அனைத்து தலைப்புகளும் ஒரே பார்வையில்

வெள்ளி, 27 மே, 2016

பங்களாதேஷில் 20 இறாத்தல் நிறையுடைய இராட்சத தலையுடன் வாழும் பாலகன் (படங்கள் இணைப்பு)

 Two-year-old Emon, from southern Bangladesh, has a head that weighs 20 lbs (9kg) - the same weight as an average one-year-old boy

தென் பங்­க­ளா­தேஷில் 20 இறாத்தல் நிறை­யு­டைய இராட்­சத தலை­யுடன் பாலகன் ஒருவன் வாழ்­வது தொடர்­பான தகவல் சர்­வ­தேச ஊட­கங்­களில் வியா­ழக்­கி­ழமை வெளியி­டப்­பட்­டுள்­ளன.


 Emon suffers from hydrocephalus - a build up of fluid inside the skull. The condition leaves him with a huge head and unable to talk, walk or even move his limbs - meaning his parents have to take care of him constantly

எமொன் என அழைக்­கப்­படும் மேற்­படி 2 வயது பால­கனின் தலையின் நிறை ஒரு வயதுக் குழந்­தை­யொன்றின் சரா­சரி நிறையை ஒத்­த­தாகும். அந்தப் பாலகன் பிறந்த போது அதன் தலை சாதா­ரண குழந்­தை­களை விடவும் சிறிது பெரி­தாக மட்­டுமே இருந்­த­தா­கவும் ஆனால் கடந்த 2 வருட காலத்தில் அத­னது தலை படிப்­ப­டி­யாக பெரி­தாகி இராட்­சத உருவை அடைந்­துள்­ள­தா­கவும் கூறப்­ப­டு­கி­றது.

மூளை தண்­டு­வட திரவம் மண்­டை­யோட்டில் சேர்­வதால் ஏற்­படும் ஹைரோ­செ­பலஸ் என்ற பாதிப்பு அவ­னுக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

வழ­மை­யாக மூளை­யையும் முள்­ளந்­தண்­டையும் சூழ்ந்து காணப்­படும் திரவம் அந்த உறுப்­பு­க­ளுக்கு மெத்­தை­யாக செயற்­பட்டு பாது­காப்பு அளிப்­ப­துடன் அந்த உறுப்­பு­க­ளுக்­கான போஷ­ணை­களை வழங்­குதல் மற்றும் கழி­வ­கற்றல் செயற்கி­ர­மங்­க­ளுக்கும் உறு­து­ணை­யாக இருந்து வரு­கி­றது.
Doctors have told Emon's parents if he is taken abroad for foreign treatment, medics could help him. But they say they are too poor to go to another country, so their son's future is 'hopeless'

மூளை­யானது தின­சரி சுமார் ஒரு பைந்து புதிய தண்­டு­வட திர­வத்தை தொடர்ச்­சி­யாக உற்­பத்தி செய்­கி­றது. அதே­ச­மயம் மூளையால் வெளி­யி­டப்­பட்ட பழைய திரவம் குருதிக் கலங்­களால் துரி­த­மாக அகத்­து­றிஞ்­சப்­ப­டு­கின்­றன. குருதிக் கலங்­களால் அந்தத் திரவம் அகத்­து­றிஞ்­சப்­ப­டு­வதில் இடை­யூறு ஏற்­படும் போது மூளை தண்டு வட திரவம் அதி­க­மாகச் சேர்ந்து மூளை மீது அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்கும். அத்­த­கைய பாதிப்பே எமொ­னுக்கு ஏற்­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இந்தப் பாதிப்புக் கார­ண­மாக எமொனால் பேசவோ நடக்­கவோ அல்­லது அவ­ய­வங்­களை அசைக்­கவோ முடி­யா­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

இதற்கு முன் இந்­தி­யாவில் இத்­த­கைய பாதிப்­புக்­குள்­ளான ரோனா பேகம் என்ற பால­கிக்கு ஒரு தொகை அறுவைச் சிகிச்­சை­களின் மூலம் அவரது தலையின் அளவு கணிசமாக குறைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் தமக்கு இந்திய புது டில்லி சென்று அத்தகைய சிகிச்சையை பெற போதிய வசதியில்லை என எமொனின் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
 Before he was diagnosed with hydrocephalus, Emon's parents took him to nearby villages to see different doctors and paid for spiritual treatments, but nothing worked out and his head kept expanding
 MailOnline reported on the story of Roona Begum - who was given just months to live before she had even reached her second birthday after her head swelled to three times its normal size
After a series of operations at a hospital in New Delhi, the excess fluid was drained from Roona' head and her skull was dramatically reduced in size to 58 cm. She is pictured after the last operation
 Hydrocephalus is a build-up of fluid in the brain - which leads to increased pressure which can cause damage to the tissue. Emon, who has hydrocephalus, is pictured with his father

image source: dailymail
Share |

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக