அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

ஞாயிறு, 24 ஏப்ரல், 2016

ரொரன்ரோவில் பாலியல் துஷ்பிரயோகம் தமிழர் கைது!

ரொரன்ரோவில் இரு வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்டதாக கைதுசெய்யப்பட்டவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.



கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட, ரொரன்ரோவை சேர்ந்த 21 வயதான துசாந் அரியநாயகம், 17 வயது மற்றும் 42 வயது பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் நடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்டார்.

முதலாவது சம்பவம் மார்ச் மாதம் 18 ஆம் நாள் காலை 10 மணியளவில் எக்லிங்டன் அவனியூ கிழக்கு மற்றும் கிங்சன் வீதியில் உள்ள தொடருந்துக் கட்டிடத்தில் இடம்பெற்றுள்ளது.

பின்னர் இரண்டாவது சம்பவம் ஏப்பிரல் மாதம் 18 ஆம் நாள் இரவு 10.15 மணியவில் இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இதையடுத்து, கைதுசெய்யப்பட்ட இவர் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தபடவுள்ளார்.

இவரினால் மேலும் யாரேனும் பாதிக்கப்பட்டிருப்பின் தம்மைத் தொடர்புகொள்ளுமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக