலைப்புகள் தெரிவதில்லை என்பதால், எந்த வரிசையில் எந்த டேட்டாவினை டைப் செய்வது என்று சிறிது தடுமாறிப் போவோம்.

இதற்காக அடுத்தடுத்த பக்கங்களுக்குச் செல்கையில் இந்த தலைப்புகளை மட்டும் தெரியும் படி உறைய வைத்தால் என்ன என்று தோன்றுகிறதா? அதாவது படுக்கை வரிசை 30, 40 எனச் சென்றாலும், அந்த பக்கங்களின் மேலாக, இந்த தலைப்புகள் நமக்குத் தெரிந்தபடி இருக்க வேண்டும் என்பதுதானே உங்கள் விருப்பம். உங்கள் விருப்பப்படியே, தலைப்பு உள்ள வரிசைகளை அப்படியே உறைந்து போய் நிற்க வைக்கலாம். அதனை எப்படி மேற்கொள்வது என்று பார்ப்போம்.

எடுத்துக் காட்டாக, முதல் மூன்று படுக்கை வரிசைகளில் நிறுவனப் பெயர் மற்றும் நெட்டு வரிசைகளில் அமைப்பதற்கான டேட்டாவினை விளக்கும் வகையில் தலைப்புகளை அமைத்திருக்கிறீர்கள். இந்த மூன்று படுக்கை வரிசைகளும் அனைத்து பக்கங்களிலும் தெரிய வேண்டும்.

எனவே A4 செல்லைத் தேர்ந்தெடுக்கவும்.

தேர்ந்தெடுத்த பின்னர், மேலே உள்ள மெனு பாரில், Window என்பதில் கிளிக் செய்திடுங்கள்.

கீழாக Freeze Panes என்று ஒரு பிரிவு இருக்கும். இதனைத் தேர்ந்தெடுங்கள்.

இப்போது மூன்றாவது படுக்கை வரிசைக்கும், நான்காவது படுக்கை வரிசைக்கும் இடையே, பட்டையாக ஒரு கோடு இருக்கும்.

இனி நீங்கள் 60, 70 என எந்த படுக்கை வரிசைக்குச் சென்றாலும், முதல் மூன்று படுக்கை வரிசைகள் அப்படியே மேலாக உறைந்து நிற்கும். ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

நீங்கள் இதற்கெனத் தேர்ந்தெடுக்கும் செல் அ வரிசையில் தான் இருக்க வேண்டும்.

சரி, வேலை முடிந்த பின், இந்த உறைந்த செல்களை மறுபடியும் வழக்கமான நிலையில் வைக்க வேண்டுமே.
என்ன செய்யலாம்?

மீண்டும் Window மெனுவினைத் தேர்ந்தெடுத்தால் அங்கு Unfreeze Panes என்று ஒரு பிரிவு Freeze Panes இருந்த இடத்தில் இருக்கும்.

இதில் கிளிக் செய்தால், உடனே உறையச் செய்த வரிசைகள் அதன் தன்மையிலிருந்து விலகும்.

குறுக்காக இருந்த பட்டையான கோடு மறைந்துவிடும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக