அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

அவல் லட்டு - தேங்காய் லட்டு -கடலைப் பருப்பு போளி

அவல் லட்டு

தேவையான பொருட்கள்

அவல் - 500g
சீனி - 500g
முந்திரி -100g
ஏலக்காய் -25g
நெய் - 250ml



செய்முறை

அவலை நன்றாக வறுத்து தூளாக்கவும்.

சீனியையும் மிக்ஸ்சியில் இட்டு பொடியாக்கவும்.

பொடியாக்கிய அவல், சீனி நன்றாக கலக்கவும்.

அடுப்பில் சட்டியை வைத்து நெய் விட்டு முந்திரிப்பருப்பை வறுத்து அக்கலவையில் கலக்கவும்.

ஏலக்காயை வறுத்து பொடியாக்கி கலக்கவும்.

நெய்யை சூடாக ஊற்றி கலந்து உருண்டைகளாக பிடிக்கவும்.

அவல் லட்டு ரெடி

XXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXXX

தேங்காய் லட்டு

தேவையான பொருட்கள்

தேங்காய் துருவல் - 2 கப்
பால் - 2 கப்
சீனி - 1 கப்
ஏலக்காய்த்தூள் - 1 தேக்கரண்டி
பதாம் பருப்பு - 10
பட்டர் - 2 தேக்கரண்டி

செய்முறை

முதலில் ஒரு அகன்ற பாத்திரத்தில் பாலை ஊற்றி நன்கு கொதிக்க வைக்கவும்.

கொதித்ததும் அதில் துருவிய தேங்காய் துருவல் சேர்த்து நன்கு கிளறி 10 - 15
நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

பின்னர் சீனி சேர்த்து , சீனி கரையும்வரை கிளறி ஏலக்காய்த்தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.

மிதமான சூட்டில் இருக்கும் போது கையில் பட்டரை தடவி லடடுகளாக பிடித்து அதன்மீது பதாம் பருப்பை வைக்கவும்.

சுவையான தேங்காய் லட்டு ரெடி
xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

கடலைப் பருப்பு போளி

தேவையான பொருட்கள்

கடலைப்பருப்பு - 250g
சீனி - 200g
தேங்காய் துருவல் - 1/2 கப்
கோதுமைமா - 250g
ஏலக்காய்த்தூள் - 2தேக்கரண்டி
உப்பு, மஞ்சள்தூள் ,நெய் - தேவையான அளவு.

செய்முறை

கடலைப்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்.

கோதுமைமாவை உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கெட்டியாக பிசைந்து ஒரு டீஸ்பூன் நெய் தடவி மூடி அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஊறிய கடலைப்பருப்பு அவிந்ததும் நீரை வடிய வைத்து ஆற விடவும் .

ஆறியதும், அதனுடன் தேங்காய் துருவல் சேர்த்து இறுக்கமாக அரைத்துக் கொள்ளவும்.

சீனியை சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதித்ததும் அதில் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு கலவை, ஏலக்காய்த்தூளை சேர்த்து கிளறவும்.

இறுகி வரும் பக்குவத்தில் சிறிது நெய் விட்டு, நன்றாக கிளறி இறக்கவும்.

கோதுமைமாவை ரொட்டி போல் செய்து கடலைப்பருப்பு கலவையை வைத்து மூடி, தோசைக்கல்லில் போட்டு இருபுறமும் நெய் விட்டு சுட்டெடுக்கவும்.
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக